
நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக ஒத்து ஊதிவிட்டு, இவர்களும் ஊழலுக்காக போராடுவது போல் பாவலா செய்கிறார்கள். மக்களிடம் ஊழல் அரசியல்வாதிகள் தங்களை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்வது போல் அவர்களோடு சேர்ந்து இவர்களும் ஊழலுக்கு எதிராக போராடுவது போல் காட்டிக் கொள்கிறார்கள்.மேலும்,

மக்களிடம் நல்லவர்களாக வேஷம் போடும் அரசியல் கட்சியினருக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் எப்படி வரும்? அரசியல் என்பது வியாபாரமா? அல்லது கொள்ளை அடிப்பதா?
மேலும்,இது இரண்டுக்கும் மக்களுக்கு பதில் தெரிந்தாலே, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களுக்காக அரசியலா? அல்லது அரசியல் கட்சியினருக்கா? ஆட்சி ஆள ! அதிகாரத்தை கொடுக்கின்ற மக்களுக்கா? யாருக்கு அரசியல்? அதனால்,தான் அரசியல்! பொதுநலமாக இல்லாமல், இவர்களின் சுயநலத்திற்கு அரசியலாக்கி விட்டார்கள்.

மேலும், அரசியல் கட்சியினரின்,அரசியல்! சுயநலமாகும் போது, உழைக்காமல் பல கோடிகளை கொள்ளையடிக்கும் வியாபாரமாக, அரசியலை மாற்றி விட்டார்கள் . எந்த தொழிலும் தெரியாது .படிப்பும் இல்லை. எப்படி பல்லாயிரம் கோடி சொத்துக்கள் இவர்களுக்கு வரும்? இந்த ஊழலை கார்ப்பரேட் மீடியாக்கள் நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் மக்கள் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், அதன் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். மேலும்,
இப்படிப்பட்ட ஊழலை நாட்டில், களை எடுக்க வேண்டுமென்றால், சலுகை, விளம்பரங்கள் கார்ப்பரேட் மீடியாக்கள் ,தங்களுடைய சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்,தான்!

இன்று வரை இந்த மீடியாக்களின் முன்னாள் நின்று பேட்டி கொடுக்காதவர்கள் பிரதமர் நரேந்திர மோடியும், தற்போது புதியதாக வந்துள்ள தமிழக முதல்வர் விஜய்யும் மட்டுமே! ஒருவேளை இவர்கள் இருவருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்குமா?

மேலும்,நடிப்பு அரசியலை மக்களுக்கு கொடுப்பவர்கள் தான் மக்களிடம் கார்ப்பரேட் மீடியாக்களிடம் நடிக்க வேண்டும். மக்களுக்காக அரசியல் நிலைப்பாட்டை எடுத்த பிரதமர் நரேந்திர மோடியும், விஜயும் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளிடம் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை முதல்வர் விஜய்க்கு ,சமூக நலன் பத்திரிகைகள் தெரிவிக்கும் உண்மை. எனவே,

நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள், அரசியல் கட்சிகள், மற்றும் கட்சியினருக்காக மட்டுமே தான் அரசியல் என்று வியாபார அரசியலை இதன் மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தகுதியான பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
மேலும், இந்த வியாபார அரசியலுக்கு செய்தித் துறையில் கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள், நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக மறைமுகமாக வளர்ப்பதற்கே அது துணை போகிறது. தவிர,இது பற்றி ,ஒரு தகுதியான ஜர்னலிஸ்ட் களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

மேலும்,கூலிக்கு மாரடைக்கிற கார்ப்பரேட் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு இது தெரியாது. காரணம் அவர்களுக்கு கார்ப்பரேட் பத்திரிகையின் பெயரே செய்தியின் முக்கியத்துவம் என்று இந்த நிருபர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மேலும்,
ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அவர்கள் கட்சியினருக்கும், ஊழல் வழக்குகள் அவர்கள் மீது போய்க்கொண்டிருந்தாலும் அவர்களை நல்லவர்களாக வல்லவர்களாக காட்டக்கூடிய இந்த போலியான பத்திரிக்கை துன்பம் தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து எதிர்க்கிறது .

மேலும்,இதனால் மக்களுக்கு யார் உண்மையானவர்கள்? யார் போலியான அரசியல்வாதிகள்? என்ற வித்தியாசம் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த ஏமாற்றம் தான் நாட்டில் ஊழலை ஊக்கிவிக்கும் ரகசிய அரசியல்! இப்போது புரிகிறதா?
மேலும், அரசியலில் வெளிப்படத் தன்மை இல்லாமல் இருப்பதற்கு இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மிக முக்கிய காரணம். அதனால்தான் தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்கு இந்த சலுகை விளம்பரங்கள், ஊழல் ஆட்சியும் மக்களுக்கு எதிரான ஆட்சியும் நடத்தி வந்த ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு வந்துள்ளது .

