
மின்வாரியம் தற்போது லட்சக்கணக்கான கோடியில் நஷ்டத்தில் இயங்கும் போது, பழைய கொள்முதல் விலையான 11 ரூபாய் 20 காசுக்கு பதிலாக மின்சாரத்தின் அவசர தேவைக்காக ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால், மின்வாரியம் மேலும், நஷ்டத்தில் இயங்கும்.
இது தவிர ,மக்களுக்கு இலவச மின்சாரத்தை கொடுக்க முடியுமா? பழைய கொள்முதல் விலைக்கும், தற்போது டெண்டர் மூலம் பெறப்பட்ட கொள்முதல் விலைக்கும், ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளது.
இதை மின்வாரியத்தின் ஊழலாக எதிர்க்கட்சிகள் அதிமுக ,திமுக, நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளது.
மேலும்,இது குறித்து தமிழக வெற்றி கழகம் மின்வாரிய அதிக கொள்முதலால்,(ஒரு யூனிட்டுக்கு 35 ரூபாய்) மக்களின் வரிப்பணம் ஒரு பக்கம் வீணடிக்கப்படுகிறது. மற்றொரு பக்கம், மின்சாரா அதிக கட்டண கொள்முதலால், மின்கட்டண உயர்வு கொண்டு வந்தால், பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைவதோடு, இந்த ஆட்சிக்கு அது அவ பெயரை ஏற்படுத்தும்.

ஏனென்றால், ஏற்கனவே மின்சார உயர்வு அதிகப்படியானது. அது குறைக்க வேண்டும் என்று தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். இப்போது மின் கட்டண கொள்முதலால் ஒருவேளை நஷ்டத்தை சரி கட்ட மக்கள் தலையில் வைத்தால் ,மக்கள் நிச்சயம் தாங்க மாட்டார்கள். எதிர்கட்சிகளும் இதை வைத்து நிச்சயம் அவசியம் செய்யும் என்பதை தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய் புரிந்து கொண்டால் சரி.