
தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர,

தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், அது எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு சாதகமாக மக்களிடம் எந்த அளவுக்கு இவரைப் பற்றி தரக் குறைவாக மற்றும் பெயரை டேமேஜ் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இன்று வரை பழனி திருக்கோயிலில் நடந்த கோயில் நில பத்திர பதிவு மோசடி, யார் அதை செய்தது ?என்பது குறித்து தெளிவாக மக்களிடம் ஊடகங்கள் பேசவில்லை. தவிர, ஒரு பொருளை கூட்டத்தில் திருடிவிட்டு, திருடிய திருடனே ,திருடன் அதோ ஓடுறான், அதே ஓடுகிறான், என்று சொல்வதைப் போல இருக்கிறது திமுகவினர் செயல்பாடுகள்.
மேலும்,மக்களுக்கு இந்த ஊடகங்கள் உண்மையை சொல்லாமல் குழப்பத்தை தான் மக்களிடம் விதைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் முட்டுக் கொடுக்க இப்படிப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,இருப்பது நாட்டு மக்களுக்கு தேவை தானா என்பதை சிந்திக்க வேண்டும்?
மேலும்,அந்த பத்திரப்பதிவு செய்த குற்றவாளிகள் ஒருபுறம், மற்றொருபுறம் அரசின் பதிவுத்துறை அலுவலர் செய்ததுதான் ,இதில் முக்கிய தவறு. ஏனென்றால், ஒரு கோயில் சொத்தை, அதுவும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, இரண்டு கோடிக்கு பத்திரப்பதிவு செய்கிறார்கள் என்றால், இதைப் பற்றி ஒரு அரசு அதிகாரியாக தன் கடமையை அவர் செய்யவில்லை. இவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டார் போல தான் ,அந்த செயலை பார்க்க முடிகிறது.

இதற்கு எந்த அமைச்சரும், இப்படி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு போட மாட்டார்கள். ஆனால் ,எத்தனையோ youtuber கள், இது முதல்வரின் ரகசிய உத்தரவு இல்லாமல் நடந்திருக்குமா? என்று கேள்வி கூட எழுப்புகிறார்கள்?
மேலும்,இவர்களுக்கெல்லாம் இன்னும் நிறைய இருக்கிறது. ஏனென்றால், பத்திரிக்கை பிம்பத்தில் ,இப்படிப்பட்ட போலிகள் இருப்பதால், உண்மையான பத்திரிகைகளுக்கு, அது ஒரு போட்டியாகவும் ,சவால்களாகவும் இருந்து வருகிறது.

ஏனென்றால், போட்டி ஓட்டப்பந்தயத்தில் ஓட முடியாத ஒருவன், நானும் ஓடுகிறேன் என்று போட்டி களத்தில் இருப்பது போல, இந்த போலிகள் !பத்திரிக்கை துறையில் இருந்தது வருகிறது. அதுமட்டுமல்ல, பத்திரிக்கை என்றால் பொய் செய்திகளை, மக்களிடம் பரப்புவது பத்திரிகையின் வேலை அல்ல, அது தவறான நோக்கம்.
மேலும், பத்திரிகைகள் எந்த நோக்கத்திற்கானது என்று கூட தெரியாமல், நானும் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. இப்படிப் பட்டவர்கள் தமிழ்நாட்டில் கூலிக்கு வேலை செய்யும் கூட்டம் போல தான் இருக்கிறார்கள். தவிர சமூக அக்கறை இல்லாமல் இதில் பணியாற்ற முடியாது.

மேலும், இதைதான் செய்தித் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை வலியுறுத்தி வருகிறது . இது தவிர, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு, எந்த விதத்திலாவது அதை கவிழ்க்க சூழ்ச்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இதில் முதல்வர் ஜோசப் விஜய் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும்,ஆரம்பத்திலிருந்து மக்கள் அதிகாரம் திமுக ஆட்சியில் இருக்கும் போது சொன்ன, அதே ஆலோசனை இப்போதும் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்க்கு தெரிவிக்கின்ற கருத்து ,காங்கிரஸ் பக்கம் நீங்கள் கூட்டணி வைத்தால், நிச்சயம் அது பிஜேபிக்கு எதிரான ஒரு அரசியல் என்பதை நிச்சயம் தங்களுக்கு அது புரிந்திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல ,காங்கிரஸ் எந்த காலத்திலும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது. மேலும்,தமிழ்நாட்டில் தான் இந்த காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் தெரியாத மக்கள், வாக்களித்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மதச்சார்பின்மை என்ற ஒரு போலியான அரசியலை மையப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போலி மதச்சார்பின்மை, வட மாநிலங்களில் ஏன்?அது எடுபடவில்லை.
மேலும், இதுவே ஒரு கிறிஸ்தவனையோ அல்லது ஒரு முஸ்லிமையோ மதச்சார்பற்றவன் என்று அவர்களிடம் பேச முடியுமா? அல்லது அதை நிரூபிக்க முடியுமா? இந்துக்களை மதச்சார்பின்மை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்களும் தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று அரசியல் கட்சியினர் நினைத்தால் ,அவர்கள் தான் ஏமாந்து போவார்கள். மேலும்,

அதனால், இப்போதும் முதல்வர் ஜோசப் விஜய் அந்த நிலைப்பாட்டில், நீங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள் .அதில் நிச்சயம் மாற வேண்டும். மேலும், மதம் என்பது ஒருவனுக்கு சாதகமாகவும், இன்னொருவனுக்கு அது பாதகம் ஆகவும் இருக்கக் கூடாது.
அவரவர் வழிபாடு, அவரவர்க்கு சொந்தமானது .அங்கே வந்து மதச்சார்பின்மை யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? அரசியல் வேறு! மதம் வேறு! அது வழிபாட்டுத்தலம்! அரசியல் வழிபாட்டு தலமா? இது பலமுறை மக்கள் அதிகாரத்தில் தெரிவித்த கருத்து தான்.

எனவே, முதல்வர் ஜோசப் விஜய் உங்களிடம் இருப்பவர்கள் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள் .இல்லை என்று மறுப்பதற்கு இல்லை .ஆனால், இந்த மதச்சார்பின்மை என்பது ஒரு தவறான கருத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,ஓட்டுக்காக திமுக, ஸ்டாலின், திருமாவளவன் போடுகின்ற வேஷம் மதச்சார்பின்மை, இந்த வேஷத்தை அந்த முஸ்லிம்களிடமும், கிறிஸ்தவர்களிடமும், ஏன் இவர்கள் காட்டுவதில்லை? அவர்களுக்கு மதம் இருக்கிறது. இந்துக்களுக்கு மதம் இல்லையா?

இப்படிப்பட்ட கேடு கெட்ட அரசியலை மக்கள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள் என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால்,மீண்டும் முதல்வர் விஜய்! இந்த மதச்சார்பின்மை கொள்கை என்று உங்களை ஜான் ஆரோக்கிய சாமி போன்ற, ஆலோசனை சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஏமாந்தால், உங்களுடைய அரசியல் சுருங்கி விடும் என்பதை புரிந்து கொண்டால் சரி.
