எம்ஜிஆர் பிறந்த நாள் ( 109) ஆன இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2000 ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தவிர, நகர பஸ்கலில் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,

சேலத்தில் பொங்கல் விழா பண்டிகை பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய விழா நிகழ்ச்சிக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? என்ற கேள்விக்கு பட்டும், படாமல், கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும்.
இது தங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை தான் செய்ய முடியும் என்பதை வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல, ஓட்டுக்காக திமுக வாக்குறுதியை கொடுத்துவிட்டு, இன்று செயல்படுத்தாமல் விட்டதால், தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், இப்படி பல்வேறு அரசுத்துறை சார்ந்தவர்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக அரசு,இதை வெளிப்படையாகவே, மக்களிடம் சொல்லலாம் .அரசு ஊழியர்களிடம் சொல்லலாம். தமிழ்நாட்டின் மொத்த மாத வருமானம் இவ்வளவு, இதில் வட்டி கட்டியது இவ்வளவு, அரசு ஊழியர்கள் சம்பளம் இவ்வளவு, இது எல்லாம் போக, மக்களுக்கான திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகை, இவ்வளவு,இப்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு தான், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பற்றி அரசாங்கம் பரிசளிக்க முடியும்.

ஆனால், தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி ஓட்டுக்காக, கொடுக்கப்பட்டு, இப்போது அதைக் கேட்டு அரசு ஊழியர்கள் போராடும் போது, அது,உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்று அவர்களுடைய பணத்தையே பிடுங்கி, ஓய்வு பெறும் போது அதையே முழுமையாக அவர்களுக்கு கொடுக்காமல், அதிலே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்றால், இதை அறிவித்த போதே மக்கள் அதிகாரம் இணையதளம் பத்திரிக்கையில் முதல் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்பட்டது.மேலும்,

இது அரசு ஊழியர்களை அதாவது படித்த சமூகத்தை ஏமாற்றக் கூடிய வேலை என்று செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும், அதேபோல்,எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் , இருக்கிறது. அதில்,சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் எத்தனை? என்று ஆய்வு செய்து, அதற்கான சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.
மேலும்,இந்த கோரிக்கை தற்போதைய திமுக ஆட்சியிலும், இந்த பத்திரிகைகள் வைத்து வருகிறார்கள். இதை இவர்கள் செய்வார்களா? செய்ய மாட்டார்களா? என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும்,கூடுதல் இயக்குனர் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. விரைவில் இதற்கான ஜீ.வோ. (G O)வரப்போகிறது என்றுதான் தெரிவித்திருக்கிறார்.

தவிர, ஆட்சியின் ,இந்த கடைசி காலகட்டத்திலாவது, இந்த பத்திரிகைகளுக்கு செய்வார்களா? என்பது கடவுளுக்கு தான் தெரியும். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், இந்த சலுகை, விளம்பரங்கள் அவசியம் தரமான பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கிறோம்.மேலும்,

இருப்பதிலேயே அரசியலுக்கு அடுத்தபடியாக போலிகள் பத்திரிகை துறையில் தான் அதிகரித்திருக்கிறது. இதையெல்லாம் சரி செய்து ,நாட்டு மக்களுக்கும், சமூகத்திற்கும் பயன் அளிக்கக்கூடிய பத்திரிகை மற்றும் செய்திகளின் தரத்தை நிர்ணயம் செய்து, அதற்கு சலுகை, விளம்பரங்கள் தர வேண்டும்.
தவிர ,பத்திரிகைகளின் சர்குலேஷன், மிகவும் குறைந்து விட்டதால், அதை செய்தித்துறை அரசு விளம்பரங்களை கொடுத்து, அந்தந்த பத்திரிகைகளை தூக்கி, நிறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் திமுக ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதும் ,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் தான், ஆனால்,

இன்று உண்மையை மக்களிடம் கொண்டு செல்வது சமூக நலன் பத்திரிகைகள், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல பத்திரிகை, தொலைக்காட்சிகள் அரசியல் கட்சி சார்ந்து செயல்படுகிறது. அதற்கு அவரவர்கள் கட்சியிலிருந்து நிதி ஒதுக்கி, அந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நடத்துங்கள் .யாருமே கேட்க போவதில்லை.இன்று உண்மையை மக்களிடம் கொண்டு செல்வது சமூக நலன் பத்திரிகைகள், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல பத்திரிகை, தொலைக்காட்சிகள் அரசியல் கட்சி சார்ந்து செயல்படுகிறது. அதற்கு அவரவர்கள் கட்சியிலிருந்து நிதி ஒதுக்கி, அந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நடத்துங்கள் .யாருமே கேட்க போவதில்லை.இன்று உண்மையை மக்களிடம் கொண்டு செல்வது சமூக நலன் பத்திரிகைகள், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல பத்திரிகை, தொலைக்காட்சிகள் அரசியல் கட்சி சார்ந்து செயல்படுகிறது. அதற்கு அவரவர்கள் கட்சியிலிருந்து நிதி ஒதுக்கி, அந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நடத்துங்கள் .யாருமே கேட்க போவதில்லை.

ஆனால், மக்களுடைய வரிப்பணத்தை தான், இதற்காக கோடிக்கணக்கில் செய்தித்துறையில், வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அரசின் தவறான நிர்வாகத்தின் அடையாளம். அதுமட்டுமல்ல, அதிகாரத்தின் துஷ்பிரயோகம்.மேலும், பத்திரிக்கை துறைக்கு, அரசின் கொள்கை முடிவு, மற்றும் சர்குலேஷன் சட்டம் இது எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் அல்லவா? செயல்படுகிறது. இதைப் பற்றி ஏன் அரசு சிந்திக்கவில்லை?
எனவே, பத்திரிக்கை துறையில், நாடு மற்றும் சமூகம் இதற்கான முக்கிய செய்திகள் எது? என்பதுதான் முக்கியமானது. இங்கே, நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும், நடந்த நிகழ்வுகளுக்கும், செய்திகளுக்கும் அர்த்தம் தெரியாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறை இருந்து வருகிறது. மக்களுக்கு இந்த உண்மைகள் புரியாது.

ஆனால் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு, இது தெரியாது. அதனால், செய்தித்துறை உயர்மட்ட அளவில், பத்திரிகைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து, அந்தக் குழுவில் நீதிபதிகள், பத்திரிகை ஆய்வாளர்கள் இடம்பெற்ற குழுவாக அது இருக்க வேண்டும். அந்த குழு பத்திரிக்கையின் தரத்தை தீர்மானிக்க வேண்டும்.

ஆனால், இங்கே கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சியில் பத்திரிக்கையில் பணியாற்றி வருபவர்கள், கட்சி பத்திரிகையில் பணியாற்றி வருபவர்கள், பத்திரிகையின் தரத்தை நிர்ணயம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? மேலும்,பத்திரிக்கை என்பது லேபிள் அல்ல,

நீங்கள் லேபிளை வைத்து பத்திரிக்கையின் தரத்தை தீர்மானிக்க கூடாது. அது மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெறுகிறது? அது சமூக நலனா? வியாபாரமா? துறை சார்ந்த பத்திரிகைகளா? இப்படி பகுப்பாய்வு செய்து, அந்த பத்திரிகைகளுக்கு தகுதி, தரம், நிர்ணயம் செய்து, சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.

மேலும்,இதையேதான் மத்திய அரசும் தற்போது பத்திரிக்கை துறையில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இதில் அந்தந்த பத்திரிகையின் இணையதளத்தை படிக்கக் கூடிய வாசகர்கள், பார்வையாளர்கள், சப்ஸ்கிரைப்பர்ஸ், இதையும் கணக்கில், எடுத்து பத்திரிகையின் தர ஆய்வுக்கு உட் படுத்த வேண்டும்.
அப்போதுதான் பத்திரிக்கை துறை, பத்திரிக்கை துறையாக இருக்கும். தவிர,போலிகள் பத்திரிக்கை துறையில் போட்டி போட முடியாது. இப்போது அதுவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அது சமூகத்தின் தீமைக்கு பக்கபலமாக இருந்து வருகிறது என்பதை பத்திரிகை உலகம் புரிந்து கொள்ளுமா? மேலும்,
மத்திய, மாநில அரசின் செய்தித்துறை,/ இந்த உண்மையை புரிந்து செயல்படுமா? சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.