விதிமுறைகளை மீறி ,திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரின் பண விநியோகம் ! தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யுமா ? – தமிழக வெற்றி கழகத்தின் புசி ஆனந்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் ஆணையம் தேர்தலில், பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது மக்களுக்கான தேர்தல்! விதிமுறைகளை மீறி திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரின் பண விநியோகம் ! தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யுமா ?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் புசி ஆனந்த் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய ஆதரவாளர்கள் அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் போது ,தமிழக வெற்றி கழகத்தினரால் சுமார் ஒரு கோடி ரூபாய் பிடிப்பட்டுள்ளது.

அதை தமிழக வெற்றி கழகத்தின் திருப்பரம் குன்றம் வேட்பாளர் நிர்மல் குமார் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் கிருத்திகா தங்கபாண்டியன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் போது, போலீசில் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறை அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் வெளிவருவதால், உடனடியாக தேர்தல் ஆணையம் நடந்த சம்பவம் குறித்து , முறையான விசாரணை செய்து கிருத்திகா தங்க பாண்டியனை தகுதி நீக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோல் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எத்தனையோ முறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போதாவது அதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றுமா? மேலும்,தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்குவதும், அல்லது பூத் ஏஜெண்டுகளை விலைக்கு வாங்குவதும், கள்ள ஓட்டு போடுவதும், இது எல்லாம் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்.

எனவே, தேர்தல் ஆணையம் பணம் கொடுத்திருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதால், உடனடியாக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதுதான் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *