
பத்திரிகையாளர்கள் மீது, பத்திரிகைகள் மீது, வைகோ எப்படியெல்லாம் ஏளனமாக பேசுகிறார்?ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல், நீ மஞ்சள் பத்திரிகையா? எந்த பத்திரிக்கை ?உனக்கு பதில் சொல்ல முடியாது . மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வைகோ! மஞ்ச பத்திரிகை என்றால்! முறைப்படி மத்திய அரசின் பதிவு (RNI )சான்று வாங்காமல் ,பத்திரிகை நடத்தும் பத்திரிகைகளுக்கு தான் மஞ்ச பத்திரிக்கை வை.கோ.

மேலும், உங்களைப் போன்ற திராவிட அரசியல்! இனியும் தமிழ்நாட்டில் தவெக கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களம் கண்டால் கூட, ஜெயிக்க முடியாது.தோல்வி நிச்சயம்.
மேலும், கருப்பு பணத்தில், பத்திரிக்கை, தொலைக்காட்சி ஆரம்பித்து விட்டு, அவர்கள் ஊழலுக்கு ஒத்து ஊதுவார்களா ?அல்லது ஊழலுக்கு எதிராக போராடுவார்களா? வை.கோ. அதனால், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க தகுதி இல்லாத நீ! என்ன பத்திரிக்கை? என்ற கேள்வி தவறானது.
பத்திரிகை பெயர் சொன்னால் தான்! பதில் சொல்வாயா? சொல்ல தகுதி இல்லாத உனக்கு ?எதற்கு பிரஸ்மீட்? நீ சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு, அதை எழுதிக் கொண்டு, பத்திரிக்கையிலேயும், தொலைக்காட்சிலேயும் போடுவது, கூலிக்கு மாரடைப்பவர்கள் செய்யும் வேலை.

தகுதியான நேர்மையான அரசியல்வாதிகளாக இருந்தால், அவர்களுடைய கேள்வி தவறானது என்று அங்கேயே பதில் அளியுங்கள். கேள்வி நியாயமானதாக இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் இதில் என்ன தவறு? அதற்காக பத்திரிக்கையையும் செய்தியாளர்களையும் ஏளனமாக பேசுவது, ஏழை, பணக்காரனுக்கு உள்ள வித்தியாசத்தை போல்! அறிவில் அந்த வித்தியாசம் இல்லை. ஊழல் வாதிக்கும், நேர்மையான அரசியல்வாதிக்கும், என்ன வித்தியாசம் இருக்கிறதோ, அதே வித்தியாசம் தான் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், சமூக நலன் பத்திரிகைகளுக்கும் உள்ள வித்தியாசம். இந்த உண்மையாவது வை.கோபால்சாமி புரிந்து கொள்வாரா?
