இன்றய நெருக்கடியான அரசியலில் ராமதாஸ் மற்றும், பிரேமலதா விஜயகாந்த்தின் பெட்டிகள் வாங்கும் அரசியல் கூட்டணி பேரம் எடுபடுமா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிக்குள், சிறிய கட்சிகள் கூட்டணி பேரம் நடத்தும் போது, பெட்டி வாங்குவது முக்கிய கலாச்சாரமாக இருந்து வருகிறது.

இது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ,நெருக்கடியான கணிக்க முடியாத தேர்தலாக 2026 இருப்பதால், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அதிமுக, திமுக ,தவெக போன்ற கட்சிகள் இவர்கள் சொல்லும் பேரம் படியாமல் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.மேலும்,

இதற்காக இவர்கள் கட்சியின் பலத்தை காட்டுவது, தங்களுடைய மாநாடு என்று நடத்திக் காட்டுகிறார்கள். அப்படி நடத்தி காட்டிய தற்போதைய பிரேமலதா விஜயகாந்தின் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டம் , ஓரளவு காண்பித்தார்கள். இந்த கூட்டம் எல்லாம் பணம் கொடுத்து, கூட்டுவது கூட்டமல்ல. இதை வைத்து தேர்தலில் வெற்றி,தோல்வி இக் காலக்கட்டத்தில் நிர்ணயிக்க முடியாது.

மேலும், தேமுதிகவின் வாக்கு சதவீதம் ஒன்றை சதவீதம் இருக்கலாம். இதை வைத்து 300 கோடி, 400 கோடி, என்று பேரம் பேசி பார்த்தார் ஒன்றும் வேலைக்காகவில்லை போல தெரிகிறது.தவிர,

இன்றைய கால கட்டத்தின் அரசியல் சூழ்நிலை தெரியாமல் பேரம் பேசும் இந்த கட்சிகள், எல்லாம் இன்னும் குறுகிய காலத்தில் காணாமல் போகும். காரணம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வந்து விட்டது. மக்களுக்கு நன்றாக தெரிகிறது .நம்மளை வைத்து இவர்கள் அரசியலில் கொள்ளை அடிக்கிறார்கள்.

நமக்கு 1000, 500 கொடுத்துவிட்டு, இவர்கள் பல ஆயிரம் கோடிகளை சுருட்டுகிறார்கள். மேலும், மக்களின் எதிர்பார்ப்பை விட ,இவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.தவிர, இந்த அரசியல் கட்சிகள், நம்மளை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். மேலும்,

இதைப் புரிந்து கொண்ட 90% வன்னிய சமுதாயம் ,இப்போது பாமக கூட்டத்திற்கு அதிகம் செல்வதில்லை. அதனால்,ராமதாஸ் ஆல் இந்த கூட்டத்தை கூட கூட்ட முடியவில்லை. அதுவும் தோல்வி தான். இது தவிர, பாமகவில் அன்புமணி ஒரு பக்கம், ராமதாஸ் ஒரு பக்கம், போட்டி, போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்? என்பதுதான் வன்னிய சமுதாயம் பொறுத்திருந்து பார்க்கப் போகிறது.

எனவே, மக்களை ஏமாற்றி அரசியல் வியாபாரம் செய்கின்ற அரசியல்! அரசியல் கட்சிகளுக்கு இனி தோல்வி தான். அதேபோல், இந்த அரசியல் வியாபாரத்தை, மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக் காட்சிகளுக்கும் தோல்விதான் கிட்டும். அவர்கள் சொல்கின்ற பொய்களையும் , கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் சொல்லுகின்ற பொய்களையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. அதாவது,

இந்த பத்திரிக்கை தொலைக்காட்சிகளின், செய்திகளை அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இதன் மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதை ஊடக வியாபாரமாக இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் தற்போது மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும்,எந்த நோக்கத்திற்காக அரசியல்? என்பதை எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறது. இது அதிக அளவில் இல்லை .ஏதோ ஒரு சில ஊடகங்கள் தான், இதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. தவிர,இதில் whatsappபில் குரூப் ஆரம்பித்து நானும் பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு இதனுடைய அர்த்தம் புரியாது. மேலும்,

லேபிளில் பந்தா காட்டுகின்ற அதாவது கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சியின் நிருபர்களுக்கு இந்த உண்மை தெரியாது. இது ஆய்வு செய்து எடுக்கப்பட்ட உண்மைகள். இது தவிர,

அரசியல்வாதிகள் என்றால், மேடைப் பேச்சாளர்களாக சினிமா வசனம் பேசுவது போல , யாராவது எழுதி கொடுத்து, அதை பேசிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் ,அரசியல் கட்சியினர் வரை அதாவது ,திமுக, அதிமுக, பிஜேபி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாமக, போன்ற பல அரசியல் கட்சிகள் தற்போது இவர்களுக்குள், குற்றங்களை ,குறைகளை சொல்லிக் கொண்டு, மக்களை முட்டாளாக்கும் அரசியல்தான், தமிழ்நாட்டின் அரசியல்.

இந்த வரிசையில் பல பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சீமான், திருமாவளவன்,அண்ணாமலை, சேகர்பாபு , வைகோ, அன்புமணி ராமதாஸ்,இப்படி இவர்கள் பேசுகின்ற அரசியல் யாரை முட்டாளாக்க ? அரசியல் தெரியாதவர்களிடம் கை தட்டல்கள் வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒலிக்கு மாரடைக்கிற கூட்டத்திடம் கை தட்டல்கள் வாங்கிக் கொண்டிருப்பார்கள்.ஆனால்,அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்களால் கைதட்டல்கள் வாங்க முடியாது.

எனவே,இவர்கள் கூலி கொடுத்தால் கைதட்டுவார்கள். அதேபோல் தான் ,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் கூலி கொடுப்பவர்களுக்கு கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

மேலும்,தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட அரசியலில் ஏமாந்து கொண்டு இருந்தால், இவர்கள் பதவிக்கு வருவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அல்ல. வாயிலே பேசிவிட்டு, போலி அரசியலை மக்களிடம் காட்டுவதற்கு மக்கள் நம்ப தயாராக இல்லை. உண்மையை பேசுங்கள். உங்களுடைய அர்ப்பணிப்பை அரசியலில் காட்டுங்கள். அதை தான் இனி மக்கள் நம்புவார்கள்.

நான் ஜாதி, நான் மதம், நான் திமுகவை நன்றாக திட்டிக் கொண்டிருக்கிறேன். நான் அதிமுகவை நன்றாக திட்டிக் கொண்டிருக்கிறேன். நான் ஊழலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஊழலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நேர்மையானவன் நான் உத்தமன் என்றெல்லாம் வாயிலே பேசிக் கொண்டே இருந்தால் மக்கள் நம்ப தயாராக இல்லை.

மேலும்,எங்கே ?எல்லாம் வாயிலே வா ?செயலில் என்ன செய்தாய்? அதை சொல் அண்ணாமலை. அதை சொல் சீமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *