முதல்வர் விஜய் ஆக்கப் பூர்வமான திட்டங்களுக்கு மட்டும் பணத்தை செலவிடுவாரா? – 100 நாளில் 28 ஆயிரம் கோடி கடன் என்று இபிஎஸ் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

முதல்வர் விஜய் முக்கியமான, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு மட்டுமே, நிதியை பயன்படுத்த வேண்டும். இலவசத்தை நிச்சயம் குறைத்தாக வேண்டும்.

மேலும்,இலவச உணவு தவிர ,மற்ற அனைத்திற்கும் இலவசத்தை குறைக்க வேண்டும். இது தவிர, 100 நாட்களில் தற்போது 28 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, அவர் ஐந்தாண்டு முடிப்பதற்குள் விஜய் 20 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார் என்று தெரிவிக்கிறார்.

மேலும் வருவாய் இல்லாமல் ,கடன் அதிகரித்துக் கொண்டே போனால் அரசு திவால் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும். இது எங்கே போய் முடியும் என்றால்,இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் என்பது கேள்விக்குறியாகி விடும்.

மேலும்,எல்லாவற்றிற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து ,மத்திய அரசு உடன் போராடிக் கொண்டிருப்பது நல்ல ஆட்சியை நிலை நிறுத்த முடியாது. எனவே, கடன் வாங்கி இலவசத்தை கொடுத்து ,மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். மாநிலத்தின் வருவாயில் ஐந்து சதவீதம் இலவசத்திற்கு ஒதுக்குங்கள்.அதுவே அதிகம்.

இது தவிர, வாங்கிய கடனுக்கு அதன் வட்டி எவ்வளவு போகிறது? முக்கியமான திட்டங்களுக்கு தேவையான நிதி வருவாயில் எவ்வளவு சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் .அதன் பிறகு செலவினங்கள், அரசு அதிகாரிகளின் சம்பளங்கள் ,இதற்குப் பிறகுதான் இலவசம் என்று இருக்க வேண்டும்.

நீங்கள் இலவசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மற்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ,நிர்வாகம் பின்னோக்கி தள்ளப்படும் என்பது உறுதி. இதை முதல்வரின் கவனத்திற்கு உயர் அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், கடந்த கால ஆட்சி! மக்களுக்கான ஆட்சி அல்ல. அது திமுகவினருக்கும் ,திமுக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கும் ஆன ஆட்சி !அதனால் ,அவர்கள் சொல்வதை கேட்டு அல்லது அவர்கள் பேசுவதை வைத்து, ஆட்சி செய்தால் மோசமான ஆட்சி தான் மக்களுக்கு கொடுக்க முடியும்.

மேலும் ,அவர்கள் என்னவோ நல்லாட்சி கொடுத்து விட்டவர்கள் போல் ,இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசுவது திமுகவின் அரசியல் வியாபாரம். அது புரியாமல் எப்போதும், நம்முடைய வியாபார ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அது தேவையற்றது. அரசியல் தெரிந்தவர்கள் ,அதை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள்.

மேலும்,மக்களிடம் உண்மையை கூறுங்கள் .எதிர்க்கட்சிகள் சொல்வதற்காக ,நியாயமான, நேர்மையான, ஆட்சியை கொடுக்க முடியாது .எதிர்க்கட்சிகள் சொல்வது போல், இலவசத்தை தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். அதை நடை முறைப்படுத்தவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அதற்காக எல்லாம் நீங்கள் பேச முடியாது .முடிந்த வரைக்கும் நல்லாட்சி கொடுத்தாலே, அதுவே போதும். மக்கள் அதை தான் விரும்புகிறார்களே ஒழிய, இலவசத்தை எதிர்க்கட்சிகள் தான் தூண்டி விடுகிறார்கள். ஊழலற்ற ஆட்சி! மக்களுக்கான ஆட்சி !மக்கள் நல திட்டங்களுக்காக செயல்படுத்தினாலே, அதுவே போதுமான ஆட்சி! இதை முதல்வர் விஜய் ஆய்வு செய்வாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *