
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தலைமை செயலகத்திற்குள் உள்ளே செல்வதற்கு, காவல்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள், அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் செய்தியாளர்கள் மட்டும்தான் பத்திரிகையாளர்கள் என்று, அவர்கள் தீர்மானித்து விட்டார்களா? அல்லது செய்தி துறை அதிகாரிகள் தீர்மானித்து விட்டார்களா ?
மேலும்,நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, இதில் பத்திரிகையாளர்கள் பிரச்சனையும், அதனுடன் சேர்ந்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இங்கே செய்தி துறை அதிகாரிகள், பத்திரிகையின் தகுதியை, நிர்ணயம் செய்யாமல், வெறும் சர்குலேஷன் சட்டத்தை வைத்து, பத்திரிக்கை என்று தீர்மானிக்கிறார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுத்து, பத்திரிக்கை என்று தீர்மானிக்கிறார்கள். அதுவே ஒரு தவறான அங்கீகாரம்.

மேலும்,செய்திக்கும் ,நிகழ்வுகளுக்கும், நடந்த சம்பவங்களுக்கும், அர்த்தம் தெரியாமல் , செய்தித்துறை இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் , இவர்களுக்கு அடிப்படை பத்திரிகை அறிவு என்பது மிக, மிக குறைவு. அதை நீண்ட நாட்களாக நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்.
மேலும்,ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டங்களில் எத்தனையோ ஓட்ட சட்டங்களில் இதுவும் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் ,அச்சு ஊடகமாக இருந்த பத்திரிகைத்துறை, இன்று இணையதள ஊடகமாக மாறிவிட்டது.

அதனால், இன்றைய காலத்திற்கு தகுந்தவாறு சட்டங்கள், விதிமுறைகள் ,பத்திரிக்கை துறையில் மாற்றியமைக்க வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செய்தித்துறை இயக்குனர் அருண் ராஜ்க்கும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, பத்திரிக்கை துறையைப் பற்றி செய்தித் துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை, என்றால்! காவல்துறை அதிகாரிகளுக்கு எப்படி தெரியும்?
அதனால், பத்திரிகைகளை வரை முறைப் படுத்துங்கள் ,உள்ளே வருவதற்கு என்ன பிரச்சனை? நாங்கள் பத்திரிகையின் அடையாள அட்டை காட்டுகிறோம். பத்திரிகையும் காட்டுகிறோம். இதற்கு மேல் என்ன உங்களுக்கு தேவை?

போலித்தனமான பத்திரிகைகள் ,செய்தியாளர்கள் இருந்தால் நீங்கள் உள்ளே அனுமதிக்காதீர்கள் .தகுதியான பத்திரிகையாளர்களை அனுமதிக்க கூடாது என்று என்ன சட்டம்? அவர்களும் பொதுமக்கள் வரிசையில் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டுமா?
அதுதான் இந்த ஆட்சியின் அதிகாரம் என்றால்! அதை எதிர்த்து நிச்சயம் பத்திரிகை செய்தியாளர்கள், போராடுவார்கள். இதைவிட ஒரு கொடுமை மத்திய அரசில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் அவர்களையும் உள்ளே விடுவதற்கு அனுமதிக்க வில்லை.
மேலும்,யார பார்த்தாலும், போலீசுக்கு திருடனும், குற்றவாளியும் போல் தெரிந்தால் ,நாட்டில் ஒருவர் கூட வாழ முடியாது. எனவே, செய்தித் துறை அதிகாரிகள், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
