
தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.
இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.
தவிர,ஒரு பக்கம் குடும்ப வாழ்க்கையில் ,அவருடைய வலிகள் வெளியில் சொல்ல முடியாது. அது யார் பக்கம் தவறு? யார் பக்கம் நியாயம்? என்று கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

மேலும், விஜய் அதை எல்லாம் தூக்கி வைத்து விட்டு, அரசியல் கட்சி ஆரம்பித்து, இந்த சினிமா ரசிகர்கள் ஒரு பக்கம், இளைஞர்கள் ஒரு பக்கம் தூக்கிப் பிடித்து தான், அரசியலுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது .ஆனால் ,பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மேலும்,பெரும்பான்மை கிடைத்திருந்தால் ,இந்த முதல்வர் சிம்மாசனம் ஓரளவுக்கு இவருக்கு வலிகள் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், இப்போது வலிகளோடு கொடுக்கப்பட்ட சிம்மாசனம். இதைத் தாங்கி, இந்த ஆட்சி ஒவ்வொரு நாளும் ,எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சமாளிக்க வேண்டியது , இவருடைய அரசியல் கடமை.

இந்தக் கடமையை கடவுளுடைய ஒரு சக்தியால் இவர்களுடைய ஆட்டத்தை வென்று வரவேண்டும். இவரிடம் நேர்மை இருக்கிறது .மனசாட்சி இருக்கிறது .எல்லாவற்றையும் விட கடவுளிடம் ஒரு பயம் இருக்கிறது.
ஆனால் ,இதுவரை வந்த திராவிட கட்சி தலைவர்களில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தவிர ,கடவுளுக்கு பயப்படாதவர்கள். மனசாட்சி இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் முதல்வர் விஜய் இவருடைய பேச்சில் அரசியல் செயல்பாடுகள் எல்லாமே வெளிப்படையாக தான் இருக்கிறது.

இருப்பினும், சட்டமன்றத்திலே கொரடாவாக நியமிக்கப்பட்ட ஜே .சி. டி. பிரபாகரன் அங்கே பைபிளை மேற்கோள் காட்டி, பேசுவது சட்டமன்றத்திலே இதுவரை இல்லாத ஒரு சடங்காக இருக்கிறது. இது ஒரு தவறானது. விஜய் இதை நிறுத்த வேண்டும்.
மேலும், ஒரு பக்கம் அ தி மு க, இன்னொரு பக்கம் திமுக, இந்த இரண்டுக்கும் நடுவில் விஜய் ஆட்சி! இந்த இரண்டு பேருமே எப்போது எந்த நிமிடத்தில் ,விஜய்யின் ஆட்சிக்கு ஆட்டம் காண வைக்கலாம்? இதுதான் இரண்டு பேரின் ஒரே குறிக்கோள் .

இதில் அதிமுக ஒரு பக்கம் உடைந்து, விஜய் பக்கம் நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் நிலைமை விஜய்க்கு, ஆதரவாக செயல்பட்டால் ,எடப்பாடி பழனிசாமி எந்த நிலைக்கும் போவார் என்று அவருடைய அரசியல் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் இன்பதுரை இவர்களை அமைச்சர் பதவியில் சேர்த்தால் ,குதிரை பேரம் நடந்துள்ளது என்று சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்வோம் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு, ஸ்டாலின் ரகசிய உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி பட்ட சூழ்நிலையில் விஜய் மக்களிடம் நல்ல பெயர் வாங்க கூடாது என்பதில் இந்த அதிமுக, திமுக தலைமைகள், ஒவ்வொரு நாளும் கண் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இவருடைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ,கட்சிக்காரர்கள் ,என்ன தவறு செய்தாலும், அதை உடனே விளம்பரப்படுத்த, இவர்களுடைய ஊடகங்கள், தயாராக இருக்கிறது. தவிர,மக்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். இந்த மூன்று பேரையும் புரிந்து தான் தமிழக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.
மேலும் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை இன்னும் பலவீனப்படுத்திக் கொண்டு, கட்சியை அழிவுப்பாதையில் கொண்டு செல்வாரே, தவிர,
அவரால் மீண்டும் அதிமுக வை ஆட்சிக்கு கொண்டு வர முடியாது. ஒருவேளை தலைமை மாறினால் சொல்ல முடியாது. அப்போது கூட அதிமுக செயலிழந்து விட்ட கட்சியாக தான் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் ,விஜயபாஸ்கர் ,எஸ் பி வேலுமணி இவர்களை விட்டு ,விட்டு இந்த கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமியால் முடியாது.

இன்னும் ஓரிரு வருடங்களில் அதிமுகவில் இந்தப் பிளவு தொடருமானால், இந்த கட்சி உடைந்து விடும் . மேலும், இதையெல்லாம் விஜய் மீது தான் எடப்பாடி பழனிசாமி காட்டிக் கொண்டு இருப்பார்.
இதற்கிடையில் இந்த இரண்டு திராவிட கட்சி தலைமையும் இவர்கள் ஐந்தாண்டு காலம் தேர்தல் வாக்குறுதியில் ஒன்று கூட செய்யாவிட்டாலும், எதிர்க்கட்சியாக உட்கார்ந்து கொண்டு, விஜயின் செயல்பாடுகளை விமர்சித்துக் கொண்டு ,மக்களிடம் அதை இந்த கார்ப்பரேட் ஊடகத்தின் மூலம் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

மேலும், ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும், பழி வாங்கும் அரசியலை மறைமுகமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். இதில் பழனிசாமி ஒரு படி அதிகமாகவே செல்வார். சசிகலாவே கவிழ்த்து விட்டு போனவர் . இருப்பினும்,
இந்த வேகம் பழனிசாமிக்கு இருக்குமானால், கோடநாடு விவகாரம் தூசி தட்டி எடுத்து விடுவார்கள் . அதேபோல் ,ஸ்டாலினும் இவருடைய அனைத்து ஒட்டுமொத்த பைல்களும் டெல்லிக்கு சென்று விடும்.

இப்போதுதான் உண்மையான தமிழ்நாட்டின் சினிமா அரசியல்! இதில் விஜய் ரியல் ஹீரோ! இதுவரையில் சினிமாவில் தான் இவர் ஹீரோ! இப்போது(Real hero ) ரியல் ஹீரோவாக இங்கே நடிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.மேலும்,

மக்கள் இவர்கள் என்ன அரசியல் செய்தாலும், இவர்களுடைய தகுதி மக்களிடம் இனி செல்லாது. ஏனென்றால், கெட்டிக்காரன் புளுகு 8 நாள் என்பார்கள். அதுபோல் இவர்கள் தொடர்ந்து பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை.
மேலும் ,இப்போது தான், இவர்கள் மக்களுக்காக பாடுபடுவது போல் பேசுகிறார்கள். இவ்வளவு நாள், அந்த உணர்ச்சி எங்கே போனது? சாமானிய மக்களும், அடித்தட்டு மக்களும் வெறுத்து, விஜய்க்கு வாக்களித்து இருக்கிறார்கள். அப்போது உங்களுடைய அரசியல் கடமை எங்கே போனது?

மேலும், அதிமுகவின் 25 எம்எல்ஏ களுக்கும், விஜய் பக்கம் இருந்து ஆதரவு கொடுத்தால், ஏற்கனவே ஊழல் வழக்குகளில் உள்ள அமைச்சர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். ஸ்டாலினும் நடவடிக்கை எடுப்பார். ஆக கூடி விஜயை எந்த விதத்திலாவது, அரசியலில் கவிழ்ப்பது தான் இருவருடைய திட்டம்.
மேலும், விஜய் திமுக கூட்டணி கட்சிகளை நம்பி எப்படி ஆட்சி செய்ய முடியும்? அது ஒரு பக்கம் நம்பிக்கை துரோகம் செய்யுமா? இப்படிப்பட்ட சூழ்ச்சி! துரோக அரசியலில், விஜய் ஒவ்வொரு நாளும் இந்த அரசியல் போராட்டத்தை வெற்றி பெற்றாக வேண்டும்.
அதனால், நீங்கள் வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்க வேண்டும். எல்லா அமைச்சர்களையும் , எம்எல்ஏக்களையும், கட்சியினரையும்,கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் கடவுள் கொடுத்த ஆட்சி! தீய சக்திகளால், ஒரு கால கட்டத்தில், வீழ்த்தினாலும், மீண்டும் தூய ஆட்சி மலரட்டும் .
