
தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போதும் இல்லாத ஒரு புதுவிதமான தேர்தல் களம் யார் முதல்வர்? என்ற எதிர்பார்ப்புடன், இந்த தேர்தல் களம் இருக்கிறது.

இருப்பினும் ,இப்படிப்பட்ட ஒரு சிக்கலான, நெருக்கடியான தேர்தல் களத்தில் ,வாக்களிக்க பெண்கள் தான் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க ஆதங்கத்தை மற்றும் ஆர்வத்தை விஜயின் கூட்டத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த வேகமும், ஆதங்கமும், எப்படி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது? ஒரு பக்கம் பெண்கள் உண்மையிலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .அது கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளாக இருக்கட்டும், பள்ளியில் படிக்கின்ற மாணவிகளாக இருக்கட்டும் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது உண்மையிலே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இது தவிர, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை என்று திமுக ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தது. அந்த ஆயிரம் ரூபாயும் இப்போது இந்த தேர்தல் களத்தில் காணாமல் போய்விட்டது. ஏனென்றால், இவர்கள் ஆயிரம் ரூபாய் என்றால், எடப்பாடி 2000 ,தவெக விஜய் 2500 ,இப்படி ரேட் ஏறிவிட்டது. அது மட்டுமல்ல,
இவர்கள் ஒரு ரூபாய் இலவசம் என்றால், அவர்கள் பத்து ரூபாய் இலவசம் என்கிறார்கள். இப்படி போட்டி போட்டு, இது ஒரு பக்கம் நடந்து விட்டது. அடுத்தது, இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? ஏதோ ஒரு காரணம் இல்லாமல், மக்கள் இந்த மாற்றத்தை விரும்ப மாட்டார்கள்.
அதுதான் திமுக, அதிமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியல். இந்த வெறுப்பு அரசியல் எப்படி எல்லாம் நடக்கிறது? விஜய் சொல்வது போல் ஊழல் !மலை, மண், ஆறு, குளங்களை, ஏரிகளை, விட்டு வைப்பதில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது.
இவையெல்லாம் மக்கள் வாழ்வாதாரத்திற்கான இயற்கை வளங்களை பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது பற்றி அதிமுக ,திமுக எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அதேபோல் டாஸ்மாக் கடைகளால், இன்று பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலே பெண்கள் விதவையாகிறார்கள். மஞ்சள் காமாலை, கிட்னி பெயிலியர் போன்ற பல நோய்கள் சிறிய வயதிலேயே, போதைக்கு அடிமையானவர்கள் இறந்து விடுகிறார்கள். இருந்தும் விட்டார்கள்.

மேலும்,இவர்களுடைய ஊழலை எத்தனை கோடி என்று பட்டியல் போட்டால், தலை தான் சுத்தும். அந்த புள்ளி விவரங்கள் கூட, சரியான தரவுகளை அதிகாரிகள் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால், என்ன தான் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டால் கூட, தற்போது அதிகாரிகள் அது பற்றி உண்மைகளை சரியான தரவுகள் கொடுப்பதில்லை. இது தவிர,
திமுக ஆட்சியில் செய்த மிகப்பெரிய ஒரு தவறு என்ன என்றால், நாம் வணங்கக்கூடிய தெய்வத்திற்கே துரோகம் செய்திருக்கிறார்கள். கோயில் பணத்தை கணக்கெழுதி, அந்த கணக்கு ஆடிட் செய்வதற்கு கூட அனுமதிக்காமல், இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்து வருகிறார்களாம்.

அப்படி என்றால்! எவ்வளவு இவர்கள் இந்து அறநிலையத் துறையில் ஊழல் செய்திருப்பார்கள்? கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அந்த நிலங்களை மீட்க நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் போராட வேண்டி இருக்கிறது . நீதிமன்ற தீர்ப்பை கூட கிடப்பில் போட்டு விடுகிறார்கள். நீதிமன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு தடை இல்லை என்று உத்தரவு நீதிபதி கொடுத்தும் கூட அதை இன்று வரை திமுக மதிக்கவில்லை.

மேலும் ,அரசு புறம்போக்கு நிலங்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பட்டா போட்டு ஞ. அதில் எவ்வளவு ?என்னென்ன குளறுபடிகள் நடந்திருக்கிறது? என்பது ஆட்சி மாறினால் தான் தெரியவரும்.

மேலும்,திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதைய ஆர்டிஓ ரவிச்சந்திரன் தான் இந்த வேலையை செய்துள்ளார். இவருடைய ஊழல் ஆட்சி மாறினால் தான் தெரியும்.தவிர, இவர் எந்த அளவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில், திமுக கட்சியினருக்கும் ,அவர்கள் வேண்டியவர்களுக்கும் ,இவர் எப்படி பட்ட போட்டு கொடுத்திருக்கிறார்? இதிலும் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
மேலும்,சொந்த நிலத்திற்கு பட்டா வாங்குவது என்றால், எவ்வளவு பேர் அதை வாங்க முடியாமல் இவர்கள் அலைகழித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஆனால், அரசு புறம்போக்கு நிலம், வீட்டுமனை பட்டா என்ற பெயரில் திமுக ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.

இதைவிட ஒரு கொடுமை, அமைச்சர்கள் சேகர்பாபு ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் மூர்த்தி ஒரு பக்கம் ,இவர்களெல்லாம் அதிகாரம் இருக்கிறது என்று அரசு நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது எல்லாம் இப்போது அறப்போர் இயக்கம் நீதிமன்ற வழக்கில் கொண்டு வந்து சேர்த்து விட்டது.
இப்படி எதைத் தொட்டாலும், திமுக ஆட்சியில் ,ஊழல் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள், இது அத்தனையும் நியாயப்படுத்துகின்ற தொலைக்காட்சி, பத்திரிகைகள் ,இதையெல்லாம் தூக்கி எறிந்து ,மக்கள் விஜய்க்கு ஆதரவளிக்கிறார்கள் என்றால் !இந்த மாற்றத்தின் அரசியல் ?எந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை ,வேதனையை ,இந்த ஆட்சியாளர்களால் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்? அதுதான் விஜயின் அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் .
இது தவிர, விஜயின் பேச்சில் ஒரு வெளிப்படையான உத்தரவாதம் சத்தியம் மக்களுக்கு கொடுப்பது அந்த பேச்சு மக்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாக்கி உள்ளது. இதுதான் அரசியல் மாற்றத்தின் முக்கிய காரணம்.