பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப் படுத்தும், அரசின் நடவடிக்கைக்கு! எதிர்ப்பு தெரிவித்து வலுக்கும் கிராம மக்களின் போராட்டம் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தின் தேவையானது விவசாயம். இந்த விவசாயத்தை அழித்துவிட்டு, விமான நிலையம் அமைக்கும் பணி அரசின் நடவடிக்கைக்கு பரந்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கையில் எடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் விஜய் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் நடத்துகிறார்களே ஒழிய ,மக்களின் தேவைக்காக இவர்கள் அரசியல் நடத்தவில்லை. மாறாக அவர்களுடைய தேவைக்காக அரசியல் நடத்திக் கொள்கிறார்கள்.

மேலும் ,அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அம்பானி வாழ வேண்டும் என்று நடுத்தர மக்களும் ,ஏழை மக்களும் பாதிக்க கூடாது என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் இது பற்றி தெளிவாக எதிர்த்து போராட முன் வரவில்லை‌.

இங்கே அதிகாரிகள் அரசின் எடுபிடிகளாக தான் வேலை செய்கிறார்களே ஒழிய, விவசாயத்தால் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை பற்றி சிந்திக்கவில்லை. மேலும், அரசு அதிகாரிகள் வெளியில் சொல்லுகின்ற இழப்பீட்டுத் தொகைக்கும், விவசாயிகளிடம் கொடுக்கின்ற இழப்பீட்டு ,தொகைக்கும் அதிக வித்தியாசம்.

இவர்கள் அதிகபட்சமாக அரசின் கைடு லைன் வேல்யு , இரண்டு மடங்கு அது அதிகபட்சமாக சென்ட் 30 ஆயிரத்தற்குள் தான் வருகிறது என தெரிவிக்கின்றனர்.மேலும், அப் பகுதி விவசாயிகளுக்கு அந்த கிராமத்தை விட்டு ,தங்கள் வாழ்வாதாரத்தை விட்டு செல்வதற்கு மனமில்லை. அதனால், மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் இவர்களின் போராட்டம் திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும்,

விவசாயம் அழிந்தால் ! நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். இன்று விவசாயிகளே போராட்டமான சூழ்நிலையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேலும், விவசாயத்தை அழித்து விட்டு ,அந்த இடத்தில் விமான நிலையம் கட்டி பணம் சம்பாதிக்க துடிப்பது மனசாட்சி இல்லாத திமுக அரசின் வேலை.

மக்களுக்கு விமான நிலையத்தை விட விவசாயம் மிகவும் அவசியமானது. மேலும் ,அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் யாரும் ஏறப்போவதில்லை. எங்கிருந்தோ வருபவர்கள் ,எங்கிருந்த போபவர்கள் பணக்காரர்கள் அவர்களுக்கு வசதி ஏற்படுத்த துடிக்கின்ற திமுக அரசு, ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை என்றால் இனி வருங்காலத்தில் திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .

இது குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் இதற்கான யோகம். எப்படியோ ஆரம்பத்தில் இந்த கட்சியை அண்ணா, அன்பில் தர்மலிங்கம், போன்ற நல்ல உள்ளங்கள் சமூக நன்மைக்காக வாழ்ந்து இருப்பதை மறுக்க முடியாது.

மேலும், அவர்களால் ஏற்படுத்தி விட்டுப் போன இந்த திமுக ,அது கருணாநிதி காலை வைத்ததிளிலிருந்து திமுக கட்சி சுயநலமாக மாறிவிட்டது. அவர்கள் எல்லாம் இருந்தால் !இந்த விjமான நிலையம் அமைக்கும் பணிக்கு உத்தரவே போட்டு இருக்க மாட்டார்கள்.

அவர்களுடைய ஒரு மனசாட்சி மக்களைப் பற்றி சிந்தித்தது. இவர்கள் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவர்களைப் பற்றி தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், திமுகவுக்கு எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறியாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *