இன்றைய அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்கள் வரை நீட் தேர்வு வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் நடைமுறை உண்மைகள் என்னவென்று தெரியுமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நீட் தேர்வு பற்றி இவ்வளவு பேசுகின்ற திரை துறையினர் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏன் ? நீங்கள் உங்கள் உடலுக்கும் அல்லது உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்படும்போது, அரசு மருத்துவமனைகளில் ஏன்? மருத்துவம் செய்து கொள்வதில்லை? அங்கே அனுபவமுள்ள டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்.

மேலும், அங்கே உயர்நிலை மருத்துவம் கிடைக்காது என்று நினைத்து தான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். அது மட்டுமா? உண்மை நிலை என்ன தெரியுமா? இன்று எம்.பி.பி.எஸ் டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வரக்கூடிய மருத்துவர்களுக்கு என்ன திறமை ?தகுதியுடன் வருகிறார்கள்? என்பதாவது தெரியுமா?

மேலும்,இன்றைய மருத்துவக் கல்வியும், மருத்துவமும் வியாபாரமயமாக்கப் பட்டுள்ளது. நடுத்தர மக்கள் கூட இன்று அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பார்த்துக் கொள்வதற்கு பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அரசு மருத்துவமனையின் மருத்துவ தரம் உள்ளது. எந்த டாக்டர்கள் ஒரு நோயாளியை காப்பாற்ற வேண்டும் என்ற முழு மனதோடு வேலை செய்கிறார்கள்?

எனக்குத் தெரிந்த மருத்துவத்தை கொடுக்கிறேன். பிழைத்தால் பிழைக்கட்டும், பிழைக்காவிட்டால் போகட்டும். இது தவிர, இப்போது வருகின்ற நோய்கள் எல்லாம் புதுப்புது நோய்களாக வருகிறது. அவையெல்லாம் இவர்களுக்கு மருத்துவத்துறையில் ஒரு புதிய சவால்களாகவே இருக்கிறது. இன்றைய இளம் மருத்துவர்கள் எந்த அளவுக்கு மருத்துவத்தை பயின்று வருகிறார்கள் ?என்பது அவர்களுக்கு குருடன் யானையை தடவியது போல தான் இருக்கிறார்கள்.

மேலும்,அவர்களுக்கு ஒரு நோய் என்றாலே ,அவர்கள் எந்த மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது ?என்று தேர்வு செய்து அங்கே போய் மருத்துவர் பார்த்துக் கொள்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.

ஆனால்,இதைப் பற்றி எந்த பத்திரிகை தொலைக்காட்சியாவது மக்களிடம் இந்த உண்மை நிலையை சொல்லி இருக்கிறார்களா? அதுமட்டுமல்ல, மருத்துவம் ,மருத்துவக் கல்வி, மாத்திரை மருந்துகள் ,எல்லாமே வியாபாரம் மயமாக்கப் பட்டுள்ளது.

இவையெல்லாம் ஒரு மாபியா சென்டர்களாக அதாவது பணம், பணம், என்று எந்தெந்த வழிகளில் மக்களிடமிருந்து சுரண்ட முடியுமோ !அந்த நிலைக்கு மருத்துவம் சென்று உள்ளது. ஆனால், இங்கே திருமாவளவன், பா .ரஞ்சித் ,சீமான், இவர்களெல்லாம் ஜாதியை பிடித்து தூங்கிக் கொண்டு, என்னமோ ஜாதி தான் வந்து நோயை தீர்ப்பது போல ஜாதியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எல்லாம் ஜாதி அரசியல் செய்யக்கூடிய இடம் இது இல்லை. மேலும்,நீங்கள் எந்த ஜாதி ,ஜாதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ அந்த ஜாதிக்கே இந்த மருத்துவம் போய் சேர்வதில்லை .அவர்கள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,நீங்கள் நீட் தேர்வு வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்ம ஜாதி பிள்ளைகள் மருத்துவ கனவு சிதைத்து விடுகிறார்கள். பைத்தியக்காரர்களே ,இங்கே படிக்காமல் ஒருவன் உயர்நிலை மருத்துவத்தை ,எந்த ஒரு சமூகத்திற்கும் கொடுக்க முடியாது.

அவனுடைய கல்வித் தரம், சிறப்பான முறையில், மருத்துவம் பயின்று வெளியில் வந்தால் தான் ,அவனால் சமூகத்திற்கு தரமான மருத்துவத்தை ஒரு டாக்டரால் கொடுக்க முடியும். மேலும்,இப்போது ஒரு ஜுரம் அல்லது லூஸ் மோஷன் இது போன்ற ஒரு சிறிய நோய்களுக்கு கூட தனியார் மருத்துவர்களை அணுகும் போது ,அவர்கள் எழுதுகின்ற மாத்திரை மருந்துகளை பார்த்தால் 700 ,800க்கு எழுதி விடுகிறார்கள் ‌.

அதுமட்டுமல்ல ,நமக்கே பயமாக இருக்கிறது .இந்த மாத்திரைகள், மருந்துகள் ,எதற்காக எழுதி இருக்கிறீர்கள்? என்று அவர்களை கேள்வி கேட்கும் மனநிலைக்கு மக்களே இருக்கிறார்கள். இப்படி மருத்துவம் வியாபார மயமாகி இருக்கிறது .

ஆனால், இதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவனும், அரசியல் கட்சியினரும், திரை துறையினரும்,பேசத் தகுதி இல்லாமல், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *