தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளதால் ! விஜய் ஆட்சி அமைப்பதில், பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கடந்த பத்திரிக்கை இதழில் வெளியிட்டோம்.

அதன்படி தமிழ்நாட்டில்! தொங்கு சட்டமன்றமே அமைந்துவிட்டது. மேலும்,இப்போது விஜய்யிடம் 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். தவிர,காங்கிரஸ் கட்சி 4 சீட், மொத்தம் சேர்த்து 112 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதற்கிடையே அதிமுக விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சி.வி. சண்முகம் 37 எம்எல்ஏக்களுடன் பாண்டிச்சேரியில் தங்கி இருப்பதாக தகவல்.

மேலும்,இப்போது விஜய்யிடம் நடத்தப்படும் பேரம் தான் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். இந்த ஆட்சி எந்த அளவுக்கு ?மக்களுக்காக செயல்படும் என்பது ஒரு கடுமையான நெருக்கடி தான்.

தவிர,கருத்து ஒற்றுமை இல்லாமல் கூட்டணி ஆட்சி! அமைந்தால், அது ஒரு போதும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

மேலும், விஜயின் தேர்தல் வாக்குறுதிகள், செயல்படுத்துவதில் ஏகப்பட்ட நிதி தேவைப்படுவதால் அதை எல்லாம் நிறைவேற்ற முடியுமா? மேலும், தமிழகத்தில் நிதி நெருக்கடியில் அரசு இருக்கிறது.

திமுக ஆட்சியில், கஜானா காலி 10 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு போய் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் விஜய் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு. இதனால், பிஜேபியின் ஆதரவு கேள்விக்குறியாக இருக்கிறது.மேலும்,

இந்த நிலையில், விஜய் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அழைக்காததால்,விஜய் கவர்னரை சந்திக்க சென்றுள்ளார். கவர்னர் 113 எம்எல்ஏக்கள் இருந்தால், எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பீர்கள்? இதை வைத்து நிலையான அரசை உங்களால் தர முடியுமா?

தமிழக வெற்றி கழகத்தை எந்த அரசியல் கட்சி ஆதரிக்கும் என்று நம்புகிறீர்கள்? என்று பல கேள்விகளை விஜய்க்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் முன் வைத்துள்ளார். மேலும்,

தற்போது விஜய் சுப்ரீம் கோர்ட் நாட உள்ளதாக தெரிய வந்துள்ளது.அங்கே போனாலும் ,மெஜாரிட்டி என்பது 118 நிரூபித்து தான் ஆக வேண்டும். கால அவகாசம் வேண்டுமானால், சுப்ரீம் கோர்ட் கொடுக்கலாம். அந்த கால கட்டத்திற்குள் விஜய் பெரும்பான்மையின் நிரூபித்து தான் ஆக வேண்டும்.

மேலும்,இப்படி சட்ட சிக்கலில் விஜய் அரசியலில்! மீண்டு வரப் போகிறார்? இந்த அரசியல் போராட்டக் களத்தில் விஜய் வெற்றி பெறுவாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *