
விஜயின் அரசியல்! நாலா பக்கமும் எதிரிகள் சூழ்ந்த அரசியல்! இதில் எப்படி இவர் ஜெயிக்கப் போகிறார்? மக்களிடம் எப்படி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்? சரியான நிர்வாகத்தை எப்படி கொடுக்கப் போகிறார்?

மேலும்,இதற்கெல்லாம் இவர்களுடைய தவெக கட்சியினர் தகுதியானவர்களா? இந்த அரசியல் வளையத்திற்குள் விஜய் மாட்டிக் கொண்டிருக்கிறார் . தவிர,அரசியல் என்பது ஒரு போராட்ட களம். இங்கே இவருடைய குடும்பம் சினிமா குடும்பம். அரசியல் பின்னணி கொண்டது இல்லை. சினிமாவை பற்றி தான் தெரியும். அரசியலைப் பற்றி அடிப்படை மிகவும் குறைவானது.

மேலும்,இந்த அடிப்படையில் விஜய்க்கு யோகமோ, அதிர்ஷ்டமோ இருந்ததனால், இவர் நேராக கட்சி ஆரம்பித்து, முதலமைச்சராக ஆகி விடுகிறார். மக்களை சந்தித்ததில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு போராடியது இல்லை. இப்போதும் கூட இவரை சந்திப்பது சினிமாக்காரர்கள் தான் அதிகம் என்கிறார்கள். மக்கள் எளிதாக சந்திக்க முடியவில்லை.

மேலும்,மக்களை சந்திக்காமல், அரசியல் செய்ததன் விளைவு, திமுக இன்று மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. அதனால்! விஜய் இவரைப் பாராட்டும் பத்திரிகைகளை விட, உண்மையை எடுத்துரைக்கும் பத்திரிகைகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், அது உங்கள் நன்மைக்கும், உங்கள் பாதுகாப்பிற்கும் பயன்படும். இல்லையென்றால், அது பாழ் கிணற்றில் தள்ளிவிடும் என்பதை புரிந்து கொள்வாரா? மேலும்,

தன்னைவிட பலசாலி இடம் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .அதுவும் தெரியவில்லை. ஏற்கனவே, திமுகவுக்கு சொன்ன இதே கருத்து, இன்று தமிழக வெற்றி கழகத்திற்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர்கள் பிஜேபியை பகைத்துக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான நன்மையும் செய்ய முடியாது .உங்களுடைய ஆட்சி போராட்டமாக தான் இருக்கும். அதையே தான் அவரும் உருவாக்கிக் கொண்டார். தற்போது விஜயும் உருவாக்கிக் கொண்டார். மேலும்,

ஜெயித்தவுடன் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து , எதிர்க்கட்சிகளின் அணியில் இருந்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் இவர்கள் அனைவரையும் வைத்து ஆட்சியில் அமர்ந்து கொண்டார்.

மேலும்,இதுவே மைனாரிட்டி ஆக இருக்கும் போது ,விஜய் இப்படிப்பட்ட அரசியல் செய்தது, அவருடைய அரசியல் ஆலோசகர்கள்! தவறான ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். தவிர,ஜான் ஆராக்கிய சுவாமி ,ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந், இந்த 108 சீட்டுகளுக்கே இவர்களுக்கு இன்னும் புரியவில்லையா? மேலும் ,இந்த அளவுக்கு குறைந்த தொகுதிகளை பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும்? என்றால் யாருடைய தயவு நமக்குத் தேவை? என்பதை முதலில் இவர்கள் சிந்தித்து இருக்க வேண்டும்.

மேலும்,இவர்கள் பிஜேபி இடம் நின்று இருந்தால் ,நிச்சயம் அதிமுகவின் சப்போர்ட் கிடைத்திருக்கும். அது மிகப்பெரிய தவறு. அடுத்தது ஜெயித்தவுடன் ஸ்டாலினுக்கு போய் சால்வை அணிவித்தீர்கள். இது எல்லாம் நீங்களாக போய் விரோதத்தை தேடிக் கொண்டது. ஸ்டாலின் அப்போதே உங்களை எங்களுடைய பழைய ஊழல் கணக்குகளை எல்லாம் களறக்கூடாது என்று சொல்லியே அனுப்பி இருப்பார் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த சூழலில் அவர்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளாக இருந்த அதிமுக இன்று இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது. இந்த மூன்றுமே தமிழ்நாட்டில் வலுவான கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பது பிஜேபி இவர்களை எல்லாம் பகைத்துக் கொண்டு, ஆட்சி என்பது ரொம்ப கடினமான நிலைமையில் தான் இருக்கும்.

மேலும்,இவர்கள் அத்தனை பேரும் விஜயின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .இவர் எந்த பக்கம் தவறு செய்தாலும், அந்தப் பக்கம் அவர்கள் தோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதனால், ஏற்கனவே சொன்னது போல ,விஜய்க்கு கொடுக்கப்பட்டது இரும்பால் ஆன கூரிய முற்களால் உருவான சிம்மாசனம் .

இது ஒரு புறம் இருந்தால் !ஆதவ் அர்ஜுனாவை சிபிஐ வழக்கில் உள்ள தள்ள பிஜேபி துரித வேளையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் . இது தவிர, அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகளுக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லாமல் போனதால், அவர்கள் எதிர்ப்பு தாக்குதல் அதிகமாக இருக்கும். அதேபோல் சீமான், ஆளாளுக்கு விஜயை அரசியலில் பழி வாங்கத்தான் இருக்கிறார்களே ஒழிய ,பக்க பலமாக இருக்க ஒரு அரசியல் கட்சியும் இல்லை.

மேலும் ,இன்று கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் ,முஸ்லிம் லீக் ,விடுதலை சிறுத்தைகள் ,அனைத்துமே நேரம் பார்த்து கவிழ்ப்பார்கள் என்பது உறுதி. இந்த நிலையில் விஜையின் அரசியல் அடுத்த கட்ட நகர்வு மக்களிடம் ஜெயித்தால்! தான், எதிர்க் கட்சிகளை ஜெயிக்க முடியும்.

இவர் மக்களை எப்படி ஜெயிக்கப் போகிறார்? எதிர்க்கட்சிகளை எப்படி ஜெயிக்கப் போகிறார்? ஏனென்றால் இப்போதே விவசாயிகள் போராட்டம் ஆரம்பித்து விட்டது. அவர்கள் கேட்பது நீங்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதியை தான் அவர்கள் பேசுகிறார்கள்.
மேலும்,இதே நிலைமை தான் திமுக ஆட்சியிலும் இந்த விவசாயிகள் போராடினார்கள். அப்போதும் ,அது அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. இது தவிர,அரசு ஊழியர்கள் சங்கம்,ஆசிரியர்கள் சங்கம் தேர்தல் வாக்குறுதிகள் என்ன? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் .மேலும்,

இதையெல்லாம் எப்படி இவர் சமாளிக்க போகிறார்? சினிமா வேறு, அரசியல் வேறு, என்பதை இவர் விரைவில் புரிந்து கொள்வார? என்கிறார்கள் அரசியல் வட்டாரம். மக்களும் இப்போது புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். காலமே இதற்கு பதில் .
