இவிஎம் மெஷின் கொளத்தூரில் தோற்ற போது தான், அது வேலை செய்யவில்லையா? ஜெயித்தபோது வேலை செய்கிறதா?மக்களை பேசியே அதி மேதாவிகள் போல் முட்டாள் ஆக்குவதில் திமுகவுக்கு கைவந்த கலையா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக மற்றும் அதன் ஊடகங்கள், யூடியூப் ஊடக வாய்கள் ,அதிமேதாவிகள் போல் பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது . நீங்கள் இன்னும் அதிகமான பிராடு என்றுதான் மக்கள் உங்களை நினைக்கத் தோன்றும். மேலும் ,

நீங்கள் என்னதான் நாங்கள் யோக்கியன், எங்களை விட திறமைசாலிகள் இல்லை, நியாயமானவர்கள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது. இதை வைத்து அரசியல் செய்தால், நிச்சயம் மானங்கெட்டு, இன்னும் இருக்கிற கொஞ்சநஞ்சம் மரியாதையும் போய்விடும்.

கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இவிஎம் மற்றும் விவி பேட் கருவிகள் தொடர்பாக திமுக தரப்பில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் என்னவென்றால்?

கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச் சாவடிகளில் உள்ள EVM Machine மற்றும் VV பேட் இயந்திரங்களில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி அவற்றை பரிசோதிக்க திமுக ஸ்டாலின் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. எந்திரங்களின் front & back பகுதிகளில் போடப்பட வேண்டிய அரசு முத்திரைகள் முறையாக போடவில்லை .அதாவது சீல் போடவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் சோதனை செய்யப்பட்ட எந்திரங்களில் 30% எந்திரங்களில் சந்தேகங்கள் இருப்பதாகவும், இதனால் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று கூறி திமுக இச் சரிபார்ப்பு பணியை புறக்கணித்து நீதிமன்றம் நடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்னவென்றால் ,சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ,மாநகராட்சி ஆணையருமான ஜி எஸ் சமீரன் (DEO) திமுக ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்டது. சரிபார்ப்பில் ஏவியம் இயந்திரங்களில் வாக்குகள் மாறியதற்கோ அல்லது முறையீடுகள் நடைபெற்றதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும், தொழில்நுட்ப கோளாறு எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப சிக்கல் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது தேர்தல் விதிமுறைப்படி வேறு எந்திரத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முயன்ற போது திமுக முகவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

மேலும் , அனைத்து எந்திரங்களுக்கும் ,உரிய விதிமுறைகளின் படியே சீல் வைக்கப்பட்டுள்ளன .சீல் வைக்கப்பட்ட இடம் தொடர்பாக எழும் சந்தேகங்கள், எந்திரங்களை திறந்து சரி பார்க்கும்போது, தெளிவுபடுத்தப்படும். மேலும் , இந்த EVM மெஷின் தொடர்பாக பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட் நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் இரண்டு கட்டங்களாக அந்த மிஷின்களை அனைத்து சோதனைகளும், வெளிப்படையாகவே நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவோ அல்லது வாக்குகள் தப்பாக பரிவானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தி உள்ளது. இருப்பினும், மக்களை முட்டாளாக்க இவர்களுடைய ஊடகங்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தில் பேசக்கூடிய யூடிபர்களும், தேர்தல் ஆணையத்தின் மீதும், இவிஎம் மிஷின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பேசிக்கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

மேலும்,அது நடக்குமா? இந்த மெஷின்கள் கொளத்தூரில் மட்டும் குளறுபடியா? அல்லது இந்தியா முழுவதும் குளறுபடியா ?அல்லது தமிழ்நாடு முழுதும் குளறுபடியா? சரி அப்படியே கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏன் ?இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை திமுக முன்வைக்கவில்லை?இந்த கேள்விக்கு இவர்கள் பதில் சொல்ல தயாரா? தமிழக மக்கள் சிந்திப்பார்களா?மேலும்,

இதற்குப் பின்னால் அரசியல் இருக்குமா? அது ஒருவேளை போலியான பத்திரிகை பிம்பத்தில் இருந்து பேசி வரும் பிரகாஷ், அய்யநாதன், பொன்ராஜ், நக்கீரன் கோபால் இவர்கள் எல்லாம் தவெக எம் எல் ஏ க்களை பேரம் பேசிய விவகாரத்தில், ஈடுபட்டுள்ளார்கள், அதற்கான ஆதாரங்களை உளவுத்துறை சேகரித்து வருவதால்,என்ற தகவல் இருக்குமா? எங்கே கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் இப்படி ஒரு அரசியலை கிளப்பி விட்டார்களா? இல்லை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் விஜய் தோண்டுவதால், இப்படி ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்களா? உண்மை மறைக்க முடியுமா? அது வெளிவந்து தானே தீரும்.

கெட்டிக்காரன் பொய்களை எத்தனை நாளைக்கு தமிழக மக்கள் ஏமாறுவார்கள் ….?திமுகவுக்கு தெரிந்த அரசியல்! வேறு யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார்களா? இந்த அதிமேதாவிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *