
தேர்தல் என்று அறிவித்தவுடன் அரசியல் கட்சி புரோக்கர்கள் ,மக்களுக்கு வீடு, வீடாக சென்று தங்களுடைய ஆட்சி சாதனையும், கட்சி சாதனையும், பிட் நோட்டீஸ் மூலம் சந்திக்க வருவார்கள் .
அப்போது அதிகமாக வணக்கம் வைப்பார்கள். கையெடுத்து கும்பிடுவார்கள் .காலில் விழுவார்கள் . இதற்கெல்லாம் மயங்கி ஏமாந்த மக்கள், வாக்களித்து பணத்தை வாங்கிக் கொண்டு ,ஓட்டு போட்டு 50 ஆண்டு காலம், பட்ட வேதனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, இனிமேலாவது எந்த அரசியல் கட்சி, ஓட்டு கேட்டாலும், பண நோட்டுக்களை காட்டினாலும், அதை வாங்காமல் எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமோ , அதற்கு சிந்தித்து வாக்களியுங்கள்.

மேலும்,மக்கள் செய்கின்ற தவறால், தவறான ஆட்சியாளர்கள் !உருவாக்குகிறார்கள். திருடனும், கொள்ளையடிப்பவனும், இந்த நேரத்தில் நல்லவனாக தான் பேசுவான். நயவஞ்சகமாக நடிப்பவனும் நல்லவனாக தன் பேசுவான் .அவனைப் புரிந்து கொள்வதே கடினமாக இருக்கும் .

அதனால், தமிழ்நாட்டில் இந்த நடிப்பு அரசியலில் மக்கள் ஏமாறாமல், இருக்க வேண்டும். மேலும் ,இந்த நேரத்தில் தான், ஜாதி என்பது அவர்கள் மூலம் நினைவூட்டுவார்கள். வெறி ஊட்டுவார்கள், நீங்கள் ஏமாந்தால், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும் .
இந்த குறுக்கு வழியில் தான் அரசியலில் ஊழல்வாதிகளும் ,கொள்ளையடிப்பவர்களும், ரவுடிகளும், ஆட்சிக்கு வந்தவுடன், அதிகாரம் கைக்கு வந்தவுடன், அடிமைப்படுத்தி மிரட்டியாள்வார்கள். நீங்கள் கேட்கவில்லை என்றாலும், பணத்தை நீட்டுவார்கள். நீங்கள் ஆயிரம், 500 வாங்கி இருப்பீர்கள்,

அவர்கள் கோடிக்கணக்கில் செலவு காட்டுவார்கள். இதையெல்லாம் நாங்கள் எப்படி எடுப்பது? இது என்ன வியாபாரமா? நம்மை வைத்து இவர்கள் வியாபாரம் செய்கிறார்களா? என்பதை சிந்தியுங்கள். வியாபார அரசியலுக்கும் ஊழல் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். அப்போதுதான்,

அரசியலில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும்,பண்பாளர்கள், நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள் ,பொதுநலம் கொண்டவர்கள் ,சமூக சேவை மனப்பான்மை உள்ளவர்கள், எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும் ,அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மேலும்,வாக்களிக்கும் போது, பணம் கொடுத்தார்கள் ,என்று யாருக்கு வேண்டுமானாலும், வாக்களிப்பது உங்கள் சுயநலத்திற்காக முடிவு செய்யாதீர்கள். அது உங்கள் சுயநலத்திற்கான வேலையல்ல பொதுநலத்திற்கான வேலை என்பதை புரிந்து செயல்படுங்கள்.

அப்படி புரியாமல் அலட்சியமாக யாருக்கு வேண்டுமானாலும் பணம் கொடுத்தால் ,வாக்களிக்கலாம் என்ற மனநிலையில் வாக்களித்ததன் விளைவு, கடந்த திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களும், பட்ட துன்பங்கள் ,அவ்வளவு எளிதில் நீங்கள் மறந்து விடக்கூடாது.

மேலும்,திமுக ஆட்சியில் பட்ட வேதனை வரலாற்றில் இடம்பெற்ற ஒன்று. கருணாநிதி ஆட்சியில் ஆவது ஒரு குறிப்பிட்ட சிலர் ஆவது பலனடைந்தார்கள் .ஒரு நேரத்தில் கருணாநிதியாவது மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற மனநிலையில் செய்தார் .அதையும் மறுக்க முடியாது.
ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் ,திமுக ஸ்டாலின் 50 ,60 சீட் தமிழ்நாட்டில் ஜெயித்திருக்கிறார். இந்த மக்கள் பணத்திற்காக வாக்களித்தார்களா? இல்லை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று புரியாமல் வாக்களித்தார்களா?

இல்லை, ஜனநாயக கடமையை பணத்தை வாங்கிக் கொண்டுதான் வாக்களிக்க வேண்டும், என்று வாக்களித்தார்களா? பணம் வாங்குவது தவறு என்று தெரிந்தும், மக்கள் ரகசியமாக வாங்குவது, உங்களுக்கு நீங்களே ஜனநாயக கடமையாற்ற தகுதியற்றவர்களில் ஒருவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்,பணம் வாங்கிக்கொண்டு, வாக்களிக்க சட்டத்தில் அனுமதி இல்லை. மனசாட்சிப்படி ஒருவரை தேர்வு செய்வதில், நீங்கள் அதிலும் தவறான ஒருவரை தேர்வு செய்தால், ஜனநாயக கடமையாற்றுவதில் உங்களுக்குத் தகுதி இல்லை.

ஏதோ வாக்குச்சாவடிக்கு சென்றோம், கட்சிக்காரர்கள் சொன்னார்கள் ,இந்த சின்னத்தில் குத்து, அந்த சின்னத்தில் குத்து ,பணம் கொடுத்தார்கள் வாங்கிக் கொண்டேன், இப்படி எல்லாம் இருக்கக்கூடிய மக்கள், கடந்த காலத்தில் படிப்பு அறிவு இல்லாத மக்கள் செய்த தவறு.

அந்தத் தவறை ,அதே மக்கள் அவர்களுடைய பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள் ,இன்று படித்தவர்களாக, சமுதாயத்தில் உருவாகி இருக்கிறார்கள் .அவர்கள் இனிமேலாவது, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும்.
மேலும்,யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை படித்து சமுதாயம் அதை சிந்தித்து செயல்பட வேண்டும். தகுதியான வேட்பாளர்கள்? தகுதியான அரசியல் கட்சிகள் எது ?என்பதை அதற்கு மார்க் போட்டு, எவ்வளவு மார்க் போடலாம் ?என்பதை சிந்தித்து உங்கள் பகுதியில், இவர்கள் செய்த சமூக சேவைக்கு, மதிப்பளித்து, வாக்களிப்பது தான் உங்களின் ஜனநாயக கடமை .

மேலும் , அதை மக்கள் இந்த இடைத்தேர்தலில் நிரூபிப்பார்களா? இது தவிர, நாட்டில் அரசியல் கட்சி புரோக்கரை விட ,இன்று அதிக அளவில் மீடியா புரோக்கர்கள் வந்து விட்டார்கள்.

அதில் கார்ப்பரேட் மீடியா புரோக்கர்கள் இருக்கிறார்கள் ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் சாமானிய பத்திரிக்கை புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்து, எப்படி கட்சிக்காரர்கள் பணத்துக்கு வேலை செய்கிறார்களோ ,அதுபோல் ,எந்த பக்கமாவது ஒரு பக்கம் பணத்தை வாங்கிக்கொண்டு ,அவர்களை உயர்த்திப் பிடிப்பார்கள் .

அப்படி உயர்த்தி பிடிக்கும் வேளையில் பத்திரிக போர்வையில்,புரோக்கர் வேலை செய்யும்போது, மக்கள் ஏமாந்து விடக்கூடாது .அதனால், நீங்கள் சிந்தித்து எந்த தேர்தல் வந்தாலும் ,யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?என்பதை மக்கள் மனதில் சிந்தியுங்கள். அதுதான் உங்கள் சந்ததிகளின் வெற்றி !உங்களின் பாதுகாப்பு ,தமிழ்நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு ,நாட்டின் வளர்ச்சி! உங்களின் வளர்ச்சி !

உங்கள் வாக்கு! பொது நலத்தில், சமூக நலத்தில், அதன் பங்களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் யார் என்பதுதான் உங்கள் தேர்வு? என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிகையின் சார்பில்! என்றும் மக்கள் நலனில் ….! மக்கள் அதிகாரம்.
