
தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தின் செய்தியாளர்கள் , சித்தூரில், ஆந்திரா ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டியை படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நாட்டில் செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும்,தாக்கப்படுவது, ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் ,அரசியல் கட்சிகள் போர்வையில்,ஊடுருவியுள்ளதா?

மேலும்,அரசியல் கட்சிகளில் தகுதியற்றவர்களுக்கு எல்லாம் பொறுப்பும், பதவியும் கொடுத்து விடுகிறார்கள். அது சமூக விரோத கும்பலாக இருந்தாலும், அவர்களுக்கும் பொறுப்பும், பதவியும் கொடுப்பது, மக்கள் அப்படிப்பட்ட அரசியல் கட்சியினரை எக்காலத்திலும் ,அவர்களுக்குரிய மரியாதையும், தகுதியும் கொடுக்கக் கூடாது. அது மக்களுக்கு ஆபத்து. அதேபோல் பத்திரிகைகளும், செய்தியாளர்களுக்கும் ஆபத்து.

அதன் விளைவு இன்று பத்திரிகை நிருபர்கள் பத்திரிகையாளர்கள் சமூக பாதுகாப்பு இல்லாமல் இந்த அரசியல் கட்சி சமூக விரோத கும்பலால் தாக்கப்படுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறு ,இன்று, இவர்களால்,நாட்டில் எத்தனையோ பத்திரிகைகள் , தொலைக்காட்சிகள், மூலம் இவர்கள் யார்? என்று மக்களுக்கு அறிமுகமாகிறார்கள். விலாசம் இல்லாதவர்களை எல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள்,
ஆனால்,அதில் பணியாற்றக் கூடிய நிருபர்கள் ,அரசியல் கட்சியினரால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும், தொடர்கதையாக இருந்து வருகிறது. இதில் ஜனநாயகத்தின் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
மேலும், அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய அரசியல் கிரிமினல்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசியல் கட்சிகளை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

இவர்களால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை.அதனால்தான் மக்கள் அதிகாரம் எந்த அரசியல் கட்சியும்,யாரையும் விளம்பரப்படுத்தாது பாராட்டாதது. அதற்காக அரசியல் கட்சியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று சொல்லிவிட முடியாது.
நல்லவர்களும் இருக்கிறார்கள், கிரிமினல்களும், இருக்கிறார்கள். அடியாட்களும் ,இருக்கிறார்கள். தற்போது அரசியல் கட்சிகளில் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்கள் குறைந்து அவர்கள் முன்னேற்றத்திற்காகத்தான் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் எதற்கு அரசியல் கட்சிக்கு வந்திருக்கிறோம் என்று கூட அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். அதனால் தான்,
செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்கள் ,அந்த பத்திரிக்கையில், அவர்கள் பணியாற்றுபவர்கள் தான். அது பெரிய பத்திரிக்கையாக இருந்தாலும், சிறிய பத்திரிக்கையாக இருந்தாலும், அவர்களை தாக்குவது தவறு.
மேலும்,பொய்யான செய்திகள் போட்டால், நீங்கள் நேரடியாக அந்த பத்திரிகை முதலாளிகளுக்கோ, அல்லது நிர்வாகிகளுக்கோ கூட பாதிக்கப்பட்டவர்கள் கடிதம் எழுதலாம்.
ஆனால், கிரிமினல்கள் உயிரையல்லவா? எடுக்கிறார்கள். ரவுடிகள், வெத்து வெட்டுகள், இவர்களுக்கு எல்லாம் அரசியல் கட்சிகளில் பொறுப்புகளை கொடுத்து, அதற்கு அர்த்தம் தெரியாமல், செய்தியாளர்களை அடிப்பது, அவர்களை வெட்டுவது, இது எல்லாம் அரசியலா? இல்லை அடியாள் வேலையா?
மேலும்,இவர்கள் அனைவரும்,சாதாரண குடும்பத்தில், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களை அடிப்பதால், அல்லது வெட்டுவதால், அவர்கள் குடும்பம் தான் பாதிக்கப்படுகிறது அந்த குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?
தவிர,அவர்களுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி, வேலை வாய்ப்பை போன்றவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். அவர்கள் எந்த கட்சியில் பணியாற்றினாலும் ,அவர்களை உடனடியாக அந்தக் கட்சி பொறுப்பில் இருந்தோ, அந்த கட்சியிலிருந்து அவர்களை நீக்கம் செய்ய வேண்டும் .
மேலும்,அவர்களை எந்த அரசியல் கட்சியும், மீண்டும் அவர்களை கட்சியில் சேர்த்து, அவர்களை பொறுப்பில் அமர்த்த கூடாது என்ற ஒரு சட்டம் உடனடியாக நாட்டில் கொண்டு வர வேண்டும். மேலும், அரசியல் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதுவே, ஜனநாயகத்தின் ஒரு துணை அழிக்கும் போது, சட்டம் அவர்களை பாதுகாக்கிறதா?

அதனால், மத்திய அரசு உடனடியாக செய்தியாளர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு ,பத்திரிகைகளுக்கு ,பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மேலும், இந்த சம்பவம் தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்த, ஆந்திரா ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ,பிரஜா சக்தி என்ற ஒரு பத்திரிகை செய்தியாளரும் கடுமையாக தாக்கப்பட்டு ,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பத்திரிகை சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து , வேலூர் மாவட்ட பத்திரிகையின் செய்தியாளர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆந்திரா அரசு, உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும்,

அரசாங்கத்தின் சலுகைகள், பாதுகாப்புகள், வழங்கப்பட வேண்டும் என்பன குறித்து நாடு முழுவதும், இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக இதுகுறித்து இந்திய ஜனாதிபதி திரௌபதி மூர்மு அவர்களின் கவனத்திற்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் கவனத்திற்கும் ,எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாக பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை.
மேலும், இந்த கண்டனத்தில் டாக்டர். ராஜ்பாபு (நியூஸ் நேசன் 81 டி.வி.), ஏ.கே. டி.வி, பாரத தூண்கள், மக்கள் கருத்து நாளிதழ், தினகலர் நாளிதழ், மக்கள் குத்து நாளிதழ், மக்கள் அதிகாரம், முஜிப் ரகுமான் (தேசபக்தி, காஞ்சித் தலைவன் நாளிதழ்), முருகானந்த வாரியார் (சட்டக்களம் நாளிதழ்), எழிலரசன் (மக்கள் வெளிச்சம் நாளிதழ்), பிரபு (PTI), உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.