
கும்பகோணம் நிதி நிறுவனம் 122 ஆண்டு பழமையான ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் யார் ?ஆட்சிக்கு வருகிறார்களோ ,அவர்களே இதில் நிர்வாக இயக்குனராக வந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி என்றால், இதில் ஆளும் கட்சியின் அதிகார மையம் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும்,இதில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் அதில் உள்ளே வந்திருக்கிறது.
இந்த அரசியல் தான் முன்னாள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது, அதன் நிர்வாக இயக்குனராக கல்யாணசுந்தரம் எம் .பி . இதில் இருந்து உள்ளார். தற்போது, ஆட்சி மாற்றத்தினால், அரசியல் போட்டி களமாக உருவெடுத்துள்ளது.
மேலும்,இதில் அரசியல் உள்ளே வருவது மிகப்பெரிய தவறு. ஏனென்றால், எந்த ஒரு நிறுவனத்திலும் ,அரசியல் வருவதால் தான் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. நிர்வாகம் பணம் போட்ட முதலீட்டாளர்களின் பங்குதாரர்களில் ஒருவரை தேர்வு செய்து இருந்தால், பிரச்சனை இல்லை.

ஆனால் அரசியல் கட்சியினர் பங்குதாரராக இதற்குள் நிர்வாக போட்டி ஏற்படுகிறது என்றால், நிச்சயம் இதில், ஊழல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், ஏன்? இதற்கு இவ்வளவு போட்டி எதற்கு?
இந்த நிதி நிறுவனத்தில் 5 லட்சம் பங்குதாரர்கள் ,1200 ஊழியர்கள் ,7000 கோடி அளவிலான பங்குதாரர் வைப்பு மற்றும் 6700 கோடி அளவிலான நகைக்கடன் கொண்ட ஒரு பெரிய நிதி நிறுவனம் தான்.
Kumbakonam mutual benefit fund Nidhi limited, CIN : U65991TN1903PLN001246 என இதன் பதிவு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு அலுவலகம் கும்பகோணம் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ளது.
இங்கே இதில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் களமாக மாற வேண்டிய அவசியம் என்ன? போட்டி களம் வெளிப்படையாக நடந்ததா? என்ற பல்வேறு கேள்விகளில் இப் பிரச்சனை…!
மேலும்,ஏற்கனவே திமுகவின் இயக்குனர் கல்யாணசுந்தரம் கையில் இருந்த அதிகாரம்,அது அதிகார துஷ்பிரயோகமாக இந்த தேர்தல் களத்தில் நடந்து உள்ளதா? இதுதான் இப் பிரச்சனைக்கு முக்கிய காரணமா?
தவிர,கடந்த தேர்தல்களில் வாக்கு சீட்டு முறை இருந்த போது, தற்போது இந்த ஆண்டு,e – voting முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். E voting முறையில் திமுகவின் கடந்த கால இயக்குனர் கல்யாணசுந்தரம் ஜெயித்ததாக அறிவித்து விட்டார்கள்.
இதனால், ஏற்பட்ட மிகப் பெரிய குளறுபடி, உள்ளடி அரசியல் ,திமுகவுக்கு கைவந்த கலையா? மேலும், இவர்களுடைய தவறுகளை யாரும் கேட்கக் கூடாது. கேட்டால், ஒன்று அவனை குற்றவாளியாக்கி விடுவார்கள்.
இல்லையென்றால், தங்களை நியாயப்படுத்தி உத்தமர் போல பேசிக் கொண்டிருப்பார்கள். அதுவும் இல்லை எனறால்,சண்டைக்கு வருவார்கள். இப்படிப்பட்ட அரசியலில் தான் , திமுக இந்த பிரச்சனையை, கையில் எடுத்திருக்கிறதா?
