ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும்,தேச விரோத சக்திகளுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதால்!தமிழக வெற்றி கழகம், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, இது எல்லாம் தேச விரோத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு கூட்டணியை மறு பரிசீலனை செய்வது நல்லது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ,தேச விரத சக்திகள் உடன் கூட்டணி வைப்பதும், இரண்டும் ஒன்றுதான். மேலும்,

அதனுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான், டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் உளவுத்துறை ரிப்போர்ட் . இதில் மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் அந்நிய சக்திகள் இன் கைக்கூலிகள் உள்ளே வந்துள்ளது.

அதை ஆதாரத்துடன் உளவுத்துறை ரிப்போர்ட் ,மத்திய அரசிடம் எடுத்து சமர்ப்பித்துள்ளது. மேலும், மாணவர்களின் போராட்டம் என்ற பெயரில் அங்கேயும் ஜாதி அரசியல் உள்ளே வருகிறது. இதையெல்லாம் நினைக்கும் போது, நாட்டில் அரசியல் எவ்வளவு கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை.

இந்தப் போராட்டம் வெற்றி என்று எதிர் கட்சியினர் பேசினாலும், இது அந்த மாணவர்களின் போராட்டம் வெற்றி அல்ல ,இந்திய மக்களின் வெற்றி! தேச விரோத சக்திகள் இவர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

அது இனி உளவுத்துறை வெளியிடும் தகவல்கள் நடவடிக்கைக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு என்ன ?என்று விரைவில் மக்களுக்கு தெரிய வரும்.

மேலும்,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது மந்திரிகள் வினாத்தாளை தயாரிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் தான் பொறுப்பு என்று அரசியல் கட்சிகள் பேசுவார்கள். உண்மை அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள்.

இந்தத் தவறு வெளிநாடுகளில் வேலை பார்க்கக் கூடிய மருத்துவ வல்லுநர்கள் மற்றும் இந்த கோச்சிங் சென்டர்களில் இருக்கக்கூடியவர்கள் ,இவர்கள் செய்த தவறுதான் ,இப்போது இவ்வளவு பெரிய விஷயம் லீக் ஆகி இருக்கிறது.

மேலும்,நான் கேள்விப்பட்ட வரை,கோச்சிங் சென்டர்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது, இவர்கள் என்னென்ன வினாகள், கொடுத்தார்களோ ,அதை மாணவர்களிடம் இந்த கேள்விகள் வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததாக தகவல். அது அப்படியே வந்துவிட்டது.

இதுதான் இப்ப பிரச்சனைக்கு எவ்வளவு பெரிய முக்கிய காரணம் என்கிறார்கள். தவறு நடந்திருப்பது உண்மை மாணவர்கள் போராட்டம் நடத்துவதும் அவசியம் .ஆனால், அதில் எப்படி அந்நிய சக்திகள் உள்ளே வந்தது இதுதான் முக்கிய கேள்வி?

எனவே,இதை தமிழக முதல்வர் விஜய் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனை இது .

இந்தப் பிரச்சனையில் மறைமுகமாக ராகுல் காந்தி ஈடுபட்டிருக்கிறார் என்பது உளவுத்துறை ரிப்போர்ட். இதில், முக்கிய பிரச்சினையே என்னவென்றால் ,மத்திய அரசு மதமாற்றங்களை செய்யக்கூடிய கூட்டத்திற்கு வெளிநாட்டுக்கு இருந்து வரக்கூடிய பணத்தை முடக்க சட்டம் கொண்டு வருவதாக இருந்தது.

இதைத் தெரிந்து தடுக்க இதை கையாண்டு இருக்கிறார்கள். இன்னும் பல தேச விரோத சக்திகள் உடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி! இந்த உண்மை கூட பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மறைக்கிறது. மேலும், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இனி,மக்கள் வாக்களிப்பது ,அவர்கள் தலையிலே மண்ணை கொட்டிக் கொள்வதற்கு சமம். இந்துக்கள் விழித்துக் கொள்வார்களா?

மேலும், தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றக் கூடாது. மக்கள் பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை என்று பார்த்து ஏமாறாமல், உண்மையை சொல்லும் தகுதியான பத்திரிக்கை எது? என்று பாருங்கள். அதுதான் பத்திரிகை.

மேலும்,பிஜேபி எந்த காலத்திலும் தேசவிரோத சக்திகளுக்கு இடம் கொடுக்காது. இந்தியாவின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும். ஆனால், ராகுல் காந்தியும், இந்த நாட்டின் தேச விரோத சக்திகளும், இந்த நாட்டின் வளர்ச்சியும் ,பொருளாதார முன்னேற்றமும், பார்த்து பொறாமை படக்கூடிய அமெரிக்கா, துருக்கி ,பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற விரோதி நாடுகளுடன் அதிக நட்புறவில் இருந்து கொண்டு, இந்தியாவை கூறுபோட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ,இப்படிப்பட்ட தேச விரோத சக்திகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தன்னை தியாகியாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பேசுவது அரசியல், அரசியல் தெரியாத முட்டாள்களிடம் வைத்துக் கொள்ள வேண்டும் . மேலும்,

அரசியல் என்னவென்று தெரியாத பத்திரிகைகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும் .அந்த தொலைக்காட்சிகளிடம், கொடுப்பதை அவர்கள் பேட்டியாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். நாட்டின் தேச விரோத சக்திகளுக்கும், மக்கள் விரோத சக்திகளுக்கும், மக்கள் அதிகாரம் ஒரு காலம் இடம் கொடுக்காது .அதை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியது எங்களுடைய முக்கிய கடமை.

மேலும்,அதே போல் தான், தமிழ்நாட்டில் இன்று ஸ்டாலின் ,எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா, சீமான் போன்ற எதிர்க்கட்சி கூட்டங்கள் ,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாடம் எடுப்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாடம் உங்களுக்கு தான் எடுக்க வேண்டும்.

ஏனென்றால், அரசியல் என்பது நீங்கள் வியாபாரமாகவும், கொள்ளையாகவும் பார்த்த ஒரு அரசியலை, விஜய் மக்களின் சர்வீஸ் ஆக இன்று கொண்டு வந்திருக்கிறார். எது உண்மையான அரசியல்? நீ ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு,கொள்ளையடித்துக் கொண்டு போவது அது அரசியலா? மக்களுக்கு சர்வீஸ் செய்வது இது அரசியலா?

அதனால், உங்களை எல்லாம் நியாயப்படுத்த கூடிய பத்திரிகைகள், பல தொலைக்காட்சிகள், தமிழ்நாட்டில் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்க பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .

மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதுதான் பத்திரிக்கையின் நோக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய அவர்களை முட்டாளாக்கும் நோக்கத்திற்கு பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்ளும், எவ்வளவு பெரிய பத்திரிக்கையாக இருந்தாலும், அது பத்திரிக்கையா? என்று சிந்தியுங்கள் .

அதனால், மக்கள் உண்மையைப் படியுங்கள். எது உண்மையான அரசியல் ?என்பதை சிந்தித்து செயல்படுங்கள். நாட்டில் ஏமாற்றுவதற்கு இன்று அரசியல் மட்டுமல்ல ,நமது வாழ்க்கையிலும் தடுக்கி விழுந்தால், ஏமாற்றுவதற்கு பல கூட்டங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

அது போல தான் இன்றைய அரசியல்! மற்றும் அரசியல் கட்சிகள் ,மக்களை ஏமாற்றுவது எப்படி ?என்று பேச்சிலே கற்றுக் கொண்டு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தவிர விஜய் சினிமாவில் நடித்தார் .ஆனால், அரசியலில் நடிக்கவில்லை .இவர்கள் சினிமாவில் நடிக்கவில்லை .ஆனால் அரசியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுதான் இவர்களுக்கும் ,இந்த அரசியல் கட்சிகளுக்கும், உள்ள வேறுபாடு!

எங்கே எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை உண்மையை சொல்வதற்கு தான் பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் ஆனால் பொய்யை நியாயப்படுத்துவதற்கும் ஊழல்களை நியாயப்படுத்துவதற்கும் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் தேவையில்லை இந்த உண்மை மத்திய மாநில அரசின் செய்தி துறை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மக்களுக்கு தூக்கி வைப்பது போல பேசிக்கொண்டு மீண்டும் நல்லவர்களாக தியாகிகளாக பேசுகின்ற அரசியலைப் பார்த்து மக்கள் விழித்துக் கொள்ள வேண்டுமே ஒழிய ஏமாந்து விடக் கூடாது என்பதுதான் உங்களுக்கு மீண்டும் இந்த செய்தி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *