
20 .2 .2026 முதல் நடக்கக்கூடிய தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகுமா? மிகுந்த எதிர்பார்ப்புடன் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் இருந்து வருகிறது.

மேலும், செய்தி துறை அதிகாரிகளும், இந்த கோப்பு நிதித்துறையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது திமுக அரசின் முக்கிய கடமை . தவிர, பத்திரிக்கை பற்றி தெரிந்தவர்கள் தான் ,பத்திரிக்கை துறையை பற்றி எதை எப்படி செய்ய வேண்டும்? என்று தெரியும்.
இதில் எந்த, எந்த பத்திரிகைகள் தகுதியானது? யார் தகுதியான பத்திரிகையாளர்கள்? என்பதை ஆய்வு செய்து கூட, செய்து துறை இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்கட்டும் தவறு இல்லை.

ஏனென்றால் இந்தத் துறையில் போலிகளும் அதிகம் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிக்கை என்றால் ,செய்தி தரத்தின் அடிப்படையில், அது பத்திரிகை .ஆனால், பல பத்திரிக்கைகள் செய்திக்கே அர்த்தம் இல்லாமல், வெளிவந்து கொண்டிருக்கிறது .

இதையம் செய்தித்துறை பத்திரிகை என்று அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை . தினசரி பத்திரிக்கை, அது சர்குலேஷன் இல்லாவிட்டாலும், இருந்தாலும் ,அது தினசரி, மேலும், அது தங்களுடைய ஆட்சிக்கு ஜால்ராவாக இருந்தால் சரி.

அதனால், அதற்கு பஸ் பாஸ், விளம்பரங்கள் ,இதையெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி செய்தித் துறை, பத்திரிக்கையை ஒரு குறுகிய மனப்பான்மையில், அவர்களுடைய கண்ணோட்டத்தில், சுருக்கி விட்டார்கள். மேலும்,

பறந்து விரிந்து கிடக்கும் பத்திரிக்கை துறையின் எல்லைகள்? அதன் தூரம் ?கணக்கிட தெரியாமல், அரசு செய்திக்குள், தங்களுடைய அதிகார வட்டத்திற்குள் தாங்கள் சொல்வது தான் செய்தி , தாங்கள் சொல்வது தான் பத்திரிக்கை என்று செய்தித் துறையும் , செய்தித்துறை அதிகாரிகளும் ,தீர்மானித்து விட்டார்கள்.

இப்போது ஸ்டாலின் ஆட்சியில் பத்திரிகையாளர்களின் நல வாரியம் என்று ஒன்றை உருவாக்கி, அதில் கார்ப்பரேட் பத்திரிக்கை , மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்று இவர்களுடைய சுயநலத்திற்காக பத்திரிக்கை துறையில் நலவாரியம் அமைத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த பத்திரிக்கை துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் தெரிவிப்பது பத்திரிக்கை என்பது சமூகத்தின் அடையாளம், சமூக நலனுக்கானது. ஆனால், அது அதை விட்டு ,விட்டு ஆட்சிக்கும், அரசியல் கட்சிக்கும், பத்திரிகை வியாபாரத்திற்கும், இதுதான் பத்திரிக்கை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஊழலுக்கு எதிராக எத்தனை பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகிறது? எத்தனை பத்திரிகைகள் சமூக அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கிறது? எத்தனை பத்திரிகைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது? இதுதான் பத்திரிக்கை. இதற்கு தான் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு போகும்போதுதான் செய்தி துறைக்கு எது பத்திரிக்கை? என்பதை நிச்சயம் நிருபிக்கும். அப்போது இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் செய்தித்துறை நிற்கும்.

மேலும், சர்குலேஷன் என்பது உண்மையான சர்குலேஷன் எத்தனை பத்திரிகைகள் காட்டுகிறது? வியாபாரப் பத்திரிகைகளும், அரசியல் கட்சி பத்திரிகைகளும், ஆட்சிக்கு ஜால்ரா பத்திரிகைகளும், மக்களுடைய வரிப்பணத்தில் கொடுக்கின்ற சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டு சர்குலேஷன் காட்டினால், சொந்த பணத்தில் போட்டு பத்திரிக்கை நடத்துபவர்களின் போராட்டங்கள் குறித்து நீதித்துறைக்கு நிச்சயம் இது தெரியவரும்.

இங்கே சர்குலேஷன் முக்கியமா? சமூக நலன் முக்கியமா? இரண்டு முக்கியம் தான். அதை எங்களுக்கு அரசாங்கம் ஏமாற்றுகிறது. கார்ப்பரேட்டுக்கு முக்கியத்துவம் தருகிறது. அந்த முக்கியத்துவம் சமூக நலனுக்கு ஏன் தரவில்லை? என்பதுதான் தகுதியான பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் கேள்வி? இப்படி பட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ள செய்தி துறையின் செயல்பாடுகள் அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், இதில் மாற்றங்கள் அவசியம் தேவையானது.

இந்த மாற்றம் , பத்திரிக்கை துறையை, மக்கள் நலனுக்கான மற்றும் சமூக நலனுக்கான மாற்றமாக அது இருக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லாமல், இவர்களுடைய சுயநலத்திற்காக, செய்தித்துறை மாற்றப்பட்டுள்ளது.
அது என்ன என்றால்? கார்ப்பரேட் தான் பத்திரிகைகள்? தினசரி தான் பத்திரிகைகள்? என்பதை ஒரு குருட்டு மனப்பான்மையிலும், தங்களின் சுய லாபங்களுக்கும், இந்த பத்திரிகை துறையை செய்தித் துறை சீரழித்துக் கொண்டிருக்கிறது.
மேலும்,இந்த பத்திரிக்கை துறைக்கு கொடுக்கக்கூடிய சலுகை, விளம்பரங்கள், திமுக அரசு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கும், வழக்கிற்கும், அரசு சார்பில் செய்யக் கூடிய செலவை கணக்கிட்டால் கூட, அதில் பாதி கூட வராது. இப்படி இருக்கும்போது, மக்களின் வரிப்பணத்தை பாழ் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் .

இன்னொரு பக்கம், மக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்களை செய்தி ஆக்கி விட்டார்கள். இவையெல்லாம் செய்தித்துறை அதிகாரிகளுக்கு புரியுமா? அல்லது ஸ்டாலினுக்கு தான் இது புரியுமா?
நாட்டில் மக்களுக்கு, நல்ல ஆட்சியாளர்கள், நேர்மையான ஆட்சியாளர்கள், கிடைக்கும் வரை அவர்களுக்கு போராட்டம் தான் . ஏனென்றால்! உண்மையை எடுத்துச் சொல்வது பத்திரிகைகள், அந்த உண்மைகளை, நடுநிலையோடு சொல்லக்கூடிய தகுதி எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கிறது? இதைதான் செய்தித்துறை வரை முறைப்படுத்த வேண்டும். அந்தத் தகுதியை பெறுவதற்கு எத்தனை பத்திரிகைகள் அதற்கு தகுதியானது?

மேலும்,RNI மட்டுமே பத்திரிக்கையின் தகுதி அல்ல . அரசு அடையாள அட்டையோ அல்லது பத்திரிகையின் அடையாள அட்டையோ, அது செய்தியாளர்களின் தகுதியோ அல்லது பத்திரிகையாளர்களின் தகுதியோ, காட்டக் கூடியதல்ல. ஆனால்,அவர்கள் கொடுக்கக்கூடிய செய்திகள் தான் அவர்களுடைய தகுதியை வெளிப்படுத்தக் கூடியது.

அந்தத் தகுதி உள்ளவர்கள் ?எத்தனை பேருக்கு அரசு அடையாள அட்டையை தமிழக அரசு கொடுத்திருக்கிறார்கள்? எத்தனை பேர் பத்திரிக்கையின் அடையாள அட்டை? பத்திரிகையில் கொடுத்திருக்கிறார்கள்? இதில் எவ்வளவு போலிகள்? எவ்வளவு போலிசங்கங்கள்?
சமீபத்தில் கூட கேள்விப்பட்டேன்,வடசென்னை பகுதியில் வெளியாகும் ஒரு பத்திரிக்கை சார்பில் நடத்தப்படும் சங்கத்தின் பாராட்டு கூட்டங்களுக்கு சுமார் 5 லட்சம் கலெக்ஷன் வருவதாக தகவல். அதுவும், 15 நாளைக்கு ஒருமுறை இந்த கூட்டம் நடத்துகிறார்களாம். மாசத்திற்கு 10 லட்சம் பத்திரிக்கைகு உழைப்பே தேவையில்லை. இப்படி போலி பத்திரிகைகளும், போலி சங்கங்களும், பணத்தை மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கும் சென்னையில் உள்ள காவல்துறை இணை ஆணையர்கள் , காவல் ஆய்வாளர்கள் கலந்து கொள்கிறார்களாம் .

இந்த பத்திரிக்கைகள் எல்லாம்,இது சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வரும்? இதனால், என்ன மக்களுக்கு நன்மை? அக்கப்போர் செய்திகளும், மக்களுக்கு பயனற்ற செய்திகளும், அரசியல் கட்சியினரை விளம்பரப்படுத்தும் செய்திகளும், மக்களுக்கு தேவையற்றது. இதுயெல்லாம், ஒரு பத்திரிக்கையில் கணக்கே இல்லை. இப்படி தகுதியற்ற பத்திரிகைகளும், செய்தியாளர்கள் கூட்டங்களும், நாட்டில் சமூக விரோத செயல்கள் செய்பவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது . இந்த போலிகளை தான் களை எடுக்க வேண்டும்.

இது குறித்து மத்திய அரசின் செய்தி துறைக்கும், இதை தகுதியான பத்திரிகைகள் தெரியப்படுத்த வேண்டும் . மாநில அரசின் செய்தித் துறைக்கு இப்போதாவது பத்திரிக்கை துறையில் உள்ள அவலங்கள்? பத்திரிகை எது? என்பது புரிந்திருக்குமா? – ஆசிரியர்.