
பத்திரிக்கை துறையின் நோக்கமும், அரசியல்வாதிகளின் நோக்கமும், எப்படி இருக்க வேண்டும் ? மேலும்,தற்போதைய ஊடகங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கங்கள், எதை நோக்கி இருக்கிறது? பொதுநலமா? சுயநலமா?

இதற்குள் இருக்கும் அரசியல் வியாபாரம் ,பத்திரிக்கை வியாபாரம் இது இரண்டும்,நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் ,எதிரானது !,ஆபத்தானது. அதுதான் ஊழல் அரசியலையும், அரசியலில் அராஜகத்திற்கும் முட்டுக் கொடுக்கும் பத்திரிகைகளால் ஆபத்து . இது போலியான பத்திரிக்கை பிம்பம்.இதை சீர் செய்யாமல் மக்களுக்கான அரசியலை நாட்டில் கொண்டு வர முடியாது.

எனவே ,பத்திரிக்கை துறையை சீர் செய்தால் ,போலி பத்திரிக்கை பிம்பத்திற்கும், போலி பத்திரிகைகளுக்கும், போலி பத்திரிகையாளர்களுக்கும் அவர்களின் சங்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவர்கள் எல்லாம் நான்காவது தூண், என்று மக்களை மற்றும் சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

நாட்டில் பத்திரிக்கை துறை சீர் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் சுமார் 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ,அதற்கான தகுதி மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகளுக்கு இருக்கிறதா? கண்டு கொள்ளவில்லை. கார்ப்பரேட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.மேலும்,

இவர்கள் எத்தனை கோடியில் ஒருவர் பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார்? நீ எத்தனை கோடிகளில் ஆரம்பித்தாலும், உன்னுடைய பத்திரிக்கையின் நோக்கம் என்ன? அதன் பயன்கள் மக்களுக்கு என்ன? அதுதான் பத்திரிக்கையே தவிர,

500 கோடியில் பத்திரிகை ஆரம்பித்தாலும், பயன்கள் மக்களுக்கு குப்பையாக இருந்தால், அது பத்திரிகை இல்லை.
அதே போல் தான், இன்றைய அரசியல்வாதிகள், கார்ப்பரேட் அரசியல்வாதிகளாக இவர்கள் சொந்த சுயநலத்திற்கு, அரசியல் ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் காரில் வந்தால் என்ன? பைக்கில் வந்தால் என்ன? நடந்து வந்தால் என்ன?உங்களால் மக்களுக்கு என்ன சேவை ?அதுதான் அரசியல் !

மேலும்,உங்கள் பின்னால் 100 அடியாட்களை கூட்டிக்கொண்டு நான் இந்த கட்சி, அந்த கட்சி என்று காட்டிக் கொண்டு, அதெல்லாம் மக்களுக்கு தேவையே இல்லை. நீ எந்த கட்சியாக இருந்தாலும், கொடிகளை தான் பார்க்க முடிகிறது.கூட்டங்களை தான் பார்க்க முடிகிறது. தேவையற்ற பேச்சுக்களும், விமர்சனங்களும் தான் பார்க்க முடிகிறது. தவிர, ரவுடிசம், அரசியல் நாகரீகம் அற்ற பேச்சுக்கள் இதை தான் பார்க்க முடிகிறது.

ஆனால், மக்களுக்கான சேவையை பற்றி எங்கே பார்க்க முடிகிறது? மேலும் ,இவர்களுடைய நேர்மையை பற்றி பார்க்க முடிகிறதா? இவர்களுடைய தூய்மையான அரசியல் வாழ்க்கையை பற்றி யாராவது பேசுகிறார்களா?
அதையெல்லாம் விட்டு விட்டு, இவர்களுடைய ஊழலையும் கொள்ளையும் மறைக்க, ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனமாகவும் தேவையில்லாத செய்திகளை மக்களிடம் திணித்து ,இதுதான் அரசியல்! என்று போலி பத்திரிக்கை பிம்பத்தை ,கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்கள், ஏற்படுத்திக் கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள்.

இதனால், ஊழல் அரசியல் தான் நாட்டில் தழைத்து தோங்கும் .மேலும், மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கையே இழந்து விட்டார்கள். காரணம், இவர்களுக்கு அரசியல் என்றால்! பொதுநலம் என்று தெரியாதவர்கள், அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். எப்படி அரசியல் சுயநலமாகிவிட்டால்!

அவர்கள் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்? எப்படி எல்லாம் பொது சொத்துக்களை கொள்ளையடிக்கலாம்? இந்த நோக்கத்திற்கு அரசியல் என்றால்! மக்கள் உங்களுக்கு வாக்களிப்பது வீண்.

அரசியல் தெரியாதவர்களிடம் 1000,500 என்று கூலி கொடுத்து அவர்களுடைய விலைமதிப்பற்ற வாக்குகளை வாங்குவது அரசியலா? தவிர, வாக்குக்கு அர்த்தம் தெரியாதவர்களை வைத்துக் அரசியல் வியாபாரம் செய்வது அரசியலா?இதையெல்லாம் மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமை.

ஆனால், தேவையில்லாத அரசியல் கட்சியினரின் விமர்சனங்களை எல்லாம் பக்கங்களாக பெரிய பத்திரிக்கை என்று பத்திரிக்கை துறையும், மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,100 குப்பை செய்திகளை மக்களுக்கு கொடுத்து பயனில்லை. ஒரு செய்தியாவது மக்களுக்கு அதன் பயன்கள் இருக்கும்படியாக எத்தனை பத்திரிகைகள் கொடுக்கிறது? அதுவாவது இந்த செய்தி துறைக்கு புரியுமா? செய்தியாளர்களுக்காவது தெரியுமா? மேலும்,
இந்த பத்திரிகைகள் நீங்கள் பேசுவதை எல்லாம் செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியைை தின்னையில் படுத்து இருந்தவருக்கு யோகம் அடித்துவிட்டது என்கிறார். அவர் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியில் வந்தேன். எங்க அப்பா பெயரை நான் அரசியலில் பயன்படுத்தவில்லை.

நீங்கள் பயன்படுத்தினால் என்ன? பயன்படுத்தாவிட்டால் என்ன ?இதையெல்லாம் மக்கள் கேட்டார்களா? நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்தது என்று யார் கேட்டது?
அதேபோல், எடப்பாடி பழனிசாமி என்னுடைய ஒரு முகத்தை தான் பார்த்திருப்பீர்கள் .எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இந்த முகத்தை எல்லாம் யார் கேட்டது?
இது எல்லாம் வெத்து வெட்டு பேச்சுக்கள். இதுவும் செய்தி என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள், சோசியல் மீடியாக்களும், தொலைக்காட்சிகளும், இது செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் உங்களுடைய நேர்மை என்ன? உங்களின் சமூகப் பணி என்ன? இதுவரை செய்தீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவுதான் கேள்வி ?இதற்குள் உங்களுடைய அரசியல் அடங்கிவிட்டது.
ஆனால், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் விமர்சனங்கள் அதுவும் செய்தி என்று பத்திரிகைகளும் ,தொலைக்காட்சிகளும், சோசியல் மீடியாக்களும், என்று ஆக்கிரமித்து மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த விஷயத்தில் விஜய் எவ்வளவோ மேல் ,அவர் யாருடைய சொந்த தனிப்பட்ட, விஷயங்களை பொது வெளியில் பேசவில்லை.

மேலும்,அரசியலில் எதைப் பேச வேண்டுமோ ,அதை மட்டுமே பேசி இருக்கிறார், பேசுகிறார். ஆனால், இவர்கள் தான் அவருக்கு என்ன தெரியும்? இவருக்கு என்ன தெரியும்? நீங்கள் தெரிந்து இதுவரை உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் என்ன மக்களுக்கு செய்திருக்கிறீர்கள்? உங்களுடைய அரசியல் நேர்மை என்ன? இதை காட்டுங்கள். இதுதான் தேவை.
அதை விட்டு,விட்டு பத்திரிகைகள் மக்களை ஏமாற்றுவது போல, அரசியல் தெரியாதவர்களை அரசியல் கட்சியினர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.மேலும், உங்கள் சொந்த வாழ்க்கையை மக்கள் யாருமே கேட்பதில்லை. கேட்டதும் இல்லை. ஆனால்
இப்போது தான் சொந்த வாழ்க்கையைப் பற்றி, தேவையில்லாத விஷயங்களை பேசி மக்களை முட்டாளாக்குகிறார்கள்.மேலும்,

அரசியல் நாகரீகம் பற்றி பத்திரிகைகளும் ,அரசியல்வாதிகளும் படிக்க வேண்டும். நாகரீகம் அற்ற அரசியல் பேச்சுக்கள் அதிகளவில் இருக்கிறது. .
ஊரை ஏமாற்றுவதற்கு ,இந்த நாகரிகமற்ற அரசியல் பேச்சுகளா? கொள்ளையடிப்பதற்கு நாகரீகம் அற்ற அரசியல் பேச்சுகள், அரசியல் தெரியாத மக்களிடம், ஏமாற்றுவதற்கு நன்றாக வசதியாக தான் இருக்கிறது. தவிர,

