மக்களின் உயிரை வாழ வைப்பது உணவு !இந்த உணவு தரமானதாக கொடுப்பது அரசின் கடமை அல்லவா? ஐந்தாண்டு காலத்தில்! திமுக ஆட்சியில் ,இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தது உண்டா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக ஆட்சி ,முடியும் தருவாயில் மக்களுக்கு எது முக்கியம்? என்பது கூட தெரியாமல் ,ஆட்சி நடத்தி விட்டார்கள்.

ஒரு மனிதனுக்கு உணவு தான் முதல் தேவை .அடுத்தது உடை ,இருக்க இருப்பிடம், இதன் பிறகு தான் மற்றவை .அவ்வளவு முக்கியமான ஒரு உணவு பொருளை மக்களுக்கு எப்படி தரமானதாக தர வேண்டும்? என்பதை திமுக ஆட்சியில் மறந்து விட்டார்கள்.மேலும்,

சாமானிய ஏழை, நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய ஓட்டல்கள் முதல் பணக்காரர்கள் சாப்பிடக்கூடிய ஹோட்டல்கள் வரை இன்று உணவு என்பது நஞ்சு ஆகிவிட்டது. பணம் தான் தரத்திற்கு அதிகமாக மக்கள் வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.தவிர,

கொடுக்கப்பட்ட விலைக்கு தரமான பொருட்கள் எந்த ஓட்டல்களிலும் கொடுப்பதில்லை. ஆனால், சில மாவட்டங்களில், ஓரளவுக்கு சாப்பிட்டதில் நன்றாகத் தான் இருந்தது. ஏனென்றால், எதில் வேண்டுமானாலும், குற்றமோ, குறையோ, சொல்லிவிட்டு போகலாம். ஆனால், வயிற்றுக்கு சாப்பிடக்கூடிய உணவை ஒருவன் தவறாக சொல்லக்கூடாது. அது மனசாட்சிக்கு விரோதமானது.

மேலும்,திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த அளவில் தலைநகரங்களில் ஏதோ ஒரு சில ஓட்டல்கள் தான், அந்த ஓட்டலில் கூட சாப்பிட பயமாகத்தான் இருக்கிறது. நான் சாப்பிட்ட ஹோட்டல்களில் சங்கீதா பரவாயில்லை. சில இடங்களில் கையேந்தி பவன்களில் கூட சாப்பிட்டு இருக்கிறேன் .அது கூட பரவாயில்லை .நன்றாக இருக்கிறது.

மேலும்,சென்னையிலும் பார்த்து, பார்த்து ,சாப்பிட வேண்டி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், பார்த்து ,பார்த்து சாப்பிட வேண்டியிருக்கிறது. மதுரை மாவட்டம் பரவாயில்லை. நாமக்கல் சுமார் தான். அதுவும் தரமானதாக தெரியவில்லை. சேலம் உணவுக்கு பேர் போன மாவட்டம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை தரம் மராமல் தான் அங்கெல்லாம் இருக்கிறது. மேலும்,

ஒரு சில டீக்கடைகளில் பஜ்ஜி, போண்டா போட்டு விற்கக்கூடிய வியாபாரிகள், அதில் பிழிந்தால் , எண்ணெய் வருகிறது. அந்த அளவுக்கு எண்ணெய் தரமானதாக இல்லை. கேட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் ?என்றால், என்னை தரமானதாக வரவில்லை.

எல்லாம் கலப்பட எண்ணெயாக தான் வருகிறது என்கிறார்கள். இப்படி உணவுப் பொருட்களில் கலப்படம் .இதனால் ,ஏற்படக்கூடிய பின் விளைவு பற்றி மக்கள் சிந்திக்கவில்லை. ஆட்சியாளர்களும் அது பற்றி கவலைப்படவில்லை. மேலும்,இன்று புதுப்புது நோய்கள் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம்? இது போன்ற கலப்பட உணவுகள் முக்கிய காரணம். அடுத்தது வெஜிடேரியன் ஹோட்டல்களே இந்த நிலைமை என்றால் ,அசைவ உணவு ஹோட்டல்கள்! அது எந்த நிலைமை என்பது சிந்தியுங்கள்?

மேலும்,மாமிசத்தை ஒருநாள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும், சமைத்த மாமிசத்தை மறுநாள் சாப்பிட்டாலும் ,அவை அத்தனையும் உடலுக்கு விஷம் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தவிர,இன்று பாமாயில் போன்ற தரமற்ற எண்ணெய்களால் கொலஸ்ட்ரால் உடலுக்கு அதிகப் படுத்துகிறது. அதுமட்டுமல்ல,இன்றைய இளைஞர்களுக்கு அதிக அளவு தொப்பையை அது உருவாக்குகிறது. கடந்த காலங்களில் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, நிம்மதியாக வாழ்ந்ததற்கு, இந்த கலப்படம் இல்லாத உணவு பொருட்கள் ,ஹோட்டல் உணவகங்கள் முக்கியமானது என்பதை அதை சாப்பிட்ட எங்களைப் போன்றவருக்கு தெரிந்த உண்மை.

ஆனால், இப்போது எந்த ஹோட்டல் உணவகங்களில் சாப்பிட்டாலும், சுவையும் இல்லை, தரமும் இல்லை, ஆனால், பணம் மட்டும் அதிகமாகவே இருக்கிறது. அந்த காலத்தில் ஹோட்டல் முதலாளிகள் மக்கள் சாப்பிட்டு நம்முடைய ஓட்டலை பற்றி நாலு பேர்கிட்ட பெருமையா பேசணும் அப்படி என்ற கௌரவத்திற்காக ஓட்டல் நடத்தினார்கள். ஆனால்,

இப்போது பணத்திற்காக ஓட்டல் நடத்துகிறார்கள். இவன் என்ன கொண்டு வந்து வைத்தாலும், அவன் தலையெழுத்து சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும். காரணம் பசி, எதோ ஒன்று சாப்பிட வேண்டும். அந்த நேரத்திற்கு வேறு வழி இல்லை. என்று சாப்பிடும் போது இந்த ஓட்டல் முதலாளிகள் தரத்தை பற்றியோ சுவையைப் பற்றியோ சுத்தமான பொருட்களை பற்றியோ கவலைப்படுவதில்லை. பணத்தை மட்டும் தான் பார்க்கிறார்கள்.

மேலும்,ஒரு சில மாதங்களுக்கு முன்பு ,பெரிய ஓட்டல் என்றுதான் காஞ்சிபுரத்தில் சாப்பிட்டேன். சாப்பாடு பில்லை பார்த்தால் Rs :184/- ஜிஎஸ்டி ஓட வந்திருக்கிறது. ஆனால், ஒரு பொறியியல் கூட்டு கூட சுவையாகவும் தரமானதாகவோ இல்லை. சாம்பார் கூட சுவைத்து சாப்பிடும் அளவுக்கு இல்லை. அந்த அளவுக்கு ஹோட்டல் உணவகங்களின் நிலைமை இருக்கிறது.

அதனால், இந்த ஹோட்டல் நிர்வாகங்கள் பற்றி திமுக ஆட்சியில்! எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களுக்கு இதனால், ஏற்படக்கூடிய பின் விளைவுகளும் ,உடல் ஆரோக்கியத்தை பற்றியும், கவலைப்படவில்லை.

தரமான உணவு, ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் ,நீண்ட நாள் உயிர் வாழலாம். மருத்துவமனைக்கு அதிகம் செல்ல வேண்டியதில்லை. தவிர,தற்போது கூட பொதுமக்களில் ஒருவர் சொன்னார் ,இப்போது எல்லாம் 35 ,40 வயது கூட தாண்டமாட்டுகிரார்கள். ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறார்கள் என்கின்றனர்.

இது தவிர ,டாஸ்மாக், போதை பொருட்கள், இவ்வளவும் தாண்டி மனிதன் எப்படி ஆரோக்கியமாக வாழ்வான்? நோய் இன்றி எப்படி வாழ்வான்? நீண்ட நாள் வாழ்வான்? மனிதனுடைய வாழ்க்கையின் ஆயுளேயே ,திமுக ஆட்சியில் குறைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இது உண்மையா? பொய்யா ?என்பதை நீங்களே சிந்தியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *