
தமிழ்நாட்டில் திமுக மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் அறிவித்து ,சில மாதங்களாக கொடுக்காமல்,, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாய் 5 000 கொடுத்துள்ளது.
இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணமா? என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமி அதே மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாய் கொடுக்க அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்புகளை எந்த பணத்தில் இவர்கள் கொடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், அந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தக்கூடாது.

மக்களுடைய வரிப்பணத்தில் தானே இந்த இலவச அறிவிப்புக்கள்? ஆயிரம் பேர் உழைத்தால் 10000 பேர் இலவசங்களை அனுபவிக்கிறார்கள். இங்கே அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம் ,ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று, வேலை கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் போராட்டம்.
இப்படி உழைப்பவர்களுக்கு ஏற்ற ஊதியத்தை முதலில் அரசு ஊழியர்களாக இருக்கட்டும் ,தனியார் ஊழியர்களாக இருக்கட்டும், இரண்டு பேருக்குமே முதலில் ஊதியத்தை ஒழுங்காக கொடுங்கள்.

டாஸ்மாக் கடையை மூடுங்கள், போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுங்கள். இலவசத்தை நிறுத்துங்கள். இலவசத்தை யாருக்கு கொடுக்க வேண்டும்? என்று ஒரு வரைமுறை படுத்துங்கள்.

கை ,கால் ஊனமுற்றவர்கள், வேலைக்குப் போக முடியாத வயதானவர்கள், உழைக்க உடல் தகுதியற்றவர்களுக்கு தான் இலவச வேண்டும். உழைப்பவர்களுக்கு ஏன்? இலவசத்தை கொடுக்கிறீர்கள்?

மக்களை சோம்பேறியாகாதீர்கள். 100 நாள் வேலை திட்டத்தை ஒழுங்காக விவசாயத்தில் இணைத்து, விவசாயத்தை மேம்படுத்துங்கள். இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கு சட்டம் கொண்டு வாருங்கள். மக்களின் பாதுகாப்புக்கு சட்டத்தை கடுமையாக்கங்கள்.

அரசியல் கட்சியினரின் அடாவடித்தனங்கள், அராஜகங்கள், கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை கொண்டு வாருங்கள்.

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் கொண்டு வாருங்கள். சமூகநலன் பத்திரிகையாளர்களுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுத்து தகுதியான பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களை ஊக்குவியுங்கள்.

விவசாயத்தை மேம்படுத்த விவசாய குடும்பங்களுக்கு ஓய்வூதியம் கொண்டு வாருங்கள். அதே போல், தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்கள்.

இதைவிட முக்கியமானது தரமான கல்வியும், தரமான மருத்துவமும் அரசு மருத்துவமனையில், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கும் ,பொது மக்களுக்கும் கொடுத்தால், இதைவிட இலவசமும், இதைவிட நல்லாட்சியும் ,வேறு எதுவும் இருக்காது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து, இலவசத்தை ஒழியுங்கள். நாட்டில் மது போதையை ஒழியுங்கள்.மேலும்,
அதற்கு மாற்றாக தென்னை மற்றும் பனை மரத்தின் கள்ளை பயன்படுத்துங்கள். இப்படி ஒரு போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுங்கள். இதில் இருக்கிறது ?உங்களுடைய அரசியல்.

அதை விட்டு ,விட்டு மாறி ,மாறி இதே ஊழல் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவர மீண்டும் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டால், இதைவிட தகுதியற்ற அரசியல் வேறு எதுவும் இருக்காது.