தமிழ்நாட்டில் 2026 லிருந்து அரசியல் மாற்றங்கள்! எந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை? – அரசியலும், ஜோதிடமும் சேர்ந்த ஒரு ஆய்வு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர்? இது தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் இடமும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு கடுமையான போட்டி என்பது 2026 தேர்தல்.

இதில் யாருக்கு வெற்றி ?எந்த கூட்டணி வெற்றி பெறும்? இந்த கேள்வி ?ஆட்சியாளர்கள் முதல் அரசியல் கட்சி வரை ஒரு பயத்தை உருவாக்கியுள்ள முதன் ,முதல் தேர்தல் களம் என்றால் !அது 2026 தேர்தல் தான்.

இப்போது வரை கூட்டணி கட்சிகளுக்கும் சரி, கூட்டணி தலைமை ஏற்கும் கட்சிகளுக்கும் சரி, நாம் எத்தனை சீட்டுகள் வருவோம்? என்பதில் ஒவ்வொருவருக்கும், ஒரு பயத்தில் தான் இருந்து வருகிறார்கள்.

இந்த பக்கம் பல ஜோதிடர்கள் கருத்துக்கணிப்பு, அதிமுக பக்கம் ஜோதிடர்கள் கருத்துக்கணிப்பு, இப்படி இரண்டு தரப்பிலும், இருக்கின்ற அதுவும் உயர் மட்டத்தில் இருக்கின்ற உயர் நிலையில் இருக்கின்ற ஜோதிட வல்லுநர்களை எடப்பாடி ஜாதகம், ஸ்டாலின் ஜாதகம் ,உதயநிதி ஸ்டாலின் ஜாதகம், விஜய் ஜாதகம், இப்படி பல ஜோதிட வல்லுநர்கள், ஆய்வுக்கு எடுத்திருக்கிறார்கள்.

இதில் பல சாமியார்களையும் சந்தித்து யார் வெற்றி பெறுவார்கள்? என்று அவர்களிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,போலி சாமியார்கள் அதிகரித்திருப்பதால் ,பாதி இந்த பக்கமும், பாதி அந்த பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ‌.

இதற்கிடையில் மத்திய உளவுத் துறையின் ஐ.பி. ரிப்போர்ட் தற்போது வரை திமுகவுக்கு தான் வாய்ப்பு என்று தகவல் சொன்னதாக நண்பர் ஒருவர் சொன்னார். மேலும், ஜோதிடம் என்பது அவ்வளவு எளிதான பாடம் கிடையாது. ஒரு துறையில் பிஎச்டி கூட வாங்கிவிடலாம். ஆனால், ஜோதிடம் பயின்று அதில் பட்டம் பெறுவது, அதில் பிஎச்டி வாங்குவது எளிதான காரியம் அல்ல. அப்படியே ஜோதிடத்தை படித்தாலும், கிரகங்களின் பலனை எடுப்பதில் ஒரு ஜோதிடருக்கு, ஒரு ஜோதிடர் நிச்சயம் வித்தியாசப்படுகிறது.

இங்கே, திமுக மீண்டும் நாம் தான் ஆட்சி என்ற நினைப்பில் இருக்கிறார்கள். அது இந்த மக்களுடைய மனதில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 50 வருடத்திற்கு முன்னால், வாழ்ந்த மக்களுடைய மனநிலை வேறு, 50 வருடத்திற்கு பின்னால், தற்போது இருக்கிற மக்களின் மனநிலை வேறு, இந்த மாற்றம் பிரபஞ்சத்தின் மாற்றம்.

அதாவது கடவுள் அல்லது பரம்பொருள் மாற்றக் கூடிய சக்தியும், வல்லமையும் உள்ளவர். அது அவரால் தான் முடியும். மேலும், திமுக இந்த தேர்தலில் முழுக்க ,முழுக்க, பணத்தை நம்பியும் ,சிறுபான்மையினர் வாக்குகளை நம்பியும் தான் ,தேர்தல் காலத்தில் நிற்கப் போகிறது.

இதற்கு பக்கபலமாக, பக்க வாத்தியம் வாசிக்கக்கூடிய கார்ப்பரேட் ஊடகங்கள், அது தொலைக்காட்சியானாலும், பத்திரிகையானாலும், இவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளும், இவர்களுடைய பிரச்சாரங்களும் நிச்சயம் பெரிய அளவில் மக்களிடம் அது எடுபடாது.

கடந்த தேர்தலிலே எடப்பாடி பழனிசாமி பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து பார்த்து விட்டார். அதாவது வெற்றி நடை போடுகிறது தமிழகமே, என்று மூளை முடுக்கெல்லாம் பத்திரிகைகளுக்கெல்லாம் ,பல கோடிகளை செலவு செய்து பார்த்து விட்டார். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்றால், இந்த பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வரக்கூடிய பொய்களை தொடர்ந்து, நம்ப மாட்டார்கள். அதுதான் உண்மை.

அதனால், ஒவ்வொன்றையும் அதனுடைய தரத்தையும், தகுதியையும் கணித்து விட்டார்கள். இப்போது தினத்தந்தி, தினமலர், தினமணி என்ற பத்திரிகைகளை யார் வாங்கி படிக்கிறார்கள்? என்றால் அரசியல் கட்சிகாரர்கள் தான் வாங்கி படிக்கிறார்கள். பொதுமக்களில் 1/2 ,% கூட வாங்கி படிப்பதில்லை.

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் ஒருவர் கூட, இந்த பத்திரிகைகளை வாங்கி படிப்பதில்லை. அவர்கள் செல்போன் பார்ப்பார்களே ஒழிய, பத்திரிகைகளை வாங்கி படிக்க மாட்டார்கள். இது கூட தெரியாமல் செய்தித் துறை இன்னும் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கே எதற்கு இதை சொல்கிறேன் ?என்றால், ஊடகமும், மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது என்பதை தான் தெளிவு படுத்துகிறேன்.

மேலும், அதிமுக, திமுக, எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தவிர,திமுக சிறுபான்மையினார் வாக்குகளாலும், பணத்தாலும் வெற்றி பெறலாம் என்ற ஒரு நம்பிக்கையில் இருந்தாலும், அது முழு வெற்றி தராது. இந்த முறை பணத்தை வாங்கிக் கொண்டவர்கள், அவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்பதை அறுதியிட்டுக், சொல்ல முடியாது.

மேலும், திமுகவின் வெறுப்பு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் மக்களிடையே இருந்து வருகிறது. இதில் என்னதான் மக்களை ஏமாற்றி பேசினாலும், பணத்தைக் கொடுத்து சரி செய்தாலும் ,சிறுபான்மை மக்களை விலை கொடுத்து வாங்கினாலும், மனசாட்சி உள்ள மக்கள் நிச்சயம் மாற்றி தான் வாக்களிப்பார்கள். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

இதிலே ஜோதிட ரீதியாக பார்த்தாலும் ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை.உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், திமுக கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது.மேலும்,

அடுத்தது, சிறுபான்மையினர் வாக்குகளை ஒரு பக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் திமுக, மற்றொரு பக்கம் விஜய், அதற்கு அடுத்தது சீமான், இப்படி நாலு பேரும் பிரிப்பார்கள். அதனால் வெற்றி என்பது பெரும்பான்மை அதிமுக ,திமுக கூட்டணிக்கு கிடைப்பது கஷ்டமான நிலை தான். மேலும்,

வருங்காலங்களில், இந்த அரசியல் கட்சிகளின் அராஜகங்களை மக்கள் அடியோடு வேர் அறுத்து விடுவார்கள். பல அரசியல் கட்சிகள், இந்த களத்தில் டெபாசிட் கூட தேறாது. இதோட பல அரசியல் கட்சிகள் மூடு விழாவை மக்கள் நடத்தி விடுவார்கள். எனவே,

இனி அரசியல் கட்சிகளின் கொட்டம் அடக்க மக்கள் மனம் ஆரம்பித்து விட்டது என்பது இயற்கையின் வேலை . தர்மம் வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *