நாட்டில் (Red simbel) சிவப்பு குறியீடு பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை மக்களிடம் அடையாளப்படுத்த மத்திய அரசு உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,சோசியல் மீடியாக்கள், சமூக பணியாற்றுவாதாக நினைத்துக் கொண்டு, சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் எதிரான செயல்களை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது.

இதைப் பற்றி உளவுத்துறை மத்திய அரசுக்கு ஆய்வு செய்து அந்த பட்டியலை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஆபத்தான வேலைகள் செய்ய பின்னணியில் அரசியல் கட்சிகளும், இந்த தேசத்திற்கு எதிரான அமைப்புகளும் இவர்களுடன் ரகசியமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி உளவுத்துறை ஆய்வு செய்தால் ,இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் குரல் கொடுப்பார்கள். அது எப்படி என்றால்? பத்திரிகை சுதந்திரத்தை பிஜேபி அழிக்க பார்க்கிறது. இது இது நாட்டுக்கு ஆபத்தானது என்று அவர்களே உத்தமர்களாக குரல் கொடுப்பார்கள்.

இந்த குரலுக்கு தலைவராக ராகுல் காந்தி இருப்பார் .பின்னால் வெளிநாட்டு அந்நிய சக்திகள் இருக்கும் ‌.இதையெல்லாம் மத்திய அரசு ஏதோ சாதாரணமாக நினைத்து கடந்து விடக்கூடாது. இன்றைய இளைஞர்களுக்கு உண்மை தெரியாது.

அதிலும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் ,நான் குறிப்பாக படித்த இளைஞர்களையே சொல்கிறேன் .இன்னும் படிக்காதவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் .அவர்களுக்கு இன்னும் அரசியல் என்றால் ,சினிமாவில் வரும் காட்சிகள் போல் ,நடித்துவிட்டு போவது போல் ,நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே வசனம் பேசி நடிப்பது, வீடியோக்கள் போட்டு நடிப்பது, இவையெல்லாம் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது அவர்கள் மேல் தவறு இல்லை, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் சோசியல் மீடியாக்கள், இதுபோன்று ஒரு போலியான அரசியல் பிம்பத்தை உருவாக்குகிறது. அந்தப் போலியில் இவர்கள் விட்டில் பூச்சியாக மாட்டிக் கொள்ளக் கூடாது.

அதனால், அரசியல் தெரியாத மக்களுக்கும் ,இது போன்ற இளைஞர்களுக்கும் ,அரசியலை ஐந்தாம் வகுப்பிலிருந்து பாடத்தை அவர்கள் கற்க வேண்டும். அது அவர்களுடைய எதிர்கால நலனுக்கு முக்கியத்துவமானது. அதில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் ,இந்திய அரசியல் வரலாறு, மக்களின் கலாச்சாரம் ,இந்து மதத்தின் பெருமை, தமிழர்களின் பெருமை, இவை அத்தனையும் அதில் கொண்டு வர வேண்டும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்?இவர்களுடைய அரசியல் பேஸ்மெண்ட் சரியில்லாத காரணத்தால், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்கள், நடிகர்கள், அரசியல் போலிகள், போலி பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள், அத்தனையும் போலியான அரசியல் பிம்பத்தை உருவாக்குகிறது.

உழைக்காமல் ஊரை ஏமாற்றி, சட்டத்தை ஏமாற்றி, அரசியலில் கோடீஸ்வரர்களாக ஆவது எப்படி ? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் முக்கிய கொள்கை. இப்படி இருக்கும்போது, அரசியல் கட்சிகள் நாட்டில் பல ஓட்டுக்காக தான் அரசியல் செய்கிறது. வேலை வெட்டி இல்லாத வெத்து வெட்டுகள் , அரசியல் கட்சிகளில் பொறுப்புகளை கொடுத்து அவர்கள் சமூகத்திற்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதுதான் இன்றைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம்.

இதைவிட இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த இளைஞர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களை, இது போன்ற தேச துரோக அமைப்புகள், அரசியல் கட்சிகள், இவர்களை இந்த நாட்டுக்கு எதிராக ,சமூகத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள ,அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதற்கு ஆதரவாக எத்தனை பத்திரிகை ?தொலைக்காட்சிகள்? சோசியல் மீடியாக்கள் ?இணையதள பத்திரிகைகள் இருக்கிறது? என்பதை மத்திய அரசின் உளவுத்துறை கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். மேலும்,இவை அத்தனையும் மோடிக்கு எதிராக ஒரு அரசியலை, அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து மறைமுகமாக வேலை பார்க்கிறார்கள்.

மேலும், இந்த நாட்டுக்கு தேவையான பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் எது? இந்த சமூகத்திற்கு தேவையான பத்திரிகை, தொலைக்காட்சிகள் எது ?இணையதளங்கள் எது? பத்திரிகைகள் எது? இதை ஆய்வு செய்து, அதற்கு மட்டுமே சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள், இது போன்ற சிகப்பு குறியீடு உள்ள பத்திரிகைகள் எவை? என்று தரம் பிரித்து ,அதற்கு தகுந்தார் போல், இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

பத்திரிகையின் தரம், தகுதி அது சர்குலேஷனில் இல்லை. இந்த சர்குலேஷன் சட்டம் பத்திரிக்கை துறையை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றி வரும் சட்டம். இது கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே சாதகமான சட்டம், இதை களையெடுக்க வேண்டும். தவிர,

இந்த சட்டத்தை பயன்படுத்தி 30 சதவீதம் கமிஷன் கொடுத்து சலுகை, விளம்பரங்களை மத்திய , மாநில அரசின் செய்தி துறையில் ஏஜென்சிகள் மூலம் சலுகை, விளம்பரங்களை கார்ப்பரேட் மீடியாக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை பிரதமர் மோடி இப் பிரச்சனையில் முக்கிய கவனம் கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் ஊழல் அரசியலுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும், மறைமுக ஆதரவாக இருந்து கொண்டு, தினசரி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தான், அதாவது இவர்கள் மக்களுடைய வரிப்பணத்திலே, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் தான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள்.

இது தவிர, அரசியல் கட்சியை சார்ந்த வர்கள், சோஷியல் மீடியாவின் செய்திகளை முக்கியமாக பார்க்கிறார்கள்.படித்தவர்கள் இணையதள பத்திரிகைகளை அதிகம் படிக்கிறார்கள்.அதனால், மத்திய அரசு அச்சு ஊடகத்தின் சர்க்குலேஷன் ஏமாற்று வேலை.

மேலும், இந்த சலுகை, விளம்பரங்களை சமூக நலன், தேச நலன் உள்ள பத்திரிகைகளுக்கு மட்டுமே கொடுத்துவிட்டு, வியாபார மற்றும் அரசியல் கட்சிகளின் பத்திரிகைகளுக்கு உடனடியாக நிறுத்துவது நல்லது. இதனால் பல ஆயிரம் கோடி மக்களின் வரிபணம் மிச்சப்படுத்த முடியும்.

இது தவிர ,நாட்டில் சமூகவிரோதிகளோடு ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு பணத்திற்காக ,இந்த பத்திரிகை துறையை மீடியா என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தை, உளவுத்துறை தான் கண்காணித்து மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். அதற்கு சிவப்பு குறியீடு கொடுக்க வேண்டும்.மேலும்,

இன்று அரசியல் கேவலமான நிலைக்கு கொண்டு, வந்ததற்கு காரணம் இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் ,சோசியல் மீடியாக்கள், என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *