
தமிழ்நாட்டில் அதிமுகவிலிருந்து, திமுக, திமுகவிலிருந்து அதிமுக, பாஜக, தவெக, இப்படி பல கட்சிகளுக்கு செல்வதால் ,இவர்கள் மக்களுக்காக மாறி இருக்கிறார்களா? இல்லை, இவர்கள் ஊழல் செய்த பணத்தை காப்பாற்ற மாறி இருக்கிறார்களா? அல்லது பதவிக்காக மாறி இருக்கிறார்களா? அதைப் பற்றி சொன்னால் பத்திரிகைகளை பாராட்டலாம்.
ஆனால், இவர்கள் கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களிடம் சொல்லி ,இவர்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு கேவலம், இந்த கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகள் இதையும், தெரியாமல் செய்தியாளர்கள் மைக்கை நீட்டிக் கொண்டு, ஒழுங்கான கேள்வி கேட்க தெரியாமல், அவர் தாய் கழகத்தில் இணைந்து விட்டாராம். இதையெல்லாம் அரசியல் தெரிந்தவர்கள் கேலி செய்து சிரிக்கிறார்கள். மக்கள் அந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்களா? மேலும்,

ஓ பன்னீர்செல்வம் ,ஏதோ மக்களுக்கு இவர் வந்து பெரிய தியாகத்தை செய்து விடப் போகிறார் என்பதைப் போல அங்கே நிருபர்கள் சூழ்ந்து கொண்டு மைக்கைகளை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் கார்ப்பரேட் ஊடகத்தின் போலி அரசியல் பிம்பம் , இப்போதாவது மக்களுக்கு உண்மை தெரிகிறதா?

மேலும், இரண்டு முறைக்கு மேல் அதிமுகவில் முதலமைச்சர் பதவியை வகித்த ஒரு நபர் இன்று திமுகவில் இணைந்து இருக்கிறார் என்றால் இதை விட கேவலம் அவருக்கு வேறு எதுவும் இல்லை. அரசியலில் ஓய்வு பெற்று விலகி இருக்கலாம்.
ஆனால், திமுகவை எதிரியாக நினைத்து , ஆரம்பித்து ,அதிமுகவை வழி நடத்திய ,எம் .ஜி .ஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள், ஒரு போதும் ஓ .பன்னீர்செல்வத்தை மன்னிக்காது. மேலும்,ஒரு டீக்கடை நடத்திக் கொண்டிருந்தவரை இன்று பல கோடிக்கும், கப்பலுக்கு அதிபர் ஆக்கிய அந்த கட்சியை விட்டு, எதிர்க்கட்சிக்கு போகிறார் என்றால், இவரை விட மிகப்பெரிய துரோகி, நாட்டில் வேறு யாரும் இருக்க முடியாது.

இது அதிமுகவுக்கு செய்த துரோகம் அல்ல, இவரை நம்பி எத்தனை முறை வாக்களித்தார்களோ ,அந்த கட்சியினரும், அந்த தொகுதி மக்களும் ,அவர்கள் தான் வெட்கப்படனும், வேதனை படணும். மேலும்,
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ,இவர்களுக்கு மீண்டும் மக்கள் வாக்களிப்பது அவர்களுடைய முட்டாள்தனம். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்கிறார் என்றால் அவர்கள் ஒன்று பதவிக்காக, செல்ல வேண்டும் .அல்லது இவர்கள் ஊழல் செய்த சொத்துக்களை காப்பாற்ற அதில் போய் சேர வேண்டும்.

இல்லையென்றால், மக்களுக்காக சர்வீஸ் செய்ய வேண்டும் .அதாவது சேவை செய்ய வேண்டும் .அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள். இந்தப் போலிகளை போலி ஊடகங்கள், பணத்திற்காக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு இப்போதாவது உண்மை புரிந்து இருக்கிறதா?