இதனால், தகுதியான அரசியல்வாதிகள், அரசியலுக்கு வருவதற்கு வெட்கப்படுகிறார்கள் வேதனைப்படுகிறார்கள். இவ்வளவு கேவலமாக அரசியலை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார்களே என்று அவர்கள் புலம்புகிறார்கள்.
மேலும்,அரசியல் கவுரவமானது .நேர்மையானது மக்களுக்கானது. ஆனால், இப்போது அரசியல் கௌரவம் என்றால் என்ன? என்று கேட்கும் அளவில் இருக்கிறது. அரசியலில் நேர்மை என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறது. அரசியல் மக்களுக்கு தானா? இல்லை இவர்களுக்கு தானா? என்று தெரியாமல் இருக்கிறது.

இதையெல்லாம் விட பத்திரிகைகள் அதனுடைய நோக்கம் தெரியாமல் இவர்கள் கட்சியை வளர்த்துக் கொள்வதற்கு நடத்தக்கூடிய பத்திரிகைகள் கூட பத்திரிகை என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் சோசியல் மீடியாக்கள், யூடியூபர்கள், நானும் பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் பத்திரிகையின் நோக்கம் ?தெரியாமல் தவறான கருத்துக்களை, ஒருவரை பற்றிய ஒருவர் விமர்சனங்களை ,இவர்கள் பத்திரிக்கை செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி மத்திய, மாநில அரசின் செய்தித்துறை இதற்கெல்லாம், ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, இவர்களுக்கு பஸ் பாஸ், விளம்பரங்கள் ,மக்களின் வரிப்பணத்தில், கொடுத்து கோடிக்கணக்கில் வீணடித்து கொண்டிருக்கிறார்கள். எனவே,

நீதித்துறை நாட்டு மக்களின் நலன் கருதி, நீதிபதிகள் எத்தனையோ வழக்குகள் சூமோட்டவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால்,நாட்டின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய ஒரு பத்திரிக்கை துறையில் அரசியலின் அவலங்களை எடுத்துச் சொல்லக்கூடிய பத்திரிக்கை துறையில் இவ்வளவு மோசமான விஷயங்கள் சரி செய்யாமல் எப்படி அரசியல் மக்களுக்காகவும், பொது நலனுக்காகவும் இருக்கும்? என்பதை சிந்தித்து நீதிபதிகள்,
இது குறித்து மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு சூமோட்டோவாக வழக்கை பதிவு செய்து ,ஆய்வறிக்கை கேட்கலாமே,
மேலும், சமூக நலனுக்காக இருக்கக்கூடிய பத்திரிகைகள் எவ்வளவு? அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள் எவ்வளவு? வியாபார பத்திரிகைகள் எவ்வளவு? இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் எத்தனை கோடி செலவு செய்கிறீர்கள்? இதனால் மக்களுக்கு என்ன பயன்கள்? இந்தக் கேள்வி நீதித்துறை கேட்டாலே மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஆடிப் போய் விடுவார்கள்.

இவர்கள் ஒரே வரியில் சொல்வார்கள், சர்குலேஷன் சட்டத்தை வைத்து, நாங்கள் பத்திரிகையை தரம் பிரிக்கிறோம். முட்டாள் கூட இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவுக்கும், உண்மைக்கும் பத்திரிக்கையா? இல்லை 10000, 20,000 ஆயிரம் பிரதிகளில் செய்திகளின் நோக்கம் தவறாக இருந்தால் அது பத்திரிக்கையா?
மேலும், பத்திரிக்கை வியாபாரம் சார்ந்தும்,அரசியல் கட்சி சார்ந்தும் இருந்தால், அங்கே மக்களுக்கு ஆனா நோக்கம் அடிபட்டு போய் விடுகிறது. .

நீ எதையோ ஒரு செய்தியை போட்டு ,இதுதான் செய்தி என்று மக்களை ஏமாற்றுவதற்கு, உனக்கு ஏன் ?இந்த வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள்?
இதை தான், மக்கள் அதிகாரம் தொடர்ந்து இந்த பத்திரிகை துறை தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உண்மைகள் மக்களிடம் சென்றடையவில்லை. அரசியல் நோக்கம், அதன் பயன்கள், எது என்று தெரியாமல், மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, தற்போது ஒரு அரசியல் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டினாலும், இன்னொரு அரசியல் கட்சியினர், அதைப்பற்றி விமர்சனம் செய்கிறார்கள். இது எல்லாம் பத்திரிக்கைக்கு தேவையற்ற வேலை.
இது தவிர, அவர்கள் என்ன சொல்கிறார்களோ ,அதை எல்லாம் செய்தி என்று சோசியல் மீடியாவில் பத்திரிக்கையாகவும், பத்திரிகையாளர்களாகவும், பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ஊழல்வாதிகளையும், ஊழலையும் நியாயப்படுத்துகிற பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு கூட மக்களின் வரிப்பணம் கோடி கணக்கில் வீணடிக்கப்படுகிறது.
மேலும்,நாட்டுக்கு எதிராக செய்திகளையும் ,சமூகத்திற்கு எதிரான செய்திகளையும், கருத்துக்களையும் ,வெளியிடுகின்ற பத்திரிகைகளுக்கு கூட ,இந்த செய்தி துறை அங்கீகாரம் கொடுத்து அதையும் பத்திரிகை என்று சொல்கிறது என்றால், இதைவிட வெட்கக்கேடானது எதுவுமே இல்லை. .

மேலும், தற்போது சர்குலேசனே எல்லா பத்திரிகைகளிலும் மிகவும் குறைந்து விட்டது. அப்படி இருக்கும்போது ,செய்தித்துறை எப்படி சர்குலேஷன் சட்டத்தை வைத்து, இந்த சலுகை, விளம்பரங்களை கொடுத்து கொண்டு இருக்கிறது ?இவர்கள் பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பத்திரிகைகள் மக்களை முட்டாளாக்குகிறது. இன்னொரு பக்கம் செய்தி துறை பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
மேலும்,இன்று இணையதள பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் பார்வையாளர்களை சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும். அதிலும் செய்தியின் தரம், சமூக நோக்கம், முக்கியத்துவமானது.மேலும்,

இதையெல்லாம் செய்தித்துறை அதிகாரிகள் என்ன? என்று கூட தெரியாமல் ,சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசு வேலை கிடைத்துவிட்டது என்று அரசியல்வாதிகள் போல, ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,அரசு செய்தி போடுவதற்கு மட்டுமே , பல 100 கோடி பத்திரிக்கை துறையில் செலவு செய்யப்படுகிறதா? அரசு செய்தி எத்தனை செய்திகள் ?ஒரு நாளைக்கு ஒவ்வொரு பத்திரிக்கையும் எத்தனை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அவை அத்தனையும் மக்களிடம் போய் சென்றடைந்ததா?

இந்த கேள்வியெல்லாம் ,நீதித்துறை கேட்டால், இவர்களால் பதில் சொல்லவே முடியாது. காரணம்,இதற்குள் இருக்கின்ற அரசியல் !சுயநலமான அரசியல். இந்த சுயநலமான அரசியலுக்கு, கொடை பிடித்து, வெண்சாமரம் வீசி சலுகை ,விளம்பரங்களை மக்களுடைய வரிப்பணத்தில் வீணடித்துக் கொண்டிருக்கும் செய்தி துறை பொதுநலமில்லாமல் செயல்படும் போது, எப்படி பத்திரிகைகளை அங்கீகரிக்கிறது??

இதன் சுயநலத்திற்கு பத்திரிகைகளை அங்கீகரிக்கிறார்களா? அல்லது மக்களின் பொதுநலத்திற்கு பத்திரிக்கை என்று அங்கீகரிக்கிறார்களா? எப்படி அங்கீகரித்து?அதற்கான சலுகை, விளம்பரங்களை செய்தித்துறை தீர்மானிக்கிறது?
இந்தக் கேள்விக்கு எல்லாம் நீதிமன்றம் பதில் கேட்டாலே, மத்திய மாநில அரசின் செய்தித்துறை ஆடிப் போய் விடுவார்கள்.
அப்போது தான் இந்த பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய அவலங்கள் ! மோசடிகள், ஊழல்கள்,மக்களுக்கு நீதிமன்றத்தின் பொதுநல நோக்குடன் சுமோடோ வழக்காக எடுத்துக் கொண்டால், உண்மை புரியவரும் . மேலும்,இதற்குள் இருக்கிற அரசியல் என்னவென்று மக்களுக்கும் தெரியவரும்.

எனவே ,இனி நீதிமன்றத்திற்கு இந்த உண்மை நன்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும், நீதித்துறை இது பற்றி சூமோட்டோ வழக்காக எடுக்க வேண்டும் என்பது தான் சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.