பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்குக்கும் ,அதை தரம் பிரித்து வழங்கிய மத்திய அரசுக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த நன்றி.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் பத்திரிகை.

இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது செய்தி துறை இயக்குனர் ஆர். வைத்தியநாதன் ஐ ஏ எஸ் க்கு நன்கு தெரியும் . பலமுறை அவரை நேரிலும், செய்திகளை இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு இருப்பது நன்கு தெரியும். அதனால் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக முதல்வருக்கும் இயக்குனர் வைத்தியநாதன் அவருக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர உத்தரவு வழங்கியதற்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும் மனமார்ந்த நன்றி.

மேலும், இதேபோல் இந்த செய்தி துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் ,இயக்குனர் வைத்தியநாதனும் ,இந்த சலுகை ,விளம்பரங்கள் தகுதியான பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகைகளுக்கு வழங்கிட வேண்டும்.தவிர, இங்கே சர்குலேஷனை இணையதளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும்.

இது சமூக நலனுக்கு முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும்,இங்கே பத்திரிக்கை என்று கணக்கு காட்டுபவர்களுக்கு இந்த சலுகை ,விளம்பரங்கள் நாங்கள் கேட்கவில்லை .உண்மையாகவே சமூக நலனுக்காக போராடுகின்ற பத்திரிகைகளுக்கு மட்டுமே ,இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அது சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் மக்களிடம் உண்மைகளை வெளிப்படுத்துகின்ற கருவிகள் . மேலும்,

இதில் முறையாக பத்திரிகை நடத்தக்கூடியவர்கள் ,அவர்களுடைய செய்திகளின் தரம், சமூக மற்றும் தேசத்திற்கு அவசியமான செய்திகளை வெளியிடக்கூடியவர்களுக்கு அவசியம் .இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் ,அதற்கான முயற்சிகளில் மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடி வருகிறது.தவிர, மத்திய அரசிலும் இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் மூலம் கடிதங்கள் மத்திய செய்தி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமீண்டும் ,அதை நினைவூட்டல் கடிதம் ஆக அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, இதனால் பெரிய நஷ்டமோ அல்லது இழப்போ ஒன்றும் மத்திய மாநில அரசின் செய்தித் துறைக்கு வந்து விடப் போவதில்லை. இந்த பத்திரிகைகள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. இதை தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன். மேலும்,இது பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் பத்திரிகை துறையில் போராடும் பத்திரிகையாளர்களுக்கு அரசு கொடுத்தற்கு மகிழ்ச்சியுடன் எமது வாழ்த்துக்கள்.பெருமையுடன், பத்திரிக்கை உலகில் !மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *