
பிஜேபி தொடர்ந்து தமிழ்நாட்டில் வளராமல் இருப்பதற்கு பல ஆய்வுகளில் பல்வேறு காரணங்கள் உள்ளது.
அது முதற்கட்டமாக நேற்றைய செய்தியின் முக்கிய விஷயம் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு சரியில்லை .

கட்சிக்குள் மைனாரட்டி சமுதாயம் அங்கே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்தது, இந்த கட்சி நிர்வாகிகள் அரசியல் கட்சி என்பது தங்களின் சுயநலத்திற்கு மட்டுமே என்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக கட்சியை பயன்படுத்தவில்லை.
மேலும்,இதைவிட முக்கியமான ஒன்று பிஜேபி தமிழ்நாட்டில் கொள்கை முடிவில் ஸ்திரத் தன்மையாக இல்லாத இருப்பது தோல்விக்கான மிக முக்கிய காரணம்.

அடுத்தது ,பிஜேபி ஊழலுக்கு எதிரான கட்சியாக சொல்லிவிட்டு, இந்த ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைப்பது, அவர்களுடைய ஊழல் நடவடிக்கைகளில் அதாவது income tax ride, E D ride, CBI ride, போன்றவற்றில் காம்பெரமைஸ் (compromise) ஆகுவது , இதுவும் ஒரு தோல்விக்கான முக்கிய காரணம் .

மேலும், நீங்க அரசியல் ரீதியாக, சில விஷயங்களில் ,அவர்களுக்கு சலுகை காட்டும் போது, இங்கே அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு கடுமையான சட்டங்கள், பிஜேபி கொண்டு வரவில்லை.

மேலும்,பதவி அதிகாரத்திற்கு ஒரு மாதம் வரை ஒருவர் ஜெயிலில் இருந்தால், அவருடைய பதவி தானாகவே பறிபோய்விடும் என்பது போல, ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சரின் சொத்துக்கள் தானாகவே முடக்கப்படும்.

மேலும்,வழக்கு முடியும் வரை அவர் எதையும் அனுபவிக்க முடியாது. அவர் எந்த நாட்டில் அதை முதலீடு செய்து இருந்தாலும் ,அங்கும் அதை தடை விதிக்க வேண்டும். போன்ற சட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது? இது தவிர,
தமிழ்நாட்டில் இந்த ஊடகப் பொய்களுக்கு, எதிராக உண்மையை நிலை நிறுத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு ,பிஜேபி எவ்வித சலுகை, விளம்பரங்களும் கொடுப்பதில்லை.

மேலும்,இதை தான் இங்குள்ள மத்திய அரசின் செய்தித் துறை அமைச்சர் எல் முருகன் செய்திருக்க வேண்டும் . இவர்களுக்கெல்லாம் ஒரு தலைமையேற்று நடத்தக்கூடிய அந்தத் தகுதி, பண்பு, செயல்பாடுகள், எதுவுமே இல்லாமல், இங்கு மாநில தலைவர்களாக நியமிக்கிறீர்கள். எப்படி பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் ?

மேலும்,தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு சக்தியாக பிஜேபி செயல்பட வேண்டும். அதற்கான தகுதி, திறமை, உள்ள தலைமை, பிஜேபி ஒருவரை நியமிக்க வேண்டும்.
மேலும்,அரசியலை மட்டுமே, திராவிட கட்சிகளுக்கு எதிராக செய்து விட்டு, தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக் கொண்டால் ,அதுவும் சரி வராது. ஒரு கொள்கை முடிவில் கடைசி வரை ஒரே நிலையில் நிற்க வேண்டும் .மக்களுக்காக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கான வலிமையான கட்சியின் நிர்வாக கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும்.

இந்தக் கட்டமைப்பு உருவாக்காமல் !இது எல்லாம் கொண்டு வராமல், பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பற்றி நினைப்பது தவறு.