மேலும்,இதனால் பாதிக்கப்படுவது,நிதி நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள். இப்படிப்பட்ட பிரச்சனை தொடர்கிறது என்பதுதான் பங்குதாரர்களின் வேதனை. மேலும், இப்படிப்பட்ட பிரச்சனையில் திமுக நியாயப்படுத்துவது e- voting முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டதாகவும், தமிழக வெற்றி கழகம் அதை முறையாக பின்பற்ற வில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
அதனால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதில் தான் இரண்டு தரப்புக்கும் போராட்டங்கள் வெடித்து, இருதரப்பு குற்றச்சாட்டுகள், வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வேட்பு மனுவில் பிரச்சனையா? நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டதா? இதற்கான ஆதாரங்கள்? மற்றும் சிசிடிவி கேமரா ஆதாரங்கள், முக்கியமானவை. இதைத் தவிர, வாக்களித்த பங்குதாரர்களின் விசாரணையும் இதில் முக்கியமானது.
இப் பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றாலும், காவல்துறை விசாரணையில் திமுக எம்பி கல்யாணசுந்தரம் மற்றும் பலரின் கைது இந்த விசாரணையில் முக்கியத்துவமானது.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தவெகவைச் சேர்ந்த முருகானந்தம், விஜய்சந்திரன், அஞ்சனா, ஸ்ரீதேவி, சந்தோஷ் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட முயன்றதாக தகவல். இதில், ஸ்ரீதேவி தன்னை பற்றி திமுக அசிங்கமாக பேசியதாகவும் , பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் ,புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலும் ,இத்தேர்தலில்!
e-voting – சர்ச்சையின் மையப்புள்ளி
இந்த தேர்தலின் மிகப்பெரிய சர்ச்சை e-voting முறையாகும்.தவெக தரப்பின் முக்கிய குற்றச்சாட்டு .
- பல ஆண்டுகளாக பங்குதாரர்களை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் நடைமுறை இருந்தது.
- தற்போது இணையவழி வாக்குப்பதிவு கொண்டு வரப்பட்டதில் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் உள்ளது.
- தங்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான நடைமுறையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- எனவே e-voting தேர்தலை ரத்து செய்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும். மேலும்,
வேட்புமனு பிரச்சினை – யார் தவறு?
இங்கே தான் விசாரணைக்கு முக்கியமான கேள்வி!
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விதிமுறைகள் அனைத்து வேட்பாளர்களுக்கும், ஒரே மாதிரியாக முன்கூட்டியே தெளிவாக அறிவிக்கப்பட்டதா?
அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டது?அதை வேட்பாளர்கள் பெற்றதற்கான ஆதாரம் என்ன?
ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறியிருந்தால், அதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் தான் தேர்தல் சர்ச்சையின் மையத்தைத் தீர்மானிக்கக்கூடியவை.
தேர்தலை ரத்து செய்து, வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை
தேர்தல் விதிமுறை மாற்றம் யாருடைய முன்மொழிவில்?
நிறுவனத்தின் Articles of Association-ல் என்ன விதி உள்ளது?
அதில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அந்த மாற்றத்திற்கான ஆவணம் எங்கே?
தவெக வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன?
அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவில்லை என்பதே காரணமா?
அல்லது வேறு தகுதி குறைபாடு இருந்ததா?
எல்லா வேட்பாளர்களுக்கும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட்டதா?
இதுதான் மிக முக்கியமான கேள்வி.மேலும்,
உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய 10 ஆவணங்கள் !
இந்தத் தேர்தல் குறித்து உண்மையான புலனாய்வு நடைபெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வர வேண்டும்:
- தேர்தல் அறிவிப்பு
- e-voting நடைமுறை தொடர்பான முழு விதிமுறைகள்
- Articles of Association-ல் செய்யப்பட்ட திருத்தங்கள்
- Board Resolution
- வேட்புமனு தாக்கல் தொடர்பான அறிவிப்பு
- நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களின் காரணங்கள்
- Scrutinizer Report
- இறுதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்
- ஸ்ரீதேவி அளித்த புகார் மற்றும் FIR விவரங்கள்
- நிறுவனத்தில் பொருத்தப்பட்ட CCTV காட்சிகள் மற்றும் போலீஸ் விசாரணை ஆவணங்கள்
இந்த 10 ஆவணங்களும் வெளிவந்தால், ‘யார் உண்மை சொல்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு அரசியல் பேச்சுகளைத் தாண்டி ஆவணங்களே அதற்கு பதில் சொல்லும்.

– மக்கள் அதிகாரம் மக்களுக்காக என்றும் மக்களுடன்….!