தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் இன்று கல்வி மருத்துவம் தனியார் மயமாக்கியதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் சம்பாதிக்கின்ற வருமானத்தின் 75% விழுக்காடு அதற்கு தான் போய் விடுகிறது

கடந்த 50 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகள் ,அதாவது திமுகவும் ,அதிமுகவும் மாறி, மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. ஆட்சியாளர்கள் 90% பேர் என்று கல்வித் தந்தையாகி விட்டார்கள் .அவர்களில் 50 விழுக்காடு மருத்துவமனைகளில் முதலீடு செய்து மருத்துவத்திற்கும் ,முதலாளி ஆகிவிட்டார்கள்.

இவர்களெல்லாம் எப்படி ஆனார்கள்? என்பது மக்கள் இன்னும் அரசியலை படிக்காததனால் ஏமாந்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் மருத்துவ கல்லூரியும் ,பொறியியல் கல்லூரியும், கலை கல்லூரியும் ,இவர்களே 75 விழுக்காடு வைத்திருக்கிறார்கள்.

அதேபோல், மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் ,75 விழுக்காடு தனியார் மையம் ,தடுக்கி விழுந்தால் தனியார் மருத்துவமனை, தடிக்கி விழுந்தால் அரசு மருத்துவமனை, இல்லை. அதனால் தான் இங்கே ஆயாக்களை வைத்து கூட ஊசி போடுகிறார்கள் .யார் வருவார்கள்? தரமான மருத்துவம் இருக்கிறதா?

மத்திய அரசு அதாவது பிரதமர் நரேந்திர மோடி ஐந்து லட்சம் வரை மக்கள் இலவசமாக மருத்துவத்தை செய்து கொள்ளலாம் என்று மருத்துவ அட்டையை கொடுத்திருக்கிறார். இது எதற்கு ?அரசின் பணம் தனியார் மருத்துவமனையை ஊக்கி வைக்க இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது கார்ப்பரேட்டை மத்திய அரசு ஏன் ஊக்குவிக்கிறது?. ஏன் ஒரு மாநிலத்திற்கு இந்த பணத்தை வைத்து, நான்கு ஐந்து மருத்துவமனை கட்டக் கூடாதா? மக்கள் இலவசமாக அதில் பயன் அடைய மாட்டார்களா?

அதேபோல் ,கல்வியும் ,மத்திய அரசு இலவச கல்வியை தரமாக கொடுக்கக் கூடாது என்பதில் ஒரே குறிக்கோளாக இருந்தவர் மு .க .ஸ்டாலின் ,20 பள்ளிகளுக்கு இடம் கூட ஒதுக்கித் தர மாட்டோம் என்று குரல் கொடுத்து இருந்தார்கள்.

இதற்கு காரணம் என்ன ?இவர்களுடைய கல்வி வியாபாரம் போய் விடும். அதாவது ,இவர்கள் இரு மொழி கல்விக் கொள்கையை வைத்திருக்கிறார்களாம் அரசியலில் கொள்ளையடிப்பவர்களுக்கு கொள்கை எது? இந்தக் கல்வி கொள்ளையை நடத்துவதற்கு தான் ,இவர்கள் கொள்கையை பேசி மக்களை முட்டாளாக்கினார்கள். மேலும்,

ஸ்டாலின் குடும்பத்தில் எல்லோருக்குமே பள்ளி, கல்லூரிகள் இருக்கிறது ‌.அதேபோல் ஜெகத்ரட்சகன், நேரு, துரைமுருகன், கிட்டத் தட்ட திமுகவில் இருக்கக்கூடிய எம்எல்ஏ, எம்பி, மந்திரிகள் ,அதேபோல் அதிமுகவில் இருக்கக்கூடிய முன்னாள் மந்திரிகள், எம்எல்ஏக்கள், இவர்களில் 50 சதவீதம் பேர் கல்வியும், மருத்துவமும் ,தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் .

அதனால் தான் ,அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை.

மேலும் ,இந்த மாபியா வியாபார கும்பலை ஒழித்தால் தான், தமிழ்நாட்டில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வருமானம், கல்விக்கும், மருத்துவத்திற்கும் ,போய்விடுகிறது. இது தவிர ,தற்போது உணவுப் பொருட்களின் விலை உயர்வு ,மேலும் வாழ்க்கையின் போராட்டங்கள் தான்.

மேலும்,இதில் கணவன், மனைவி இருவரும் உழைப்பதில் 75% இங்கே தான் போகிறது. இவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை கட்டி வைத்திருக்கிறார்கள். இது தவிர, சாதாரண தனியார் மருத்துவமனைகளில், ஏழை ,எளிய நடுத்தர மக்கள் ,அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக சென்று வரும்போது, கூட மருந்து மாத்திரை மாமியா கும்பல் இதில் ஒளிந்து கொண்டு, அட்டை உரிஞ்சுவது போல், உரிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரு நகரத்தில்ஆங்கில மருந்து கடைகள் 10 இருக்கிறது என்றால், அதில் 5% கடைகள் தான் மருந்து மாத்திரைகளை தரமாகவும், அதே சமயத்தில் சரியான விலையும் விற்கிறார்கள்.

மீதி 95 சதவீதம் எம்.ஆர்.பி ரேட்டுக்கு விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலும், இந்த மருந்து பொருட்கள் ஒவ்வொரு கம்பெனியிலிருந்தும், கடைகளுக்கு சப்ளை செய்வார்கள் .அவர்கள் செய்யும் விலையை பார்த்தால், எம்.ஆர்.பி யில் பாதி ரேட் தான் வரும் என்கிறார்கள் மருத்துவத் துறையை சார்ந்தவர்கள்.

ஆனால், இவர்கள் விற்பது பாதிக்கு, பாதி லாபம் .மக்கள் நோய் தீர்ந்தால் போதும் என்று அவர்கள் என்ன விலை சொன்னாலும், நோயாளி நோயிலிருந்து விடுபட்டால் போதும் ,என்று வாங்கி செல்கிறார்கள்.

இதில் ஒருவர் 50,000 சம்பாதித்தால் கூட இப்படிப்பட்ட சூழ்நிலையில், 10 ஆயிரம் ரூபாய் கூட மிச்சப் படுத்த முடியாது. இன்று எத்தனையோ குடும்பங்கள், பெண்கள் வேலைக்கு சென்று, அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் .

அவர்களுடைய நிலைமை என்ன என்று யோசித்துப் பாருங்கள்? இந்த செய்தி எல்லாம் ஒரே ஒரு கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சியாவது என்றாவது ஒரு நாள் கூட இது பற்றி வெளியிட்டு இருக்க மாட்டார்கள். வெளியிட்டால் அவர்களுடைய வியாபாரம் அடிப்படும். அடுத்து அந்த மாத்திரை கம்பெனி முதலாளிகள் அல்லது வியாபாரிகள் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்க மாட்டார்கள்.

மேலும்,இது எவ்வளவு பெரிய முக்கியத்துவமானது என்பதை தமிழகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து, இதற்கான அறிக்கையை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குழு அமைத்து, தெளிவாக புரிய வையுங்கள்.

அப்போதுதான் அரசியலில் கொள்ளையடித்த பணம், இன்று கல்லூரிகளாகவும், மருத்துவமனைகளாகவும், முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதை ஒழுங்கா பயன் படுத்த வேண்டும், மேலும் இதற்கான தரவுகள் கல்வியாளர்களின் புள்ளியல் மூலம் தான், ஒவ்வொரு ஆண்டுக்கும், தனியார் பள்ளி கல்லூரிகளில், படிக்கும் மாணவர்கள், எவ்வளவு பேர் ?நடுத்தர மக்கள் .?ஏழை எளிய மக்கள் ?இந்த பட்டியல் எடுத்துப் பாருங்கள்.

அப்போதுதான் இந்த கல்விக் கொள்ளை பற்றி அரசுக்கு புரியும். மேலும் ,திமுக ஆட்சியில் ,பள்ளியின் உடைய லைசென்ஸ் புதுப்பிக்க பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சொல்லுகின்ற இவர்கள், ஏன்? இப்போது அந்த லஞ்சமே இல்லாமல் புதுப்பிக்கப்பட்டாலும் ,கல்வி கட்டணத்தை குறைக்கவில்லை?

மேலும்,ஒரு பெற்றோர் கூட ,இது பற்றி ஏன்?வாய் திறந்து கேள்வி கேட்கவில்லை. இதற்கு காரணம் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில், இவர்கள் ஏதாவது புள்ளி வைத்து விடுவார்களோ ,என்ற பயம்தான்.

சரி ,அரசு ஆவது அல்லது அமைச்சர்கள் ஆவது உங்களுடைய அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு? நீங்கள் வாங்குகின்ற கட்டணம் எவ்வளவு? அதை வெளிப்படையாக சொல்லுங்கள் பார்ப்போம் .ஒருவரும் இதுவரை வெளிப்படை தன்மையை இந்த தனியார் பள்ளிகள் கடைபிடிக்கவில்லை .

இங்கே கட்டண கொள்ளைதான் நடத்துகிறார்கள். அதாவது கல்வியை வியாபாரம் ஆகிவிட்டார்கள். இந்த வியாபார கல்வியை மக்களுக்கு இலவசமாக கொடுக்க ,அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டு வர வேண்டும்.

அதேபோல், மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும். அதிகப்படியான மத்திய மாநில அரசு மருத்துவமனைகள், மற்றும் கல்வி நிறுவனங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான், ஊழல்வாதிகளின் கல்வியின் மருத்துவமனை வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடியும். என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *