நாட்டில் எப்படியும் பேசுவது அரசியலா? எதற்காக ?அரசியல்! எதற்காக?அரசியல் கட்சிகள், உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகணுமா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

ஒருவன் உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகணுமா? அரசியல் மற்றும் அரசியல் கட்சி இதற்கு அர்த்தம் தெரியாமல் திமுக, அதிமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து தவெக, பிஜேபி, போன்ற பல அரசியல் கட்சிகளில் இன்று அரசியல் கட்சி என்றால் அது தங்களை பணக்காரனாக்கிக் கொள்ள பதவி வெறியோடு அலைந்து கொண்டிருப்பவர்களை பார்க்க முடிகிறது.

ஆனால், மக்களுக்காக,மக்கள் நலனுக்காக, யாராவது இருக்கிறார்களா ?என்று எல்லா அரசியல் கட்சிகளிலும், தேட வேண்டி இருக்கிறது. சமூகப் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் பிரச்சினையாக இருக்கட்டும், அதை காது கொடுத்து கேட்க கூட ஆட்கள் இல்லை. அவ்வளவு சுயநலமாகி விட்டது. அதனால்தான் அரசியல்! என்பது இன்று பொது மக்களுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது. இதற்கு காரணம் என்ன?

இன்று நாட்டில் எப்படி ஏமாற்றினாலும், பணம் சம்பாதிக்கணும் .அதில் தான் திறமை. ஏமாற்ற தகுதி இல்லாதவர்கள் திறமை இல்லாதவர்கள். அதுவும் சட்டப்படி அரசியலில் அரசியல் கட்சிகளில் நிர்வாகத்தில் சட்டப்படி ஏமாற்றி கொள்ளையடிப்பது திறமை ஆகிவிட்டது.

அதற்கு அரசியல் கட்சிகள் எப்படி பேசுவது? அவர்கள் திறமையாகி விட்டது. அதேபோல் youtube பர்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள், இப்படி பல வகையில் ஒருவரை எப்படி ஏமாற்றுவது? திறமையாக பேசுவது? பேசிக் கவிழ்ப்பது? அது ஒரு நயவஞ்சக வேலை ஆகிவிட்டது.

அறிவுக்கும் ,ஏமாற்றுவதற்கும், திறமைக்கும், அர்த்தம் தெரியாத கூட்டங்கள் எல்லாம், யூட்யூபில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? யார் எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்? எந்த வழியில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுடைய அரசியல் என்ன? இதைப் பார்த்து மக்களுக்கு கொள்ளை அடிக்க அரசியலில் கற்றுக் கொள்ள சொல்கிறார்களா?

இதை எல்லாம் youtube ல் பேசிக் மக்கள் பார்த்துவிட்டு ஆ என்று நினைத்துக் கொண்டு போக வேண்டியது தான். அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. வாக்களித்து விட்டார்கள் ஐந்து வருடம் கொள்ளை அடிப்பார்கள் .அந்த கொள்ளையை பட்டியல் போட்டு சொல்லிவிட்டு இவர்கள் காசு பணத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

எவ்வளவு பேர் தன்னுடைய யூடியூப் சேனலை பார்க்கிறார்கள்? இது தேவையா? தகுதியற்ற ஒருவனை அரசியல் கட்சிக்காரன் என்று தேர்வு செய்து விட்டு அல்லது அவனை பதவியில் அமர்த்தி உட்கார வைத்துவிட்டு, மக்கள் அவனுடைய ஊழல் கணக்கை பார்த்துக் கொண்டிருப்பது, முட்டாள்கள் வேலை .அறிவாளிகள் வேலை அல்ல. எனவே, மக்களுக்கு தேவை அரசியல் விழிப்புணர்வு !அதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து பல செய்திகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.மேலும்,

மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இந்த மக்கள் ஏமாறுகிறார்கள். அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது .அந்த வியாபாரத்தை உடைக்க வேண்டும் என்றால், மக்கள் அரசியலைப் படிக்க வேண்டும் அரசியலைப் பற்றி, இந்த ஏமாற்றுக்காரர்கள் இடம், இருந்து நாம் ,எப்படி விடுபட வேண்டும்? நமக்கான அரசியலை, நாம் எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

அதை ஒவ்வொரு மக்களும், சிந்தித்து செயல்பட்டால், நிச்சயம் இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், youtube கள் அவர்கள் பேசுவது யாருக்காக ?என்பது உங்களுக்கு அது புரிய வரும்.மேலும்,

எனக்கு கூலி கொடுத்தால், நீங்கள் என்ன சொன்னாலும் ,நான் செய்கிறேன். இந்த வகையில் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் முதல் சாமானிய பத்திரிகைகள் வரை இதுதான் நிலைமை.இதில் ஏதோ ஒன்று ,இரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

காரணம் இன்று ஒரு பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றால் ,அதற்கு பணம் முக்கியமானது. அடுத்தது உழைப்பு முக்கியமானது .அதற்கான திறமை ,தகுதி, முக்கியமானது.

இது சாமானிய பத்திரிகைகளிடம் மிக மிகக் குறைவு. அதனால் அவர்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும், விலை போய்க் கொண்டிருப்பார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே விலை போய்க்கொண்டிருக்கும் போது, சாதாரண பத்திரிகைகள் எந்த மூலைக்கு? ஏதோ மக்கள் அதிகாரம் போல் ஒன்று, இரண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதையும் நூறு சதவீதம் நான் பார்க்கவில்லை.

இன்று அரசியல் ஏமாற்றமாக ஆகிவிட்டதால், அதைத் தொடர்ந்து மக்களுக்கு எல்லாமே ஏமாற்றமாக நின்று கொண்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் முன்னேற்றம், சமூக முன்னேற்றம்,அரசியல் கட்சியால் தான் மக்களின் முன்னேற்றம்…! சமூக முன்னேற்றத்தை விட அரசியல் கட்சியினரின் முன்னேற்றமே அவர்களுக்கு முக்கியமாகியுள்ளது.மேலும்,

மத்தியில் ஆளுகின்ற அரசியல் கட்சியால் தான் நாட்டின் பாதுகாப்பு ,நாட்டின் முன்னேற்றம்….! இதை ஏன் தமிழ்நாட்டில் இந்த ஏமாற்று அரசியல் வந்தது? எப்போது வந்தது? இது எப்போது மக்கள் நடிகர்களையும், சினிமாக்காரர்களையும், அரசியலுக்கு கொண்டு வந்தார்களோ, அப்போதே இந்த ஏமாற்று அரசியல் ஆரம்பித்துவிட்டது. அரசியலில்!

பேசுபவர்கள் உழைக்காமல் அரசியலில் முன்னேறியவர்கள் . இன்று நாட்டில் மில்லினர்களாக இருக்கிறார்கள். உழைப்பு என்பது நடிப்பிடம் ,பேச்சுக்களிடம் தோற்றுப் போய்விட்டது .

ஒருவன் படித்து கஷ்டப்பட்டு, பட்டம் வாங்கி, அவனால் சம்பாதிக்க முடியவில்லை .வேதனைப்படுகிறான். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அந்த தனியார் கம்பெனிகளில் தற்போது கூட மோடி கொண்டு வந்திருக்கிற சட்டம் முதலாளிக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்கிறார்கள். ஒரு பட்டதாரிகளுக்கு அந்த கம்பெனியில் எவ்வளவு சம்பளம்? என்பது கூட நிர்ணயிக்கவில்லை.மேலும்,

அவர்களுக்கு வெளிநாட்டு பிரச்சனை, உள்நாட்டு பிரச்சனை, அரசியல் கட்சி பிரச்சனை ,இப்படி தான் அவர்களால் நிணைக்க முடிகிறது .ஆனால், சாமானிய மக்களின் பிரச்சனைகள் என்ன? என்பதை பற்றி எந்த ஊடகங்கள் சொல்லப் போகிறது? அதற்காக தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து சாமானிய ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறது. இப்போதாவது கார்ப்பரேட்டுக்கும் ,சாமானிய பத்திரிகைகளுக்கும், அர்த்தம் புரிந்திருக்கும்.

நாட்டில் பேசுபவன் எல்லாம் அரசியல்வாதி என்று கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் தொடர்ந்து அவர்களிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா? கார்ப்பரேட் பத்திரிகை வியாபாரம்?

மக்களுக்காக உழைப்பவன் தான் அரசியல்வாதி! பேசுபவன் அரசியல்வாதி கிடையாது. சினிமாவில் நடிப்பவன் எல்லாம் அரசியல்வாதி ஆகிவிட முடியாது. அது சினிமாவுக்கு பொருந்தும். நிஜ வாழ்க்கைக்கு பொருந்தாது. எம்ஜிஆரை வைத்து எல்லோரும் அரசியலில் ஒப்பிட முடியாது.

எம்ஜிஆர் சம்பாதித்ததை மக்களிடமே விட்டு ,விட்டு போய்விட்டார். அதுபோல் எல்லோரும் போக மாட்டார்கள். காரணம் எம்ஜிஆருக்கு குடும்பம் இல்லை. வாரிசுகள் இல்லை .அவர் கட்சியை குடும்பமாக நினைத்துக் கொண்டார். அதனால்,

தமிழ்நாட்டில் தி க என்ற ஒரு கட்சி !திமுகவாக ஆரம்பிக்கும் போது, பேசியே தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தார்கள். பொய் சொல்லியே தமிழ்நாட்டை பிடித்தார்கள். அவர்கள் உழைத்தது என்ன? அவர்களுடைய மூலதனம் என்ன? எதுவும் கிடையாது. மக்கள் ஏமாந்தார்கள். எம்ஜிஆரை காட்டியே அரசியல் பிழைப்பு நடத்தினார்கள்.

இது பழைய வரலாறாக இருந்தாலும், இன்றைய மக்கள் படித்தவர்கள், பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள்,விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மற்றும் எல்லோருக்கும் அவர்களுடைய முன்னேற்றம் போட்டியாகி விட்டது.

காரணம் அரசியல் என்பது இன்று வியாபாரம் ஆகி உச்சத்தில் நிற்கிறது. சிந்திக்காமல் மக்கள் வாழ்ந்ததன் விளைவு ?இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்து அரசியல் மக்களை சேர்த்திருக்கிறது. இது எதனால்? ஊருக்கு பத்து அரசியல் கட்சிகள், ஜாதி கட்சிகள், மதம் கட்சிகள் ,அரசியல் கட்சிகள் இவை அத்தனையும் இந்த மக்களை எப்படி ஏமாற்றுவது ?என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓட்டை பற்றி தான் சிந்திப்பார்களே ஒழிய, நாட்டைப் பற்றியும், இந்த சமூகத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும், சிந்திக்க மாட்டார்கள். அவர்களுடைய சிந்தனையின், நோக்கம், பதவி வெறியில் …!எத்தனை கோடி கொள்ளை ….!அடிக்கலாம்? எத்தனை கோடி அரசியல் வியாபாரம் செய்யலாம்? இதுதான் இன்றைய அரசியல் ஆகிவிட்டது.மேலும்,

அந்த அளவிற்கு பதவி வெறியும், ,பணமும் இவர்களை ஆட்டிப் படைக்கிறது? நாட்டில் மக்களுக்காக எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றன? தேட வேண்டி இருக்கிறது. எப்படி மக்களுக்காக பத்திரிக்கை தொலைக்காட்சிகள் தேட வேண்டி இருக்கிறதோ அதே போல் தான், இன்றைய அரசியல் கட்சிகளில், மக்களுக்கான அரசியல் கட்சி எது? என்று தேட வேண்டி இருக்கிறது?

அன்று பொது நலத்திற்காக இருந்த அரசியல் கட்சிகள் , இன்று அவர்களின் சுயநலத்திற்காக அரசியல் கட்சியாக மாறிவிட்டது. இதற்கு பெயர் தான் தொண்டர்களா? இதற்கு பெயர்தான் கட்சியா? மேலும்,

ஒவ்வொரு அரசியல் கட்சியும், எந்த நோக்கத்திற்காக ,இவர்கள் இருக்கிறார்கள் ?என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

திமுகவில் எம்எல்ஏ இருந்து ஐந்தாண்டு ,பத்தாண்டு கொள்ளையடித்து விட்டு,அதிமுகவிற்கு போகிறார்கள், அதேபோல்,அதிமுகவில் மந்திரியாக இருந்தவர்கள் ,திமுகவுக்கு போகிறார்கள். இது இரண்டிலிருந்தும், தவெக்காவிற்கு போகிறார்கள். எதற்காக போகிறார்கள்? ஐந்தாண்டு கொள்ளையடித்தது போதாதா? மேலும்,

மக்களுக்கு பணி செய்ய….! சேவை செய்ய …..! பதவி அதிகாரம் இருந்தால்தான் செய்ய முடியுமா? ஒரு மனிதனுக்கு தேவை என்னவோ அது இருந்தும், எதற்காக அலைகிறார்கள்?

எம்எல்ஏ ,எம்பி, மந்திரி பதவி எல்லாம் மக்களுக்கு சேவை செய்யவா? சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிக்கவா? படித்த மக்கள், படிக்காத மக்கள், அரசியல் தெரியாமல், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் , யூடியூபர்களும், சொந்த நலனுக்காக அவரவர் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

நாட்டில் இலவசமாக கருத்து சொல்வது சுலபமான வேலை. ஆனால், உண்மை எது? என்பது சிந்திக்க வேண்டும். மக்களுக்கு சிந்திக்க நேரமில்லாமல், இந்த யூடியூப் அவர்களின் வீடியோவை பார்த்துவிட்டு, முடிவெடுப்பது, நாடு இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால், இன்னும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.மேலும்,

மக்களின் சுயநலம் ,அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவது அல்ல, இந்த நாடும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும். அப்படித்தான் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறு, நாட்டுக்கு எவ்வளவு இழப்புக்கள் ?உயிரிழப்புக்கள்? பொருள் இழப்புகள் ?தீவிரவாதங்கள்? ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறீர்கள்.

மேலும்,ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், ஊழலை பற்றி ஒருவரிடம் சொன்னால், கிராமங்களில் ஏதோ ஊழல் செய்தார்களாம் என்று சாதாரணமாக பேசிவிட்டு போகிறவர்களும் உண்டு. யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? நான் ஆடு மேய்க்க போகிறேன். மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பணத்தை வாங்கிக்கொண்டு, வாக்களிப்பது இவர்களுக்கும், இப்படிப்பட்டவர்களின் தேர்வு போராட்டம் தான்.

10 ஆடு,மாடு, திருடு போய்விட்டால் ,கூட நீதி கிடைக்காது. இது அடித்தட்டு மக்களின் கதறல். எத்தனையோ பேர் மருத்துவமனைக்கு சென்று, அங்கு சரியான மருத்துவ வசதி இல்லை என்று கதறும், கதறல்கள் அவர்களுக்கு தெரியும். ஆனால், மறந்து விடுகிறார்கள். நம் தமிழ்நாட்டு மக்களுக்கு மறதி என்பது அதிகமான ஒன்று.மேலும்,

இவர்களுடைய அலட்சியம் உழைப்பவர்கள் முன்னேற்றத்திற்கு! ஊழல்வாதிகளால், பெரிய போராட்டம் .அதே போல் வருங்கால இளைய தலைமுறைகள் ,அவர்களுடைய முன்னேற்றம் …?வேலைவாய்ப்பு….? தொழில் ….?கல்வி …..? சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக பாதுகாப்பு பிரச்சனை ….!அனைத்தும் கேள்விக்குறியாகிறது .

அது மட்டுமல்ல, பெண்கள் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதை எல்லாம் மக்கள் இப்படிப்பட்ட இந்த சுயநல அரசியல் கட்சிகள் இடம் இருந்தும், சுயநல அரசியல்வாதிகளிடமிருந்தும் நாட்டையே எப்படி காப்பாற்றப் போகிறார்கள் இவர்களை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்கள்….?

இதுதான் மக்களின் அரசியல் அதிகாரம்? உங்களை பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தேர்தலில் வாக்களிக்கும் ,முன் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தகுதி என்ன? செயல்பாடுகள் என்ன? சேவைகள் என்ன? அணுகுமுறைகள் என்ன? நாட்டுக்கு செய்த சேவை என்ன? நாட்டை வழி நடத்தக்கூடிய தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு தகுதியான நபர்களா இவர்கள்? எந்த விதத்தில் இவர்கள் அதற்கு தகுதியானவர்கள்? மைக்கில் பேசிவிட்டு, கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி மைக்கைகளில் பேசுபவர்கள் ,எல்லாம் பெரிய அரசியல்வாதியா? தன்னை சமூக சேவையாளன் என்று காட்டிக் கொள்ளும் பந்தா அரசியலை நம்பி ஏமாறுவீர்களா? அல்லது இவர்களிடமிருந்து இந்த நாட்டையும் உங்களையும் பாதுகாத்துக் கொள்வீர்களா?

சிந்தித்து செயல்படுவது உங்களின் முக்கிய கடமை . இலவசத்தால் உங்கள் வறுமை ஒழிந்து விடாது. 2000, 5000, பத்தாயிரம் கொடுத்தாலும், உங்கள் வறுமை நீக்கிவிட முடியாது. இந்த உண்மைகளை சொல்ல பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மிக மிகக் குறைவு .அதனால் ,இதைப் பற்றி ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்திப்பார்களா……?

இதைவிட ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால்,தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 100 முறை கூட நடப்பார்கள். ஆனால், வெற்றி பெற்று பதவியில் உட்கார்ந்து விட்டால், எங்கே பார்த்தது போல் பார்ப்பார்கள். அதுதான் இன்றைய அரசியல் கட்சி வியாபாரிகளின் நிலைமை மக்கள் ஏமாந்தால் அவர்கள் ஏறி மிதிப்பார்கள்…! வாக்காளர்கள் உண்மையை சிந்திப்பார்களா?

அதுதான் இந்த நாட்டையும், உங்களையும் காப்பாற்றுகின்ற முக்கிய அரசியல் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *