
கடந்த 2021 லவ் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு சுமார் 65 சதவீத வாக்குகள் தான் பதிவாகியுள்ளது.
ஆனால், தற்போது 234 தொகுதிகளிலும் 84.24 சதவீதத்திற்கு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 25 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
இந்த வாக்குப்பதிவு எப்போதும் இல்லாத வாக்கு பதிவாக தான் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவு புதிய வாக்காளர்களின் வரவு ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.

மேலும்,இது அரசியல் மாற்றத்திற்கான வாக்குப்பதிவாக தான் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரையில் யாரோ வந்தார்கள் ,யாரோ போனார்கள் ,யாரோ நிற்கிறார்கள் என்று மக்கள் இருந்து வந்த நிலையில், இப்போது வாக்களிப்பதன் நோக்கத்தை 50% மக்கள் புரிந்துள்ளனர். இது அரசியல் மாற்றத்திற்கான வாக்குப்பதிவு.

மேலும், திமுக ஒரு பக்கம் பணத்தை கொடுத்து விட்டு ,திக், திக் நிலையில் தான் இருந்து கொண்டு இருப்பார்கள். அதே நிலைமை தான் அதிமுகவிற்கும் இருக்கும். மக்கள் இந்த பணத்தை வாங்கிக் கொண்டு பத்து ஓட்டிற்கு ,ஒரு ஓட்டு ,ரெண்டு ஓட்டு தான் போடுவார்கள்.

பணம் வாங்கியவர்கள் 100% இந்த முறை கொடுத்த பணத்திற்காக வாக்களிக்கவில்லை. இது வாக்கு எண்ணும்போது நிச்சயம் அவர்களுக்கு புரியும்.
மேலும்,ஒவ்வொரு குடும்பத்திலும் ,குழந்தைகள் அவர்கள் சொல்லும் நபர்களுக்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். பணமே வாங்கி இருந்தாலும், போடா இவ என்ன பணம் கொடுத்துட்டான்? என் பேரனை விடவா? என் பேத்தி விடவா? என் பையன விடவா? இது தவிர,, இது நம்ம பணம் தான், அந்தக் குழந்தைகளே அவர்களுக்கு சொல்கிறது.

அது மட்டுமல்ல, வயக்காட்டில் வேலை செய்துவிட்டு வாக்களிக்கலாம் என்று பெற்றோர்கள் செல்லும் போது, அந்த குழந்தைகள் விசிலுக்கு போடுங்கள் என்று சொல்கிறது.இப்படி தான் அந்த வாக்குகள் மாறி இருக்கிறது. அது மட்டுமல்ல,
ஜாதிக்காக ஓட்டு போடும் நிலை மாறி இருக்கிறது. இது ஜாதி கட்சிகளுக்கு இந்த தேர்தல் நன்கு புரிய வைக்கும். மேலும்,இவர்களும் பணம் கொடுத்திருப்பார்கள் .ஆனால், அது மக்கள் இவர்களை மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை.
காரணம் தேர்தல் வரும் போது மட்டும் தான் ஜாதி என்ற ஞாபகம் இவர்களுக்கு வருகிறதா? என்ற கேள்வி கேட்கிறார்கள். அதனால் ,இந்த தேர்தல், ஜாதி கட்சிகளுக்கு பாடம் புகுத்தி இருப்பார்கள் . இவை அனைத்தும்,
வரும் மே 4 ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மேலும்,தேர்தல் ஆணையம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை வாக்குச்சாவடிகளில் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.
அதேபோல் வாக்களித்த இவிஎம் மிஷின்களையும், பாதுகாப்பாக கொண்டு சேர்த்து, அதை 24 மணி நேரம் சிசிடிவி கேமராவில் பாதுகாத்தாலும், ஒவ்வொரு அரசியல் கட்சியின் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும், அங்கே பாதுகாக்க வேண்டும் .

இது தவிர,காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், நேர்மையுடன் அதை பாதுகாக்க வேண்டும். இதுதான் நம் நாட்டின் ஜனநாயகத் தேர்தல்! என்பதை மே 4 ந் தேதி, எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது ?என்பது தெரிந்துவிடும் .