
தேர்தல் ஆணையம் இன்னும் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை . தமிழகம் முழுதும் உள்ள திமுக ஆதரவு அதிகாரிகளை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் சுயாட்சி வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகயாகவும், அது மிகப்பெரிய வேதனையாகவும் தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக இருந்து வரும் ரவிச்சந்திரன் திமுகவின் கட்சிக்காரர் போல் செயல்பட்டு வருபவர். இவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும், எம் எல் ஏ வி ராஜேந்திரனுடன் சேர்ந்து எப்படிப்பட்ட வழங்கினார்? அதை எப்படி மாவட்ட ஆட்சியர் அனுமதித்தார்? இது பற்றிய செய்தியை தேர்தல் அறிவிப்பு வந்த உடனே மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நேற்று ஒரு சுயாட்சி வேட்பாளர் ஒருவருக்கு ஏணி சின்னத்தை அறிவித்துவிட்டு, பிறகு, அதற்கு பதிலாக கட்டில் சின்னத்தை கொடுத்திருக்கிறார். இதுவும் திமுக அரசியல் ஆதிக்கத்தின் உள்குத்து வேலையா? என்று அவர்கள் புலம்புகின்றனர். எனவே இப்படிப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும், இன்னும் பல பேர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் உடனடியாக மாற்றம் செய்தால்தான் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை படி தேர்தல் நடத்த முடியும்.

மேலும்,இதேபோல், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றக்கூடிய அஸ்வின் இவரும் திமுக கட்சி ஏஜென்ட் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரையும் உடனடியாக மாற்றி ,இந்த மாவட்டத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய அதிகாரிகளை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், சுயாட்சி வேட்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆகியோரின் முக்கிய கோரிக்கை.