மத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது .

ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் .

ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் என்று சொல்வது தவறானது. இது ஓட்டுக்காக செய்யும் அரசியல் !நிச்சயம் தவறான முடிவு .

மேலும்,அதிமுக, திமுக ஆட்சியில் செய்த தவறை, அதில் சேர்ந்த ஓரிரு நாட்களிலே, விஜயபாஸ்கர் என்ற முன்னாள் அமைச்சர் கரூரில் 3000 ஏக்கர் கோயில் நிலத்தை பட்டா போட்டு கொடுக்க சொல்லிவிட்டார் . இது தவறான முடிவு ‌.மேலும்,

சட்டப்படி, கோயில் விக்கிரகம் அல்லது இறைவன் ஒரு “சட்டப்பூர்வ நபர்” (Juristic Person) ஆகக் கருதப்படுகிறார்.தேவதாயம் இறைவனுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலங்கள் ‘தேவதாயம்’ எனப்படும்.

ஒருமுறை இறைவனுக்குச் சொத்து எழுதி வைக்கப்பட்டுவிட்டால், அதை தானம் அளித்த குடும்பத்தினரோ அல்லது அவர்களின் வாரிசுகளோ கூட திரும்ப உரிமை கோர முடியாது.மேலும்,

கொடுத்த நிலம் இறைவனுக்கு மட்டுமே சொந்தம்” என்பதே அடிப்படை விதி. அதுதான்

​சட்டப்பூர்வ நிலை! இதில் இந்து சமய அறநிலையத்துறை சரியாக செயல்படாததால் தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களால், இந்துக்கள் நீதிமன்றத்தில் போராட வேண்டி இருக்கிறது. மேலும்,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கோயில் சொத்துக்களை மேலாண்மை செய்கிறது. இருப்பினும், கோயில் நிலங்களை விற்பது அல்லது பிறருக்குக் கொடுப்பது குறித்து நீதிமன்றங்கள் தெளிவாகக் கூறியுள்ளன. மேலும், அதில் அரசாங்கம்

பட்டா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பாளர்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ கோயில் நிலங்களை தன்னிச்சையாகப் பட்டா போட்டுத் தர அரசுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகளில் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் அரசாங்கம் இதில்,தொடர்ந்து தவறு செய்கிறது. மேலும்,

சொத்துக்களைப் பாதுகாத்தல் ! அறநிலையத்துறை கோயில் நிலங்களின் “பராமரிப்பாளர்” (Custodian) மட்டுமே இப்படி இருக்கும் போது, சட்டத்திற்கு எதிராக விஜய் இதற்கு எப்படி சம்மதித்தார்? இது தவறான முடிவு .

மேலும்,தற்போது இந்துக்கள் என்ன கேட்கிறார்கள் என்றால்? இவர் கிறிஸ்டின், முஸ்லிம்களில் உள்ள கோயில்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டுக் கொடுப்பாரா?

மேலும்,அரசியல் சாசனம் ,அரசு அதிகாரம் ,ஆட்சி ,எல்லாமே ஒரு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது தான், என்பதை முதல்வர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும் .இவருக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அதிகாரிகளும் சரி, அரசியல் கட்சியினரும் சரி, தவறான முறையில் அதை அறிவுரை வழங்கி இருப்பார்கள் .

மேலும் இதில், ஒரு பக்கம் அரசியலாக்கி ,அதில் குளிர்காய நினைக்கும் எதிர்கட்சிகள் ஒருபுறம், மற்றொருபுறம் ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவது மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது என்று சொல்வார்கள் .ஒரு பக்கம் வெளியேற்றினால், எதிர்க்கட்சிகள் அதற்கு ஒரு அரசியல் செய்வார்கள். பட்டா கொடுத்தால் ஏன் கொடுக்கிறீர்கள்? என்று அதற்கு ஒரு அரசியல் செய்வார்கள்.

இவர்களுடைய அரசியலை தூக்கி வைத்துவிட்டு ,சட்டப்படி ,நியாயப்படி என்ன செய்ய வேண்டும்? அதுதான் முக்கியமான கடமை.மேலும்

ஆக்கிரமிப்பாளர்களுக்கு இன்று இந்து கோயில்களின் சொத்துக்கள் மட்டும் உரிமை என்றால், கிறிஸ்தவ ,முஸ்லிம்களின் கோயில்களில் உள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தம் இல்லையா? மேலும்,

இதே போல் பல பிரச்சனைகள் ,இந்த ஆட்சியில் சரியான முடிவு இல்லாமல், செயல்படுகிறார்கள் .இப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில் ,சிக்கன் பிரியாணி கொண்டு வர அவர் ஆசைப்படுகிறார் என்று சொல்லலாம் .

இல்லையென்றால், அது குழந்தைகளுக்கு சத்து மற்றும் புரதம் என்று கூட அவர் பேசிக் கொண்டிருக்கிறார் .ஆனால், ஒழுங்கான முறையில் சமையல் செய்வதிலே பல பிரச்சனைகள் ஏற்படுகிறது ‌.அதிலே, சிக்கன் பிரியாணி என்றால்,1008 பிரச்சனைகள் உருவெடுக்கும்.

அது மட்டுமல்ல , பாபா ஆத்மாக்களே அசைவ உணவு பிரியர்களாக இருக்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடாதவர்கள் புண்ணியத் மக்களா? என்று கேட்டு விடாதீர்கள் .

அவர்கள் பிறவிப் பயனை எளிதில் அடைவார்கள். இவர்கள் கணக்கு பூமியில் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விடாது. கணக்கை முடித்துவிட்டு தான், இங்கிருந்து யாராக இருந்தாலும் வெளியேற முடியும். அது சொல்லி புரிய வைக்க முடியாது .அது உணர்வது. இது ஒரு புறம் இருக்கட்டும்,

தரமான கோழி கறிகளை வாங்கப் போகிறார்கள்? அதில் சமைக்கும் உணவு சரியாக சமைக்க வில்லை என்றால், குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள், பிரச்சனைகள் ஏற்படும் .

இப்படி இவர்களே பிரச்சனையை கிரியேட் செய்து கொண்டிருக்கிறார்கள். எது தேவையானது? எது தேவையற்றது? என்பதை யோசிப்பதில்லை. புதிதாக ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று செய்து கொண்டிருப்பதால், அது ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். என்பதை எதையும் யோசித்து, ஒரு தடவைக்கு ,பல தடவை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.ஆகக்கூடிய சிக்கன் பிரியாணி !அது ஒரு சிக்கலான பிரச்சனை என்பதை தமிழக முதல்வர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும் . மேலும்,

அடுத்தது, ஒரு சில அமைச்சர்களை தவிர, சப்ஜெக்ட் பற்றி பேசுவதற்கு எந்த விதமான பொது அறிவும் ,அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் தவெகஅரசியல் கட்சியினர் ,பள்ளிகளில் வந்து இவருடைய போட்டோவை தலைமை ஆசிரியரிடம் கொடுப்பதுதான் முறை,

அங்கே வந்து கட்சியைப் பிரச்சாரம் செய்வது போல் ,குழந்தைகளிடம் பேசுவது ,அந்த போட்டோவை வைத்து பந்தா காட்டுவது, இதையெல்லாம் சமூக வலைதளத்தில் போடுவது,பொதுமக்கள் அருவருப்பாக தான் பார்க்கிறார்கள் .இதையும் அவர் சரி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *