தமிழ்நாட்டில் இருக்கிற ஏழு கோடியில் ஒருவர் ராகவா லாரன்ஸ் ! அதாவது கோடியில் ஒருவரா?

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எத்தனையோ பேர் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிக்கிறார்கள் ,பணம் சம்பாதிக்கிறார்கள் ,சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

ஆனால், மக்களுக்காக ஒரு சேவையை மனப்பூர்வமாக செய்யக்கூடிய ஒரு நபர் ராகவா லாரன்ஸ் . இவர் ஜாதி, மதம் ,கடந்து சேவை செய்பவர். இவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால், அந்த தொகுதி மக்களே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் நானே மக்கள் அதிகாரத்தில் எழுதி இருந்தேன்.

ஏனென்றால், அரசியலில் கொள்ளை அடித்த குடும்பங்கள் கூட ,ஒரு ரூபாய் பிச்சைக்காரனுக்கு கூட ,போட மாட்டார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் என்ன தண்டனை கொடுப்பான்? என்று என்னால் கூட சொல்ல முடியவில்லை.

மேலும்,நீதிமன்றங்கள் இவர்களுக்கான தண்டனை கொடுக்காமலே ,காலம் கடத்துகிறது. ஆனால், கடவுளுடைய சட்டங்கள் அப்படியல்ல, நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதாவது நீ நீதிபதியாகவே இருந்தாலும், தவறான தீர்ப்பு, தவறு செய்திருந்தால், அதற்கான தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இது கடவுளுடைய சட்டம்.

ஆனால்,மக்களுடைய சட்டம் அது அல்ல. இங்கே அரசியலுக்கு வருபவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?என்று கூட தெரியாமல் தான் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், ரசிகர் மன்றம் மூலம் வருபவர்கள்,கட்சியில் கொடி பிடித்துக் கொண்டு ,போஸ்டர் ஓட்டிக்கொண்டு, தலைவா வாழ்க, தலைவா வாழ்க, என்று கத்திக் கொண்டு, கூட்டத்துக்கு ஒரு நூறு ,இருநூறு பேரை அழைத்துக் கொண்டு ,போவது ,வருவது, இது எல்லாம் அந்த கட்சி சொல்கின்ற ஒரு வேலை! இங்க அந்தந்த கட்சி வேலைக்காரனை தான், எம்எல்ஏ, எம்பி ,மந்திரிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?

அப்படிப்பட்டவர்களுக்கு கட்சியில் சீட்டுக் கொடுக்க வேண்டும். கட்சி என்பது கொள்ளையடிப்பவனுக்கும் கட்சி, திருடனுக்கும் கட்சி, ஊரை ஏமாற்றுபவனுக்கும் கட்சி, அப்படி என்றால், மக்களுக்காக உழைப்பவனுக்கு கட்சியில்லையா? இவர்களுக் கெல்லாம் எங்கே இருக்கிறது கட்சி?

அதனால், மக்களுக்கு அரசியல் தெரியவில்லை, இவர்கள் யார் ?என்று தெரியவில்லை. தகுதியானவர்கள் ,மக்களுக்காக உழைப்பவர்கள் ,அரசியலுக்கு வரவில்லை .அதுதான் முக்கிய கருத்து. அதனால்தான் அரசியல் தவறாக போய்க்கொண்டிருக்கிறது. திருடனிடம் சாவி கொடுத்துவிட்டு, அவன் திருடுகிறான், திருடுகிறான் ,என்று மக்கள் கத்துவது மக்களின் தவறு.

அவனுக்கு என்ன தெரியுமோ ,அதை தான் அவன் செய்வான்.மக்கள் சேவகன் வேஷம் போட்டுக் கொண்டு, சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு , கொள்ளையடிக்கிறான் . கொள்ளையடிப்பவனுக்கும் ,இவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இவன் பதவி அதிகாரத்தை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறான் . அவன் உடம்பையும், தைரியத்தையும்,கொண்டு கொள்ளை அடிக்கிறான். இவ்வளவு தான் வித்தியாசம். இரண்டும் ஒன்றுதான்.

மேலும்,ராகவா லாரன்ஸ் போல், மக்கள் சேவை செய்யக்கூடியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்த காலத்தில், கடவுளுடைய ஒரு ஏஜென்ட் ஆக செயல்படக்கூடிய ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரை கேட்க வேண்டும் என்றால்! கட்சிக்காரர்களை கேட்கக் கூடாது.

ஏனென்றால், கட்சிக்காரன் தன்னை போல் கொள்ளையடிப்பவன், ஊர்த்தாலி யருப்பவன், மக்களை ஏமாற்றுபவன் ,வெள்ளையாக துணிகளை உடுத்திக் கொண்டு, அநியாயத்திற்கு துணை போபவன், இவர்களைப் போன்று இல்லை என்றால், அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏன் ?

எங்களைப் போன்ற பத்திரிகைகளை கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையை எழுதுகிறோம் என்றால், அவர்களுக்கு வலிக்கிறது. அதே பொய்யை சொல்லுகின்ற கார்ப்பரேட் ஊடகம் என்றால், அவர்களை அது பாராட்டுகிறது. அதனால், நீங்கள் பேசுகின்ற இந்த வீடியோ உண்மையிலே, மக்கள் சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மேலும் தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை. அதனால் ,தாயைப் பற்றி பேசும்போதும், தாய் சொல்லை தட்டாமல், வாழும்போதும் , அனுபவத்தில், அதனால் ஏற்பட்ட கஷ்ட ,நஷ்டங்கள் உணர்ந்தவர்களுக்கு தான் அந்த உண்மை தெரியும்.

அதனால், காலம் எப்போது உங்களை அந்த இடத்தில் தீர்மானிக்கிறதோ அப்போது நீங்கள் வருவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *