ஊழல்வாதிகளின் சொத்துக்கள் உடனடி பறிமுதல் ! மட்டுமே, இதற்கு தீர்வு – மத்திய அரசு கொண்டு வருமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை உடனடி பறிமுதல் தேவை . ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் ஊழல் செய்த சொத்துக்களை, அவருடைய வாக்குமூலம் ,சட்டமூலம் எதுவுமே கேட்கத் தேவையில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ,அவர் வேண்டுமானால், நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றத்தில் கொண்டு, போய் வழக்காடி பிறகு அந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளட்டும். ஆனால், அரசியலில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வருட கணக்கில் காலதாமதம் ஆகிறது. மேலும்,

அவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை வருமானவரித்துறை, நாட்டில் இருக்கின்ற எத்தனை உளவு அமைப்புகளும், அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு ஒரு தனி சட்டமாகவே இருக்கிறது.

ஆனால், அதுவே ஒரு அதிகாரி ஐ. பி.எஸ் ஓ, ஐ.பி.எஸ் ஓ, அது மத்திய அரசு ஊழியராக இருந்தாலும், மாநில அரசு ஊழியராக இருந்தாலும், அல்லது பாமர மக்களாக இருந்தாலும், வேறு எங்களைப் போன்ற பத்திரிக்கை துறையாக இருந்தாலும், நீதித்துறையை சார்ந்த வழக்கறிஞர்களாக இருந்தாலும்,உடனடியாக கைது நடவடிக்கை, சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆனால், இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை? இது ஒரு தவறான சலுகை. சட்டமும் தவறான சட்டம். நீதிமன்றமும், இவர்களுக்கு வயதாகப் போட்டுக் கொண்டிருக்கிறது. மந்திரிகளுக்கு நாட்டில் இவர்களுக்கு என்று ஒரு தனி சட்டம் இருக்கிறதா? அப்படி என்றால், ஏன் இந்த பாகுபாடு? அதிகாரம் மக்கள் கொடுத்தது ,இவர்கள் ஒன்றும் பிறக்கும்போதே, அதிகாரத்தை கையில் கொண்டு வரவில்லை.

அப்படி இருக்கும்போது, ஏன் ?அரசியல்வாதிகளுக்கு, சட்டத்தில் இப்படிப்பட்ட இந்த சலுகை ஏன்? இதை மாற்றாமல், ஊழலை ஒழிக்க முடியாது. ஒருவேளை நீதிபதிகள் கொடுக்கிறார்களா?

இதனால்தான் நாட்டில்,ஊழல் வாதியும் நிரபராதி போல், மேடையில் பேசிக் கொண்டிருப்பான். ஊழல் செய்தவனும், வழக்கு இருப்பவனும், ஊழலைப் பற்றி பேசி, கார்ப்பரேட் பத்திரிகை ,ஊடகங்களில் தன்னை நேர்மையானவன் என்று காட்டிக் கொண்டிருப்பான். இதையெல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்கள் தான் நம்ப வேண்டும். தெரிந்தவர்கள் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியும்? மேலும்,

நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளை வருட கணக்கில் கொண்டு சென்று, நீர்த்துப் போக செய்வது, இல்லை என்றால், அதை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கி ,அவர்களுக்கு வேண்டிய ஊடகங்கள் மூலம், அந்த பிரச்சனைகளை அரசியல் ஆக்கிக் கொண்டிருப்பது ,இது எல்லாம் உழைக்கும் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றும் வேலை.

மேலும் ,அரசியல் என்பது ஊரை ஏமாற்றுபவர்களுக்கும் ,சட்டத்தை ஏமாற்றுபவர்களுக்கும் ,அரசியல் சாதகமாக இருந்தால் ,உழைத்து முன்னேறு பவர்களுக்கு, நாட்டில் ஊதியம் கிடைக்காமல் ,போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால், அரசியல் கட்சியினருக்காக ,ஒரு தனி சட்டம் நாட்டில் கொண்டு வர வேண்டும்.மேலும்,

தேர்தல் ஆணையத்தில் ஒவ்வொரு வேட்பாளரும், தங்களுடைய சொத்து கணக்கு சரியான முறையில் காட்ட வேண்டும். பொய்யான போலி சொத்து கணக்குகளை காட்டினால், உடனடியாக அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இங்கேயே இவருடைய நேர்மை இல்லை என்றால் ,இவர் எப்படி மக்களுக்காக நேர்மையாக உழைப்பார்?

மேலும்,ஒவ்வொரு வருடமும், அவர்களுடைய வருமான வரியை தாக்கல் செய்யும் போது உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்களும் தங்களுடைய சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், தன்னுடைய பதவி காலத்தில் ஒருவர் அதிகமாக சொத்து சேர்த்திருந்தால், ,அல்லது பினாமி மூலம் சொத்து சேர்த்திருந்தால், அந்த சொத்தை நாட்டுடைமையாக்க சமாதிக்கிறேன் என்று வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் ஆணையத்தின் வேட்பு மனுவில் தங்களது வாக்குமூலமாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும்,இதுபோல், மக்கள் கொடுத்த அதிகாரத்தை தவறாக அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ,அவர்கள் மீது கடும் நடவடிக்கை உடனடி எடுக்க வேண்டும் . இப்படி கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் தகுதியானவர்கள் மட்டுமே அரசியலில் இருப்பார்கள். நேர்மையானவர்கள் மட்டுமே அரசியலில் இருப்பார்கள்.

இப்படி கடும் சட்டங்கள் மூலம் தான் நாட்டில் ஊழலை ஒழிக்க (75% ok ஆவது )முடியும். அது மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு கொள்ளை அடித்தாலும், அது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்துவது, நீதிமன்றத்தின் காலத்தை, நேரத்தை, வீண்டிப்பதாக இருக்கும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

மேலும், இன்றைய அரசியல் கட்சிகளில் பிராடுகள், கிரிமினல்கள் ,வெத்து வெட்டுகள், சுயநலவாதிகள், வியாபாரிகள், இவர்களுடைய புகலிடமாக இருக்கிறது. இப்படிப்பட்ட கடும் சட்டங்கள் கொண்டு வந்தால்தான் நாட்டில் உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும். உழைக்கும் மக்களின் முன்னேற்றம் ,நாட்டின் முன்னேற்றம் ,சமூக முன்னேற்றம், அனைத்துமே இதில்தான் அடங்கியிருக்கிறது.மேலும்,

தற்போதைய அரசியல் கட்சியினருக்கு ,சமூக நோக்கத்தை விட, இவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கம் தான் அதிகரித்துள்ளது. அதனால் தான் அரசியலில் ரவுடிகள், கிரிமினல் வழக்கு உள்ளவர்கள், கிரிமினல்கள் ,அடியாட்கள் ,இவர்கள் அத்தனை பேருக்கும், அரசியல் கட்சி என்பது இவர்களை உயர்த்திக் கொள்ள இருக்கின்ற ஒரு மடமாக மாற்றி விட்டார்கள்.மேலும்,

இதை எந்த ஒரு பத்திரிகை ,தொலைக்காட்சியும், மக்களுக்காக இதைப் பற்றி பேசி இருப்பார்களா? அல்லது விவாத மேடை உதவாத பிரச்சனைக்கு எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதற்காக பேசுவார்களா ?

இதற்காக பேசினால் கட்சிக்காரன் காசு கொடுக்க மாட்டான். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், நாட்டில் தற்போது குடிகாரனாக இருந்தாலும் ,பரவாயில்லை, நமக்கு தேவை, அவன் நமக்கு ஓட்டளிக்க பயன்படுவான்.எனவே,

இப்படிப்பட்ட நபர்களுக்கெல்லாம் எதற்காக இந்த அரசியல் கட்சிகளில் பொறுப்பு ,பதவிகளை கொடுத்து, படித்தவனையும், உழைத்து பிழைப்பவனையும், முட்டாளாக்கும் வேலையை அரசியல் கட்சிகள் நாட்டில் செய்து கொண்டிருக்கிறது.

யாருக்கு அரசியல் தேவை! உழைப்பவனுக்கு தேவை! அரசியல் என்பது அரசியல் கட்சிகளில் இருக்கிற அடி முட்டாள்கள், குடிகாரர்கள், அடியாட்கள், உழைக்காத சோம்பேறிகள், உரையை மாற்றுபவர்கள், சற்று மோசடி செய்பவர்கள், இவர்களுக்கு தான் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தேவைப்படுகிறதா?.

மேலும்,நாட்டின் முன்னேற்றம், சமூக முன்னேற்றம், எல்லாமே அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை மக்கள் புரிந்து 2026 தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தவிர,படித்த சமுதாயம் கூட, இன்று சினிமா என்ற ஒரு மாயையில் சிக்கித் தவிக்கிறது.

மேலும்,நிழல் வேறு ,நிஜம் வேறு, எம்ஜிஆரை கொண்டு வந்து விஜய்யோடு ஒப்பிட முடியாது. அரசியலில் உழைப்பு மற்றும் தியாகம் உள்ள நபர்களுக்கு தான் கட்சியில் பொறுப்புக்களை கொடுக்க வேண்டும்.

ஆனால், கட்சி பேச்சாளர்களுக்கு பொறுப்புக்களை கொடுத்து , அவர்களை அரசியலில் பதவியில் உட்கார வைத்தால், ஊழல் தான் செய்வார்கள். அவர்களுடைய செயல்பாடு என்ன செய்திருக்கிறார்கள்? என்ன சாதித்து இருக்கிறார்கள்? திமுகவின் ஊழலை பற்றி பேசி இவர்கள் பரிசுத்தமாகிவிடுவார்களா? இல்லை பிஜேபியை குறை சொல்லி இவர்கள் உத்தமர்கள் ஆகிவிடுவார்களா? இப்படிதான் இவர்களுடைய பேச்சுக்களுக்கு கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் சான்றளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சான்று எல்லாம் அரசியல் தெரியாத அடி முட்டாள்களிடம்தான் இந்த சான்று செல்லும். அரசியலைப் பற்றி ஒவ்வொரு நாளும் படிக்கக்கூடிய மக்களுக்கு இது எடுபடாது. மேலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், இதை மக்களிடம் கொண்டு சென்று, இந்த போலி அரசியலையும், போலி பத்திரிக்கை பிம்பத்தையும் ,தோல் உரித்து , மக்களிடம் உண்மையை சொல்லுகிறது.

எனவே, பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், நாட்டில் கடுமையான சட்டங்களை கொண்டு வந்து அமுல்படுத்துவாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *