தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில்! அரசியல் தலையீடு இருக்குமா?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு உள்ள சட்ட வரையறை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள். இந்த ஒப்பந்தம் ஒரு தனியார் கம்பெனி நிறுவன மூலம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு சேர்ந்து விட்டு, எங்களை பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குரல் கொடுத்து ,போராடுவது, இதற்குள் என்ன அரசியல் இருக்கிறது?

யார் இவர்களை இயக்குகிறார்கள்? மேலும் ,இவர்களுக்கு பணி நிரந்தரம் எந்த ஆட்சி வந்தாலும் ,செய்து தர முடியாது. காரணம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்து அரசுப் பணியில் நிரந்தரம் செய்ய முடியாது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டு, அரசு பணியில் நிரந்தரம் செய்ய சொல்வது போல் உள்ளது. படிக்காதவர்கள் என்பதால் இவர்களை வைத்து அரசியல் செய்வது எளிதானது.

மேலும்,இதைவிட ஒரு கொடுமை சிப்காட்டில் சுமார் ஆயிரக்கணக்கான பேர் இதுபோல் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து விட்டு, சுமார் 15 to 20 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து கொண்டு வருகிறார்கள்.

அவர்களும் எவ்வளவோ போராடி பார்த்தார்கள், ஒன்னும் செய்ய முடியாது, என்று போராட்டத்தில் இருந்து தங்களை இந்தப் பணியில் ஆவது தொடர்வதற்கு இருந்தால் போதும் என்று ஒதுங்கி விட்டார்கள். அவர்களெல்லாம் படித்தவர்கள்.

ஆனால், தூய்மை பணியாளர்கள் படிக்காதவர்கள். இவர்களை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வசதியாக உள்ளது. அமைப்புகள் தோண்டிவிட்டு, குளிர் காய்வதிலும் அரசியல் உள்ளது.

சட்டத்தை மாற்றாமல் , யாராக இருந்தாலும், இந்த ஒன்பது அம்ச கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. எனவே, இந்த ஒப்பந்த தூய்மைப் பணியாற்றினார்கள். தங்களுடைய போராட்ட நிலையில் இருந்து மாற்றிக் கொள்வது நல்லது .மேலும் கொடுக்கின்ற சலுகைகளை வாங்கிக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *