
திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், கொள்ளையடித்ததை தவிர ,வேறு ஒன்றும் செய்யவில்லை. வேறு ஒன்றும் தெரியாமலே இருந்து விட்டார்கள். இதற்கு உதாரணமாக எங்களது பத்திரிக்கை துறையை எடுத்துக் கொள்வோம்.

பத்திரிக்கை துறையை பற்றி ,ஒரு மூத்த;பத்திரிகையாளனாக எங்களுடைய பத்திரிகைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலமுறை கடிதங்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு விட்டார்கள்.

அவர்கள் நோக்கம் எல்லாம் கமிஷன், இந்த கரப்ஷன் வேலை மட்டும் தான் பார்த்தார்கள். இதற்கு தேர்தல் நேரத்தில் , பல சமூக நலன் பத்திரிகைகள் ,இந்த தேர்தல் நேரத்தில் நன்றாக திமுகவின் ஊழல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க செய்திகளை வெளியிட்டு வந்தனர்.அது, எதிர் கட்சிகளுக்கு பக்க பலமாக இருந்தது.மேலும்,
இவர்கள் நினைத்தார்கள், நம்மிடம் எல்லா கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளும் ,தொலைக்காட்சிகளும் இருக்கிறது. நான் சொல்லும் பொய் ,அவர்கள் சொல்லும் பொய் தான் ,மக்கள் செய்தி என்று நம்புவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் திமுக இருந்தது.தவிர,

எங்களை போன்ற பத்திரிகைகளை நம்ப மாட்டார்கள். இப்படித்தான் ஒரு தவறான கணக்கு போட்டு ,திமுக ஆட்சியில் இந்த மந்திரிகள் இருந்தார்கள். ஏன்? முதல்வர் ஸ்டாலினே அப்படி தான் இருந்தார். இவர்களுக்கு பத்திரிக்கை பற்றிய நாலேஜ் கிடையாது . இது செய்தித் துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளுக்கே இல்லை.இவர்களுக்கு எப்படி இருக்கும்?
மேலும்,இவர் இந்த துறையில் ஒரு சூழ்ச்சி வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது எங்களைப் போன்ற அந்த பத்திரிகையாளர்களுக்கு தான் தெரியும் .மீதி எல்லாம் அது என்ன என்று தெரியுமா ?தெரியவில்லை.
அதுதான் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம். இந்த நல வாரியத்தில் யார்? முக்கிய பொறுப்பாளர்கள்? என்றால் ,இவர்களுக்கு வேண்டிய ஆட்கள் தான் பொறுப்பாளர்கள். அதாவது
கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் , கார்ப்பரேட் பத்திரிக்கைக்கு பணியாற்றக் கூடியவர்கள் , எங்களுடைய பத்திரிகைகளின் வலி வேதனைகள் தெரியுமா அவர்களுக்கு ?

இது பற்றி எத்தனையோ முறை இயக்குனர் வைத்தியநாதனிடம் தெரிவித்திருக்கிறேன். செய்தித் துறையில் ,பழைய ஓட்டை சட்டங்களை வைத்து, பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சர்குலேஷன் சட்டம், இதைப் பற்றியும் சொல்கிறேன்.
கோவை மாவட்டத்தில் என்னுடைய பத்திரிக்கை நண்பர், மற்றும் கல்லூரி முதல்வர் ,அவர் சொன்ன தகவல், சார் ஒரு பெரிய பத்திரிகை தினசரி ஆயிரம் பிரதிகள் தான் அச்சடிக்கிறது. அதற்கு 400 வால் போஸ்டர்கள் அடிக்கிறார்கள்.

இதில் விற்பனை எவ்வளவு ?ரிட்டன் எவ்வளவு? இந்த கணக்கை எந்த ஒரு தினசரி பத்திரிக்கையும், செய்தி துறையில் ஒழுங்கான ஆடிட் கணக்கை காட்டுவதில்லை. அதற்கு இவர்கள் தான் சப்போர்ட் . செய்தித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அதுதான் இந்த விளம்பரங்களை ஏஜென்ட்கள் மூலம் கொடுத்து 30 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள்.
ஸ்டாலினுக்கு எதை பற்றியும் தெரியாது. ஆனால், ஊழல் செய்வதில் மட்டும், இவர்கள் குடும்பத்தை மிஞ்ச எவருமே இல்லை.மேலும்,

இந்த பத்திரிகைகளுக்கு சலுகைகளை கொடுத்தால், நம்முடைய பத்திரிகை வியாபாரம் படுத்துக் கொள்ளும் என்பதில் பல பத்திரிகை முதலாளிகள் இதை தீவிரமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,
ஸ்டாலின் ஆட்சியில் மத்திய அரசுதான் கார்ப்பரேட் அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கும் இவர்களுடைய கூட்டணியான திருமாவளவன் முதல் இதை தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் யார் கார்ப்பரேட் அரசு என்பதை நாங்கள் தான் சொல்வோம் ஸ்டாலின் அரசு ஒரு கார்ப்பரேட் அரசு. இதை ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டால் கூட சொல்வார்கள்.

அவர்கள் சொன்னது,இன்னொரு முறை இந்த ஆட்சி வந்தால், நாங்கள் எல்லாம் இந்த ஆட்டோ கூட, ஓட்ட முடியாது என்று எத்தனையோ ஆட்டோ ஓட்டுநர்கள், என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். இது தவிர, திமுக மந்திரிகள் எத்தனையோ உள்ளடி வேலைகளை எல்லாம் செய்து பார்த்திருக்கிறார்கள். அது என்ன என்றால்?
நேற்று கூட தென் மாவட்டத்தில் எங்களுடைய குடும்ப நண்பர் சொன்னார். அதிமுக வேட்பாளரையே, அவர் தொகுதியினுடைய திமுக அமைச்சர் விலைக்கு வாங்கி விட்டாராம்.
அதனால், நான் விசிலுக்கு போட்டு விட்டேன். இப்படி பல விஷயங்கள் பணத்தால், திமுக இந்த முறை வீழ்த்தலாம் என்ற கனவு பலிக்கவில்லை. அப்போதும் ,அந்த மந்திரி தோல்வி பயத்தில் தான் இருக்கிறாராம். அப்படி என்றால்! திமுகவின் நிலைமை என்ன?
படு தோல்வியா? இப்படி இரண்டு கட்சிகளின் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக விஜய்க்கு பல லட்சம் வாக்குகள் மாறியுள்ளது. எப்படி இருந்தாலும், கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வர வாய்ப்புள்ளது.

அப்போது எங்களுடைய சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கைகளை அவர் தீர்க்க வேண்டும். எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகயாளர்களை நேரில் அழைத்து பேச வேண்டும். அப்போதுதான் இதற்கான முக்கிய தீர்வு என்பதை அவருக்கு இந்த பத்திரிக்கைகளின் சார்பாக வைக்கின்ற கோரிக்கை.