
ஆதவ் அர்ஜுனா குடும்பத்திலிருந்து மூன்று பேர் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறார்கள். இந்த மூன்று பேரையும் அரசியல் கட்சிகள், களத்தில் இறக்கி இருப்பது அவர்களுடைய அரசியல் செல்வாக்கா? அல்லது பணமா?
மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா, இவர் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி, இது தவிர தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேலனத் தலைவராகவும் உள்ளார்.
மேலும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்கிற அரசியல் வியூக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி ,லீமா ரோஸ் , அதிமுக சார்பில் லால்குடியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் வேலுமணி மூலமாக அதிமுகவில் சேர்ந்து ,திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரபல பென் நிறுவனத்தின் முக்கிய தேர்தல் ஆலோசகர்.
மேலும், புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கூட்டணியில் காமராஜர் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அவரை பாஜகவில் சேர்த்தது பென் நிறுவன ஆலோசகர். அரசியலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது, இதுவே முதல் முறை .