
தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், பேசிக்கொண்டு 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாறு படைத்த திமுக ஆட்சியை பார்த்து, நேற்று நடைபெற்ற என். டி ஏ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இதை தெரிவித்துள்ளார். அவர் சொன்னது உண்மை நிரூபிக்கும் வகையில் தான் ,திமுக ஆட்சியில் நடந்தேறியுள்ளது. அது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

அதாவது திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுவது தமிழ் மக்களின் தெய்வமான முருகப் பெருமானுக்கு தடை விதித்து .அதற்கு பல காரணங்களை சொல்லி நீதிமன்றம் வரை போய்க்கொண்டிருக்கும், அந்தப் பிரச்சனை உண்மையிலே ,திமுக அரசு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரி என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும்,நீங்கள் எங்கெல்லாம் கை வைக்க கூடாதோ, அங்கெல்லாம் கை வைத்திருக்கிறார்கள். அதை தற்போது தான் முதல்வர் ஸ்டாலின் ஒருவேளை உணர்ந்து இருப்பாரோ என்று தோன்றுகிறது.
தவிர,இது சிறுபான்மையினரை திருப்திப்படுத்த, பெரும்பான்மை மக்களை விரோதித்துக் கொண்ட வேலை.
மேலும், மதுராந்தகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் கூட்டம் அலை மோதியது. இந்தக் கூட்டம் செலவு செய்து வந்த கூட்டமாக இருந்தாலும், செலவு செய்யாமல் வந்த கூட்டமாக இருந்தாலும், மக்களின் உணர்வு மட்டும் திமுக ஆட்சிக்கு எதிராக இருக்கிறது என்பது அவர்கள் பேசுகின்ற கருத்து.

மேலும், சில தினங்களுக்கு முன் கூட, மக்கள் அதிகாரத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தேன். திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கை பற்றி சொன்னதை நிறைவேற்றவில்லை. அதைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது அதிகமான தேர்தல் அறிக்கையை மக்களிடம் சொன்னார்கள் .ஆனால், செய்தது பூஜ்ஜியம்.
நீங்கள் இரண்டு முறை திமுகவுக்கு பெரும்பான்மை கொடுத்தும், மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி விட்டார்கள். இதைதான் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி ,இந்த கூட்டத்தில் பேசியது மிகவும் முக்கியத்துவம் ஆனது. இப்படி தேர்தல் அறிக்கை என்பது ஒரு அச்சடித்த பேப்பர் அல்ல, அதை மக்கள் படித்துவிட்டு ,தினசரி பேப்பர் போல, குப்பையில் போடுவதற்கு தேர்தல் அறிக்கை தேவை இல்லை. அது அத்தனையும் ,மக்களின் நம்பிக்கை என்பதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும்,

நம்பிக்கை பெயரில்தான் ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள். நம்பிக்கையின் பெயரில் தான் ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கை ஏமாற்றமாக ஆகும் போது மக்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் ?

எனவே, இப்போது திமுக ஆட்சி ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி தப்பிக்க போகிறது? பிரதமர் நரேந்திர மோடி இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதியை கூட கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தான் ,ஒரு சில வாக்குறுதியை கொடுத்திருக்கிறார். இது கூட்டணிக்கான ஆரம்ப மாநாடு தான் ,இனி தேர்தல் நெருங்கும் வேலையில், அதிகப்படியான கூட்டங்கள் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி தலைமையில் நடைபெறும்.
இருப்பினும், தமிழ்நாட்டில் 2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு கடுமையான போட்டியாகத் தான் இருக்கப் போகிறது என்பதை மீண்டும் இதை தெளிவு படுத்துகிறோம் .

மேலும் ,திமுக பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கலாம். அதேபோல் மற்ற அரசியல் கட்சிகளும், தேர்தலில் பணத்தை இரைக்கலாம். தேர்தல் வாக்குறுதிகள் செய்வதும் , செய்ய முடியாததும் கொடுக்கலாம். இதன் காரணமாக வாக்காளர்களின் மனநிலை எப்படி தடுமாறப்போகிறது? அது ஆசை வார்த்தைகளாலா? அல்லது பணத்தாலா? அல்லது பரிசு பொருட்களாலா? இந்தத் oœதடுமாற்றத்திற்கு இடம் கொடுக்காமல்,மக்கள் மனம் நடுநிலையோடு, சமூக முன்னேற்றத்தையும், நாட்டின் எதிர்கால நலனையும், கருத்தில் கொண்டு வாக்களிப்பார்களா?

அது மட்டும் அல்ல, என்னதான் தற்போதைய என்.டி.ஏ கூட்டணி பலமானாலும், வேட்பாளர்கள் தேர்வு அதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் சரி.