நள்ளிரவில் டெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து டெல்லியில் தீவிர விசாரணையில் போலீசாரம், ராணுவமும் இறங்கியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக தீவிரவாதிகள் செயல்பாடு அதிகமாக உள்ள புல்வாமா பகுதியை ராணுவம் சோதனை செய்து வருகிறது.
மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் அரியானாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பிறகு அவர் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அந்தக் கார் புல்வாமா பகுதியை சேர்ந்த தாரிக் என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.