மேலும், நாட்டில் எவ்வளவு சட்டங்கள் இவர்களுக்காக மாற்றி இருக்கும் போது, ஏன் இந்த சட்டத்தை மாற்ற முடியாதா? ஏன் மாற்றவில்லை? இவர்கள் மக்களை கொள்ளை அடிக்க இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மறைமுகமாக ஓத்து ஊதுகிறது.
அதனால் தான் இந்த பத்திரிகைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் ,ஒவ்வொரு வருடத்திற்கும், பல நூறு கோடிகள் செய்தித்துறை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இவர்களுக்கு கமிஷன் 30% வருமானம் கிடைக்கிறது.

அதனால் ஆதாயம் அரசியல் கட்சியினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் செய்தித் துறை அதிகாரிகளுக்கும், மட்டுமே இருக்கிறது என்றால், ஏன் இந்த பாலிசியை எடுப்பார்கள்? மக்களுக்காக ஆட்சி நடத்துபவர்களாக இருந்தால்! அவர்கள் தான் இந்த பாலிசியை எடுப்பார்கள்.
மேலும்,இவர்களுக்காக ஆட்சியும், இவர்கள் ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்கும், ஆட்சி நடத்துபவர்கள் எப்படி இந்த தவறான ஒரு பாலிசியை அதாவது சர்குலேஷன் என்ற சட்டத்தை வைத்து, பத்திரிக்கை துறையை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர,இந்த தவறான சர்க்குலேஷன் அரசின் விதிமுறையை மத்திய அரசும், மாநில அரசும் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், இணையதள பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் . அதன் செய்திகள் மற்றும் மக்களிடம் அதன் பார்வையாளர்கள் இது மட்டுமே சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்.
மேலும், மக்களுக்கான ஆட்சியும், ஊழலற்ற நிர்வாகத்தையும், மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மக்களுக்கான ஆட்சியை கொடுக்க தீர்மானத்திற்கும் தமிழக முதல்வர் விஜய் இந்த போலியான சர்குலேஷன் சட்ட விதிமுறையில் மாற்றம் கொண்டு வருவாரா?
அப்படி கொண்டு வந்தால், ஊழல்வாதிகளும், அரசியல் கட்சி ரவுடிகளும், தங்களை நேர்மையானவர்களாக மக்களிடம் இந்த தொலைக்காட்சிகளில் நடிக்க முடியாது. ஆக கூடி நல்லவர்களாக நடிப்பதற்கு இந்த தொலைக்காட்சி பத்திரிகைகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலியான பத்திரிகை பிம்பம்.

மேலும்,இதை ஒழிக்காமல், மக்களுக்கான அரசியல் கொடுக்க வரும், அரசியல் கட்சியினருக்கு இவர்கள் தொடர்ந்து போராட்டங்களையும், மக்களிடம் பொய்களையும் பரப்பிக் கொண்டு, சமூகத்திற்கும், நாட்டுக்கும், முன்னேற்றம் இல்லாமல் இவர்களுக்காக முன்னேற்றத்தை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
எனவே,நாட்டில் மக்களுக்கான ஆட்சியை தமிழக முதல்வர் விஜய் கொடுக்க வேண்டுமென்றால், முதலில் இந்த வியாபார பத்திரிகைகளுக்கும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும் ,சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

மேலும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு! மட்டுமே இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுத்து மக்களின் கோடிக்கணக்கான வரி பணத்தை வீணடிப்பது தவிர்க்க வேண்டும்.
இது தவிர, அரசின் விளம்பரங்கள் எதற்காக ஏஜெண்ட்களிடம் செய்தித் துறை இதனால் வரை கொடுத்து வந்தார்கள்? ஏன் அதை நேரடியாக கொடுக்க முடியாதா? அப்படி கொடுத்தால் தான், இவர்களுக்கு 30% கமிஷன் வரும்.
எனவே, பத்திரிக்கை துறையில் இந்த மாற்றம் !சமூகத்தின் மாற்றம், நாட்டின் முன்னேற்றம்! இப்படிப்பட்ட முக்கியத்துவமான மாற்றத்தை நமது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா? – தமிழக சமூகநலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.
