நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2024-2025ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியின் இணை பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கலைச்செல்வி பங்கேற்று, ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பில் பேசினார். அதில், இயற்கை சிந்தனைகளை மாணவியர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சங்க காலத்தில் இருந்து தொல்காப்பியம் வரையிலான தத்துவங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பது குறித்தும் மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்துறை தலைவர் (பொ) சுபலட்சுமி, பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.