
உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன?
இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை.

மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

இதனால், புதுப்,புது நோய்கள் உருவாகிறது. இதற்கு என்ன காரணம்? கடந்து திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சியில், மலைகளை அழித்திருக்கிறார்கள். காடுகளை அழித்து இருக்கிறார்கள். இயற்கை வளங்களை எல்லாம் அழித்துவிட்டு, மனிதன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
இதற்காக இன்று வரை, மத்திய மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று சுற்றுச்சூழல் மனித வாழ்வியலுக்கு எதிராக இருக்கிறது.

மேலும், மனித வாழ்வியலுக்கு ஒன்று தேவை என்றால் ,அந்த தேவையின் மூலம் மனித வாழ்வை அழிக்கும் நோக்கமாக ,எந்த கண்டு பிடிப்பானாலும் ,எந்த ஒரு வளர்ச்சி திட்டமானாலும் ,அது தேவையற்றது. எனவே,இதை அடிப்படையாகக் கொண்டுதான், மத்திய மாநில அரசு திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
ஆனால், இன்று காடுகளை அழிப்பதை பற்றியோ, மரங்களை வெட்டுவது பற்றியோ , இயற்கை வளங்கள் அழிப்பது பற்றியோ, கவலைப்படாமல், இருந்ததன் விளைவு, இன்று மோசமான வெப்பத்தின் சுற்றுச்சூழலை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும்,இது பற்றி எந்த ஒரு ஆட்சியாளர்களும், இதுவரை அதற்கான எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தவிர,புவியியல் மற்றும் மனித வாழ்வியலுக்கு எதிராக இருக்கும் போது, மக்கள் உழைக்கும் திறனை இழப்பார்கள்.

அது இந்த வெய்யலுக்காக பீர் குடிக்கிறேன் .மது குடிக்கிறேன், என்று போனால், அவர்களின் உழைப்பு வீணாகி விடுகிறது.மேலும், வெயில் அடித்தாலும் தாங்க முடியவில்லை. குளிரடித்தாலும் தாங்க முடியவில்லை. மழை வெள்ளம் வந்தாலும் தாங்க முடியவில்லை. அப்படி என்றால், மனிதன் எப்படி தான் வாழ்வது?
மேலும் இந்த மாற்றம்,இது எப்போதிலிருந்து ?இந்த சுற்றுச்சூழல் மாறுபட்டுள்ளது ?என்பதை சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இதை ஆட்சியாளர்களுக்கு ஏன் ?இந்த உண்மையை தெரிவிக்கவில்லை? இதற்கான திட்டம் வகுத்து, அதை சரி செய்ய ஏன் ?மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ?என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி?

மேலும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ,இந்த வருடத்தில் அதிகப்படியான மழை வெள்ளம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் ஒருபுறம் , மற்றொருபுறம், ஜோதிட ஆய்வாளர்கள் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
அதுவும் சென்னை சுற்றி உள்ள பல பகுதிகளில் இந்த மழை வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அப்படி இருக்கும் போது இதற்கான நடவடிக்கை இந்த அரசாங்கம் எப்படி எடுக்க போகிறது? இதுதான் பொது மக்களின் கேள்வி?

மேலும், திமுக ஆட்சியில், கிராமங்களில், நீர் வளத் துறைக்கு சம்பந்தப்பட்ட ஏரிகளில் எடுக்கப்பட்ட சவுடு மண் குவாரிகளால், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்படுத்தியும், திருவள்ளூர் மாவட்டம்,விடையூர் கிராமத்தில் சவுடு மண் எடுக்கும் போது, சுமார் 100 மீட்டர் அளவுக்கு, கரையை உடைத்து மண் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஆனால்,இன்று வரை அந்த கறைகள் எல்லாம் போடப் படாமலே அப்படியே இருந்து வருகிறது. அதையெல்லாம் இப்போதே சரி செய்யவில்லை என்றால், நீர் வளத் துறை அதிகாரிகள் வெள்ளம் வந்த பிறகு, எந்த கிராமத்தையும் காப்பாற்ற முடியாது.

அதனால், ஒவ்வொரு ஏரிகளும் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இது சம்பந்தமாக, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை ஏரிகள் குறித்து ஆய்வு செய்து பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
அப்போதுதான் மழை வெள்ளத்தில் கிராம மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அதேபோல் நகரங்களில் ஏரிகளை சுற்றி வீடுகளை கட்டியுள்ள மக்கள் மழை வெள்ளம் வரும் போது, டிவி களில் போட்டோ சூட் எடுப்பதை தவிர்க்க, அவர்களை எங்கே தங்க வைக்கலாம்? எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதை இப்போது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் அது குறித்த திட்டத்தை வகுக்க வேண்டும்.

இருப்பது இன்னும் ஒரு சில மாதங்கள் தான் என்பதால், இது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் விஜய்க்கு கடுமையான அரசியல். இதை வருமுன் காப்பது எப்படி என்பது அவர் இப்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வார்கள் என்பதை தமிழக முதல்வர் விஜய் புரிந்து கொண்டால் சரி .
