கரூர் சி.பி.ஐ விசாரணையில், விஜய்யின் குற்றச்சாட்டுகள் திமுக அரசு மீதா…..?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜய் சிபிஐ விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 41 பேர் உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ள விஜய் அதற்கு திமுக அரசு தரப்பில் இருந்து என்ன பதில்கள்? மற்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து என்ன பதில்கள்? அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலைக்கு திமுக அரசு தரப்பட்டுள்ளது.

முக்கியமாக கரூர் மாவட்டத்தின் கலெக்டர் ,கரூர் மாவட்டத்தின் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் போன்ற பல அதிகாரிகள் ,அனைவரும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள்.

இது தவிர (போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட) உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அரசுத் துறை சார்ந்த மருத்துவ அதிகாரிகள் ,விசாரணை வலையத்திற்குள் வருவார்கள். இவர்களுடைய ரிப்போர்ட் என்ன சொல்கிறது? விஜய் மீது தவறா? அல்லது அவர்கள் மீது தவறா? அல்லது பொது மக்கள் மீது தவறா ?

யாருடைய தவறுகள் 41 பேர் உயிரிழப்புக்கும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததற்கும் காரணம் ?இதற்குள் ஒரு முக்கிய பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் அல்லவா ?அது என்ன? இது தவிர,

கரூர் மாவட்ட மந்திரி செந்தில் பாலாஜியும், இந்த சம்பவத்துக்குள் இணைக்கப்படுகிறார். அவருடைய பதில் என்னவாக இருக்கப் போகிறது? அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும்,

நம்முடைய நாட்டில், சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது? அதில் தப்பிக்க என்னென்ன வழிகள் இருக்கிறது? இதற்காக சட்ட வல்லுனர்கள் குழு திமுக வைத்திருக்கிறது. இதில் திமுக மட்டுமல்ல, அனைத்துக் அரசியல் கட்சிகளும், இந்த ஓட்டைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால்,சட்டம் இவர்களுக்கு கடுமையாக்கப் படாத வரை, ஊரில் உள்ள வெத்து விட்டு கட்சிக்காரர்கள் கூட ,அந்த ஓட்டையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் அரசாங்கமா? அல்லது விஜய்யா ? அல்லது விஜயை பார்க்க வந்த பொதுமக்களா? இதில் யார் குற்றவாளிகள்……? சிபிஐ எந்த கோணத்தில் விசாரணை நடத்தப் போகிறது? மேலும்,நீதிமன்றம் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதற்கான தீர்ப்பு கொடுக்கப் போகிறது என்பதெல்லாம் காலமே பதில்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *