
நாட்டில் எந்த கட்சியும் செய்யாத ஒரு அராஜகங்கள், அநியாயங்கள், திமுக ஆட்சியில் செய்து கொண்டு, அதையெல்லாம் மறைத்து, ஊடகங்களில் நியாயப்படுத்தி, மக்களிடம் நல்லவர்களாக வல்லவர்களாக பேசிக்கொண்டு, ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து, வாக்களிக்கும் மக்கள் முட்டாள்களாக இருந்தால் அல்லது சுயநலமாக இருந்தால், இப்படிப்பட்ட ஊழல் அராஜகங்கள், தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ,அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் வாக்களிப்பது , ஜனநாயகம் என்று இவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு அர்த்தம் இல்லை.

மக்கள் வாக்களிப்பதற்கும், அர்த்தம் இல்லை. ஊடகம் என்ற பெயரில் போலியான கருத்துக்களை பதிவு செய்வதும், பொய்யை நியாயப்படுத்தி, மக்களிடம் கொண்டு செல்வதும், அதற்கு பெயர் ஊடகம் இல்லை.அவர்களின் அரசியல் கட்சி செய்தி நிறுவனங்கள்! மற்றும் செய்தியாளர்கள். இதற்குப் பெரிய ஊடகங்கள் என்று செய்தியாளர்கள் பேசுவதற்கு தகுதி இல்லை.

இப்படிதான் சமீபத்தில் கூட ஒரு சில தினங்களுக்கு முன் மந்திரியின் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களை தேர்தல் பணிக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்து ,ஈடுபடுத்தி இருக்கிறார்கள். அதை எதிர்க்கட்சிகள், ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் செய்தியை வெளியிட்டார்கள்.

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திரா காலேஜ் மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் படிக்கின்ற மாணவர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தி, ஒரு மாணவர் நேற்று தற்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி ஊடகங்களிலும், வெளிவந்துள்ளது. இது தற்கொலையா? கொலையா? படிக்க வந்த மாணவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொள்வார்கள்? இதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது? என்ன நடந்தது?என்பது குறித்து உயர் மட்ட காவல்துறை விசாரணையில் தெரிய வருமா? அல்லது அவர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் எல்லாவற்றையும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டிருப் பார்களா?

மேலும்,எந்த அளவுக்கு ஊழல் என்பது இன்று மக்களை பயமுறுத்துகிறது! என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய சம்பவம். பணம் இருந்தால், எதை செய்தாலும், அதை மூடி மறைத்து எப்படிப்பட்ட பொய் சொன்னாலும், மக்களை நம்ப வைக்கலாம். இப்படிப்பட்ட திமுக ஆட்சியின் ஊழலின் அராஜகங்கள், மாணவர்கள் ,மாணவிகள் மீது கொடூர தாக்குதல்கள் ,அரசியல் அதிகாரத்தின் பின்னணியில் நடந்தால், நிச்சயம் அவர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் .

மேலும்,அவர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளை விலை பேச முடியாது. பொய் சொல்லி வாக்கு சேகரிக்க முடியாது. பொய்யான கருத்துகளை ஊடகங்கள் பெயரில் அவர்களை ஏமாற்ற முடியாது. இது எல்லாம் திமுக கட்சியினருக்கு ஏன்? தெரியாமல் ஏமாந்து விட்டார்கள்….?