காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும்,

இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா?

நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதைப் பற்றி மத்திய அரசும், மாநில அரசும், காதில் வாங்காமல் அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்று, தொடர்ந்து மாவட்ட நிர்வாக அலுவலர்களை வைத்து ,சிலருடைய சொத்துக்களை வாங்கி இருப்பதாக தகவல். ஆனால், ஏகனாபரம் கிராமத்தில் மட்டும், அது நடக்கவில்லை.

அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக தற்போது கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். மேலும், அதிகாரிகள் தங்களுடைய சொத்துக்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்துக்களை நம்பி அப்பகுதி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் ,கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.மேலும்,

இந்த மக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா? தவிர,இப் பிரச்சனையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்தித்து, வாக்குறுதி கொடுத்துள்ளார். இப் பிரச்சனைக்காக, உங்களோடு சேர்ந்து நான் போராடுவேன் என்று தெரிவித்துள்ளார் .

இப் பிரச்சனையில் அவரும் தலையிடுவார் என்பது அப் பகுதி மக்களின் நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *