
நீட் தேர்வு தேசிய முகமையில் முறையீடுகளில் ஈடுபட்ட 47 என் .டி .ஏ அதிகாரிகளை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும்,நீட் தேர்வு விவகாரம் இந்த அளவுக்கு அரசியலாக்கப்பட்ட பின், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யார் ?என்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதில் அந்நிய சக்திகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது .
அதனால், மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில், நாட்டில் கலவரத்தை தூண்டவும், ஆட்சிக்கு எதிரான சதி திட்டங்களை அரங்கேற்றவும் ,இந்த அன்னிய சக்திகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .அதுமட்டுமல்ல, இவர்களுக்கு ஒரு பெரும் தொகையும் கைமாறி உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், மத்திய அரசு நீட் தேர்வுகள் சீராகவும், நேர்மையாகவும் நடக்க 38 ஒப்பந்த ஊழியர்களும், 138 வெளிப்பணி ஊழியர்களும், ஒரு ஊழியர் தனது தாய் துறையிலும் உள்ளனர். கடந்த 2024 அக்டோபர் 29- ஆம் தேதி 16 புதிய பணியிடங்களை உருவாக்கபட்டது. இவற்றில் 8 பணியிடங்கள் இயக்குனர் நிலையிலும், 8 பணியிடங்கள் இணை இயக்குனர் நிலையிலும் உள்ளன.
தேர்வு தொடர்பான நடவடிக்கைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு தேர்வுகள் சீராகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு தேவையான செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,

இப் பிரச்சனையை கவனித்து வரும் உச்ச நீதிமன்றம் ,இது பற்றி மத்திய அரசிடம் தரவுகளை கேட்டுள்ளது. அதாவது நீட் தேர்வு ஆன்லைன் மூலம் தேர்வு நடவடிக்கைகள் எடுப்பதால், தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படும்? என்பது குறித்து ,விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் அதற்கான தரவுகளை கேட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
