
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.

மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர,
அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு, இருப்பீர்கள். நீங்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று சொன்னால், மக்கள் முட்டாளாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? இவர்கள் பத்திரிகையாளர்களா? இல்லை, அவர்களுடைய எடுப்புகளா?
மக்களுக்காக திமுக ஆட்சியில் செய்தது என்ன? பெண்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து பத்தாயிரம் ரூபாய் அவர்களிடம் பிடுங்கியது இலவசமா?ஒரு விஷயத்தையாவது மக்களுக்காக செய்தார்களா? ஓட்டுக்காக? வெளி வேஷத்திற்காக? தங்களுடைய சொந்த ,சுயநலத்திற்காக அரசியலில் கொள்ளையடிக்க, அராஜக அரசியலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? இப்போது குதிரை பேரம் நடக்கிறது .அதிமுகவில் இருந்து ஐந்து எம்எல்ஏ ராஜினாமா செய்கிறார்கள் .அது அவர்களுடைய விருப்பம் .அதிமுகவிலிருந்து, திமுகவுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஓடி வந்தார்கள்? எத்தனை கட்சிக்காரர்கள் ஓடி இருக்கிறார்கள் ? அப்போது குதிரை பேரும் நடக்கவில்லையா?அப்போதெல்லாம் எங்கே போயிருந்தீர்கள்?
மேலும்,அரசியல் என்பது வியாபாரமும் ,சுயநலமும் ,அதிகாரமும் ,பேராசை கொண்ட இடமாக மாறிவிட்டது. இந்தப் போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் வீழ்த்தப்படுகிறார்கள்? அதிகாரம் கையில் இருக்கும் போது, மக்களுக்காக பேசக் கூடிய ஊடகங்களுக்கு கூட திமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை.
ஆனால், இவர்களுக்காக பேசக்கூடிய ஊடகங்களுக்கு மட்டும் தான் இவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு ஆட்சியை மனசாட்சிப்படியாவது இருக்க வேண்டும் சட்டப்படியாவது இருக்க வேண்டும் ஆனால் ,ஸ்டாலின் ஆட்சி! அதில் எதிலுமே இல்லை. அப்படிப்பட்ட ஆட்சி எல்லாம் பாராட்டிக் கொண்டிருந்தது, இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள். இந்த போலி பத்திரிகையாளர்கள் கூட்டம்.

எனவே,இவர்களெல்லாம் மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லும் இதே ஷியாம் எனக்கு தெரியும். நான் அவரிடம் பணியாற்றி இருக்கிறேன் .இருப்பினும், இப்போது அவர் பேசுகின்ற பேச்சை ,மனசாட்சி உள்ள பத்திரிகையாளன் ஏற்றுக்கொள்ள மாட்டான். நீங்கள் மறைமுகமாக விலை போய்க் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்களே அப்படி என்றால், விலை போனவர்களை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. அவர்கள் விலை போனார்களா? இல்லை குதிரை பேரம் நடத்துகிறார்களா? என்று செய்தி போடுவதற்கே இந்த கார்ப்பரேட் ஊடகங்களுக்கு தகுதி இல்லை.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பேக்கேஜ் நியூஸ் என்று அதிமுக ,திமுக வேட்பாளர்களிடம் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 2 to 3 கோடி வருமானம் சம்பாதித்து இருக்கிறீர்கள் .அதற்கு எந்த பில்லும் இல்லை .எல்லாம் நிருபர்கள் கணக்கில் வரவு வைத்து ,அதை இவர்களுக்கு கமிஷன் போக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு போய் சேர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு மோசடி பத்திரிக்கை வியாபாரத்தை கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் நடத்திக்கொண்டு ,இவர்கள் குதிரை பேரம், இந்த பேரம் ,அந்த பேரம், அந்த வியாபாரம் ,என்று சொல்வதற்கு தகுதி கூட கிடையாது. மக்களை முட்டாளாக்குவதற்கு இது போன்ற அரசியல் கட்சி கைக்கூலிகளை வைத்து, யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
மேலும்,பத்திரிகை என்றால் தெரியாதவன், படிக்காதவனிடம் இதை எல்லாம் பேச வேண்டும். ஏதோ இந்த தொலைக்காட்சி, கார்ப்பரேட் பத்திரிக்கை முதலீடு தொகை அதிகமாக இருக்கலாம் .ஆனால், உண்மை எங்கே இருக்கிறது? இது ஒரு போலியான பத்திரிகை வியாபார அரசியல் பிம்பம் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் தான் இதை எழுதி வருகிறது. மக்களே இது உண்மையா? இல்லையா? என்று நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்.

மேலும்,திமுக ஆட்சியில் ,பாலியல் வன் கொடுமையில் பெண்களும், குழந்தைகளும், பாதிக்கப்படும்போது அந்த குற்றவாளிகளுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு கொடுத்தார்கள். அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்து, நாடகம் ஆடிக் கொண்டிருந்தார்கள் .
அப்போதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? இப்போதும், அது நடக்கிறது நடந்தாலும் ,அதற்கான நடவடிக்கை விஜய் எடுக்கிறார் .அதைப் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு குடும்பத்தில் ,ஆயிரம் இடத்தில் பவர் சென்டர் வைத்துக் கொண்டு, ஊழல் செய்து கொண்டிருந்தாலும், அவர் நல்ல ஆட்சி கொடுத்தவர் என்று இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள் .

அதை எல்லாம் மக்கள் முட்டாளாக, பைத்தியக்காரர்களாக ,பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த தொலைக்காட்சிகளில், ஒரு மியூசிக் சவுண்ட் ஒன்னு போட்டு விடுவார்கள். அதாவது இந்த செய்திகளை பார்க்கும்போது, என்னவோ, அது ஒரு உண்மையான ஒரு பெரிய கருத்தை மக்கள் மத்தியில் இவர்கள், கொண்டு போய் பரப்பி, சேர்த்து விடுவது போல, ஒரு கிரியேட்டிவிட்டி காண்பிப்பார்கள்.
இதையெல்லாம் நானும் தொலைக்காட்சியில் நிருபராக வேலை செய்து இருக்கிறேன். அப்போது இதையெல்லாம் நான் படிக்கவில்லை. இப்போது நான் படித்துக் கொண்டேன்.
அதனால், மக்கள் உண்மை எந்த ஊடகத்தில் வந்தாலும் ,அதை படித்து புரிந்து கொள்ளுங்கள். இந்த போலியான லேபிள் வைத்து, பத்திரிக்கை பிம்பத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறார்கள். அதில் ஏமாந்து விடாதீர்கள் .உண்மையை மட்டும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். மக்களுக்கே தெரியும் .

நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை. மக்கள் வெறுப்பு அரசியலை திமுக தொடர்ந்து செய்து வந்துள்ளது. அதன் எதிரொலி தான், மக்களின் மாற்றம் என்று தொடர்ந்து எழுதி இருக்கிறேன்.
உண்மையை எழுதினேன். அந்த நிறைவு ,சந்தோஷம் எனக்கு போதும். யாருக்கும் கைக் கூலியாக நான் பத்திரிக்கை நடத்தவில்லை. அதனால் தான் ,இப்போதும் இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு தேர்வு செய்து, தமிழக முதலமைச்சர் அதற்கான உரிமையை கேட்க போராடுகிறோம். கோரிக்கை வைத்திருக்கிறோம்.
எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும், உரிமைப் பிரச்சனை என்று ,ஒன்று உண்டு .அது அரசியலாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், பத்திரிக்கையாக இருந்தாலும், அவர், அவர்களின் உரிமை பிரச்சனை மிக முக்கியமானது. அந்த உரிமைப் பிரச்சினையில் ,அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடத்தில் இருந்து, அவர்கள் வேறு இடத்திற்கு போக தான் செய்வார்கள்.
அப்படித்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எம்எல்ஏவாக ஜெயித்து என்ன பிரயோஜனம்? அதனால், அவர்கள் தவெக வில் இணைந்து, தங்களுக்கு எந்த பக்கம் பலம் இருக்கிறதோ, அந்த பக்கம் சாய்ந்து கொள்கிறார்கள் .இவ்வளவுதான் .இது எல்லாம் இயற்கை.

மேலும்,இப்போது எடப்பாடி பழனிசாமியின் கனவு தகர்த்தெறியப்படுகிறது .திமுகவின் கனவு தகர்த்து எறியப்படுகிறது. இவர்களுடைய கனவு என்ன ?தொடர்ந்து மக்கள் முட்டாளாக இருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் ஊடகங்கள் ,மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்க வேண்டும். இதுதான் இவர்களுடைய அரசியல் பிம்பம்.
இது எத்தனை நாளைக்கு? உங்கள் ஆதாயத்திற்காக ?நீங்கள் எப்படியும் பேசலாம் .ஆனால் ,அடுத்தவர்கள் ஆதாயத்திற்காக அவர்கள் பேசக்கூடாது. இது என்ன சட்டம்? நீங்கள் சட்டப்படி முதலில் நடக்கிறீர்களா? நீங்கள் நடக்காத போது அந்த சட்டத்தை பற்றி பேசவே தகுதி இல்லை.

மேலும்,நீங்கள் சட்டத்தை மதிக்க மாட்டீர்கள் .ஆனால், அதே சட்டத்தை இன்னொருவன் மதிக்காத போது, நீங்கள் கேள்வி கேட்பதற்கு, தகுதி இல்லை. நீங்கள் எல்லாம் சட்டப்படி, மனசாட்சிப்படி, மக்களின் எண்ணப்படி ,அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தாரா? இல்லை திமுக ஸ்டாலின் ஆட்சி செய்தாரா? இதற்கு பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ,பதில் சொல்ல முடியுமா?
