
தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது, செய்தித் துறை அதிகாரிகள், முதல்வரின் பிரச்சாரத்திற்கு உடன் சென்று அரசு செய்தியாக வெளியிட்டுள்ளது . தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்.
தவிர, முதல்வரின் காருக்கு பின்னால் சென்று, செய்திகளை பத்திரிக்கைக்கு கொடுத்திருப்பதாக ஆதாரத்துடன் அதிமுகவின் வழக்கறிஞர் அணி செயலாளர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
மேலும்,செய்தித்துறையில் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதால், பல பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவிர,இவர்கள் அரசு அதிகாரிகளாக செயல்படாமல் , அந்த,அந்த பத்திரிகைகளின் ஏஜென்ட்கள் போலவும், எந்த ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சிக்கு தகுந்தார் போல் ,தங்களை மாற்றிக் கொள்வார்கள். கட்சி மாறிக் கொள்வது போல ,இவர்கள் எந்த ஆட்சி வந்தாலும் அதற்கேற்றவாறு மாறிக் கொள்வார்கள்.

மேலும்,இவர்களை அரசியல் அதிகாரி என்பதா? அல்லது அரசியல் கட்சியினர் என்பதா? என்று தெரியாமல், தான் சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,தனக்கு வேண்டிய பத்திரிக்கை என்றால், அதற்கு ஒரு விதிமுறை வைப்பார்கள், வேண்டாத பத்திரிகை என்றால், அதற்கு ஒரு விதிமுறை வைப்பார்கள் .சட்டத்தையே இவர்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, பத்திரிக்கை துறையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை தலைமைச் செயலகத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்தி தொடர்பு அலுவலர்கள் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

தகவல் உரிமை சட்டத்தில், எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு பதில் அளிக்க இயலாது, பதில் அளிக்க இயலாது. என்ற ஒரே வரியில் பதில் சொல்லி வடுவார்கள்.என்னமோ நாட்டின் ராணுவ ரகசியத்தை கேட்பது போல, இவர்கள் பதில் அளிக்க இயலாது என்று ஒரே வரியில் அனுப்பி விடுவார்கள்.
இப்போது வசமாக அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரையிடும் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தேர்தல் ஆணையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார்.

மேலும்,தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.தவிர, ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி என்பது புதிய அரசு வரும் வரை ஒரு nominal c.m. அவரால் எந்த திட்டத்தையும், எந்த அதிகாரத்தையோ, அரசு அதிகாரிகள் மீது,செலுத்த முடியாது.

அப்படி இருக்கும் போது, மேக வர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் முதலமைச்சர் வாகனத்திற்கு பின்னால், அரசு வாகனத்தில் செயல்பட்டது மற்றும் அந்த செய்திகளை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அனுப்பியது,அனைத்தும் சட்ட விரோதமானது.

மேலும்,தேர்தல் ஆணையம் , செய்தித் துறையின் செயல்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இது தவிர, இன்றும் இவர்கள் தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு ஒரு விதமாகவும், வேண்டாத பத்திரிகைகளுக்கு வேறு விதமாகவும், இல்லாத சட்டங்களை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் விதிமுறைகள் வந்த பிறகு இந்த நிலைமை என்றால் செய்தித் துறை இதற்கு முன் எப்படி நடந்திருப்பார்கள் என்பதை மக்களாகிய நீங்கள் தான் சிந்திக்க வேண்டும். மேலும்,
தகுதியான பத்திரிகைகளுக்கு கூட, இவர்கள் தேர்தல் சம்பந்தமான செய்திகள் சேகரிக்க, அரசின் அடையாள அட்டை கொடுக்க கூட மறுக்கிறார்கள்.

எனவே ,தேர்தல் ஆணையம் அவர்செய்தித் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் தேர்தல் ஆணையத்திற்கு வைக்கின்ற முக்கிய கோரிக்கை.