
கேரளா இந்தியாவுக்குள் தான் இருக்கிறது என்பதை முதல்வர் பினராய் விஜயன் மறந்துவிட்டாரா? மேலும்,நீங்கள் மாநிலத்தில் எந்த ஆதார அட்டையை கொண்டு வந்தாலும், மத்தியில் ஆளுகின்ற அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறதோ ,அதை நடைமுறைப்படுத்தி தான் ஆக வேண்டும்.
நாங்கள் குடியுரிமைகளை வெளியேற்ற மாட்டோம். ஒரு நாட்டின் பிரச்சனை இது. கேரளாவின் பிரச்சனை அல்ல, இந்தியாவின் பிரச்சனை. இது கூட தெரியாமல், எப்படி முதல்வராக நீங்கள் எல்லாம் பதவிக்கு வருகிறீர்கள்? என்பது புரியவில்லை.

மேலும், ஓட்டுக்காக எங்கிருந்தோ வந்தவர்களை எல்லாம் இந்தியாவில் வாக்களிக்க வைத்து விட்டால், இந்தியாவில் வாழுகின்ற மக்களுக்கு அது ஒரு மிகப்பெரிய வாழ்க்கையின் போராட்டம் என்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்திக்க வேண்டும்.

மேலும்,இதை எதிர்க்கட்சிகள் ஆன காங்கிரஸ் ,திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மம்தா பானர்ஜி , போன்ற பல அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிப்பது, இந்திய மக்களுக்கு எதிரான ஒன்று.
இங்கு வாழக்கூடிய மக்களுக்கு தான் அரசியல் என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இதை தவறாக பயன்படுத்தி, ஏதோ பிஜேபியை எதிர்ப்பது போன்ற இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்
இது அரசியல் தெரியாத மக்களிடம், இதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் தெரிந்தவர்களிடம், இதற்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது.மேலும்,
ஒரு நாட்டின் அரசியல், அதிகாரம், குடியுரிமை ,இங்கு வாழ்கின்ற மக்களுக்கு தானே தவிர,எங்கிருந்தோ வெளிநாட்டிலிருந்து ,ஓடி வந்தவர்களுக்கு அல்ல, மேலும்,

நீங்கள் ஓட்டுக்காக அடைக்கலம் கொடுத்துக் கொண்டே இருந்தால், அப்போது இங்கு வாழ்கின்ற மக்களின் நிலை என்ன? இங்கே நெருக்கம் அதிகமாகி, அவர்களோடு இவர்கள் இடப் போராட்டம், வாழ்க்கை போராட்டம் ,விலைவாசி உயர்வு போராட்டம், சமூக போராட்டம், அத்தனை போராட்டங்களுக்கும், இது முக்கிய காரணமாகும் என்பதை மறுக்க முடியாத உண்மை.
அதனால், இவர்களுக்கு ஓட்டுக்காக அவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டால், நாளை இங்கு இருக்கின்ற மக்களுக்கு, அது ஒரு மிகப் பெரிய போராட்டம் தான். பல நாடுகளில் எப்படி வந்தேறிகள் வந்து நிரந்தரமாக இருந்தவர்களை அழித்துவிட்டு, அவர்கள் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை இன்று வெட்ட வெளிச்சமாக தெரிகிற உண்மை.

ஏன் ?அவ்வளவு எதற்கு போகிறீர்கள்? இந்தியாவை ஆண்டது சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள், இங்கே வாணிபம் செய்ய வந்தவர்கள், அவர்கள் இங்கு உள்ள நிலையை நன்கு புரிந்து கொண்டு, இந்த மக்களிடம் வேற்றுமை இருப்பதை உணர்ந்து ,அதை பிரிட்டிஷ்காரர்கள் சாதகமாக பயன்படுத்தி ,பிரித்தாலும் சூழ்ச்சி செய்து, இந்தியாவை சில காலம் ஆண்டார்கள் இது இந்தியாவின் வரலாறு .
அதனால், குடியுரிமை விஷயத்தில் மத்திய அரசும் சரி ,உச்ச நீதிமன்றமும் சரி, சரியான பாதையில் தான் இதைக் கொண்டு செல்கிறது. அதனால் பினராய் விஜயன் கொண்டு வரக்கூடிய எந்த ஒரு ஆதார் அட்டையும் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், இவர்கள் கொடுக்கின்ற அந்த கணக்கு அது தவறான கணக்காக கூட இருக்கலாம்.. ஒரு கிராமத்தில், நகரத்தில், எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்? என்ன வேலை செய்கிறார்கள்? அவர்களுடைய பூர்வீகம் என்ன? இது மிக ,மிக அவசியம். கேரளாவில் ,பினராய் விஜயன் கொண்டு வந்துள்ளது , நாட்டுக்கு எதிரான ஒன்று.